
ட்விட்டர் சர்வே - இன்ஷூரன்ஸ் கவரேஜ் எவ்வளவு இருக்க வேண்டும்?
நம் ஆண்டு வருமானத்தைப்போல நம் இன்ஷூரன்ஸ் கவரேஜ் எவ்வளவு இருக்க வேண்டும் என்கிற கேள்வியை நாணயம் ட்விட்டரில் (https://twitter.com/NaanayamVikatan) கேட்டோம். பலரும் நாம் கேள்விக்குப் பதில் சொன்னார்கள்.

44% பேர் நம் ஆண்டு வருமானத்தைப்போல நம் இன்ஷூரன்ஸ் கவரேஜ் ஆறு முதல் 10 மடங்கு இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். 23% பேர் 11 - 15 மடங்கு இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கின்றனர். 33% பேர் 16 - 20 மடங்கு இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கின்றனர்.

இந்த மூன்று பதில்களில் 44% பேர் சொன்னதை சரியான பதிலாக எடுத்துக்கொள்ளலாம். நம் ஆண்டு வருமானத்தைப் போல பத்து மடங்குக்குக் குறையாமல் நம் இன்ஷூரன்ஸ் கவரேஜ் இருக்க வேண்டும் என்பது சரியே. 11 முதல் 15 மடங்கு இருக்க வேண்டும் என 23% பேர் சொல்லியிருந்தாலும், அந்த அளவுக்கு இன்ஷூரன்ஸ் கவரேஜ் வைத்திருப்பதிலும் தவறில்லை. அதிக பிரீமியம் கட்டத் தயார் எனில், 16 முதல் 20 மடங்குக்கூட கவரேஜ் இருக்கும்படி இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கலாம். ஆனால், ஆண்டுக்கு ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் நம்மில் பலரும் ரூ.1 லட்சத்துக்கும், ரூ.2 லட்சத்துக்கும் கவரேஜ் இருக்கிற மாதிரியான பாலிசிகளை எடுத்து வைத்திருக்கிறோம். இதனால் குடும்பத்தின் எதிர்காலப் பாதுகாப்பு எந்த வகையிலும் உறுதியாகாது.

அதிக பிரிமீயத்தில் குறைந்த கவரேஜ் தருகிற டிரடிஷனல் பாலிசிகளை விட்டுவிட்டு, குறைந்த பிரிமீயத்தில் அதிக கவரேஜ் தருகிற டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுப்பது நம் குடும்ப உறுப்பினர்களுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய உதவியாக இருக்கும். உங்கள் ஆண்டு வருமானம் என்ன, உங்களிடம் இருக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசியின் கவரேஜ் எவ்வளவு என்கிற கேள்வியை இனியாவது உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
-ஏ.ஆர்.கே.