நடப்பு
தொடர்கள்
Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் - அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் - அக்ரி கமாடிட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் - அக்ரி கமாடிட்டி

தி.ரா.அருள்ராஜன், கமாடிட்டி சந்தை நிபுணர், www.ectra.in

தங்கம் மினி

தங்கம், கடந்த (2017) செப்டம்பர் மாதத்திலிருந்து இறங்குமுகமாகவே உள்ளது. விலை 30470 என்ற உச்சத்தைத் தொட்ட பிறகு, ஒரு தொடர் இறக்கத்தில் உள்ளது.  

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் - அக்ரி கமாடிட்டி

சென்ற இதழில் சொன்னது... “தற்போதைய புல்பேக் ரேலி, மேலே நகரும்போது முதல் கட்டமாக  28620-ல் சற்றே சிரமப்படலாம்.  அந்த எல்லையைத் தாண்டி ஏறும்போது அடுத்த முக்கிய எல்லைகள் 28830 மற்றும் 29000 ஆகும். இது ஒரு வலிமையான தடைநிலை ஆகும். இது உடைக்கப்படாதவரை, விலை கீழ்நோக்கி திரும்பி இறக்கம் தொடரலாம்.  கீழே 28270 என்ற தற்போதைய ஆதரவை உடைத்து இறங்கினால், வலிமையான இறக்கம் வரலாம்.” 

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் - அக்ரி கமாடிட்டி



நாம் குறிப்பிட்டது போலவே கடந்த திங்களன்று, புல்பேக் ரேலி தொடர்ந்தது.  தடையை உடைத்து ஏறி 28683 என்ற அதிகபட்சப் புள்ளியைத் தொட்ட பிறகு, தொடர்ந்து ஏற முடியாமல் திணற ஆரம்பித்தது.

அடுத்தடுத்த நாள்களில், இந்த உச்சத்தைத் தாண்ட முயன்று தாண்ட முடியாமல், வலிமையாகத் தடுக்கப்பட்டு வருகிறது.  அதேசமயம், கீழேயும் இறங்காமல் ஒரு பக்கவாட்டு நகர்வில் உள்ளது.

இனி என்ன நடக்கலாம்? ஒரு புல்பேக் ரேலி நடக்குபோது, அது முடிவுக்கு வந்து, பின் இறக்கம் தொடரலாம்.  அல்லது, அந்த ஏற்றத்தை நிலைநிறுத்தி, அடுத்தகட்ட ஏற்றத்திற்குத் தயாராகலாம். தங்கம் தற்போது ஒரு புல்பேக் ரேலிக்குப் பிறகு, ஒரு பக்கவாட்டு நகர்வில் உள்ளது.  

மேலே 28700 என்ற எல்லையில் வலுவாகத் தடுக்கப்பட்டுள்ளது.  கீழே 28500 என்ற எல்லை வலுவான ஆதரவாக உள்ளது. எந்தப் பக்கம் உடைக்கிறதோ அந்தபக்கம் வலிமையான நகர்வு உண்டு.

வெள்ளி மினி

வெள்ளி,  ஒரு புல்பேக் ரேலியில் தொடர்ந்து ஏறி உள்ளது. தங்கத்தின் நகர்வைப் போலவே ஒரு ஏற்றத்திற்குப் பின், தொடர்ந்து ஏற முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறது.   

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் - அக்ரி கமாடிட்டி

சென்ற வாரம் சொன்னது... “முக்கிய ஆதரவான 36700- ஐ எடுத்து மேலே செல்லும்போது முதல் தடைநிலை 37550 ஆகும். அதைத் தாண்டி ஏறும்போது அடுத்தடுத்த முக்கிய எல்லைகள் 38050 மற்றும் 38475 ஆகும்.”
 
நாம் குறிப்பிட்டிருந்ததைப்போலவே, வெள்ளி புல்பேக்ரேலியைத் தொடர்ந்தது. ஆதரவான 36700 எடுத்து வலிமையாக மேலே ஏறி, திங்களன்று உச்சமாக 37597-ஐ தொட்டது. அதன்பின் பக்கவாட்டில் நகர்ந்து, புதனன்று அதிகபட்சமாக  37775 என்ற எல்லையைத் தொட்டது.

இனி என்ன நடக்கலாம்? வெள்ளி தற்போது ஒரு பக்கவாட்டு நகர்வில் உள்ளது. கீழே 37300 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 37800 என்ற எல்லையைத் தடைநிலையாகவும் கொண்டு இயங்கி வருகிறது. எந்தப் பக்கம் உடைக்கிறதோ, அந்தப் பக்கம் வலிமையாக நகர வாய்ப்புள்ளது.

குரூட் ஆயில் மினி

கச்சா எண்ணெய் விலை சற்றே ஏறுமுகமாக உள்ளது.  ஏற்கெனவே கச்சாஎண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு, ரஷ்யாவுடன் சேர்ந்து, டிசம்பர் 2018 வரை உற்பத்தியைக் குறைக்கப்போவதாக அறிவித்துள்ளது.  இதனால் விலை ஏறத் துவங்கியது. ஆனால், வாரந்திர அடிப்படையில் அமெரிக்கா வெளியிடும் அதன் கச்சா எண்ணெயின் கையிருப்பைப் பொறுத்தும் அதன் விலை மாறும். கடந்த வாரம், அமெரிக்கா வெளியிட்ட கச்சா எண்ணெய் கையிருப்பு குறைவாக இருந்ததால், விலை இன்னும் ஏறுமுகமாக உள்ளது.

சென்ற இதழில் சொன்னது... “தற்போது 3600 - 3570 என்பது வலுவான ஆதரவு எல்லை.  எனவே, இனி ஏற்றம் வரும்போது முக்கியத் தடை நிலைகள் 3700, 3740 மற்றும் 3785 ஆகும்.   மேலே 3815 மிக மிக வலுவான தடைநிலை ஆகும்.”

சொன்னது போலவே, இன்னும் 3570 - 3600 என்ற ஆதரவுநிலை வலுவாகவே உள்ளது.  கடந்த வாரம் திங்களன்று அந்த எல்லையோ மேல எழ ஆரம்பித்தது. தொடர்ந்து ஏறி 3700-ஐ தாண்டி, தற்போது 3740-ல் தடுக்கப்பட்டுள்ளது.

இனி என்ன நடக்கலாம்? மேலே 3740 வலுவான தடைநிலை ஆகும். இது உடைக்கப்பட்டால், வலிமையாக ஏறி 3815-ல் தடுக்கப்படலாம்.  உடைத்தால் பெரிய ஏற்றம். கீழே 3670 என்பது முதல்கட்ட ஆதரவு. அதை உடைத்தால் கீழே 3600-ஐ நோக்கி நகரலாம்.

மென்தா ஆயில்


மென்தா ஆயில், கடந்த சில வாரங்களாக வலிமையான ஏற்றம், மற்றும் இறங்கங்களைக் கொண்டு இயங்கிக்கொண்டு இருந்தது.  அதுவும், கடந்த வாரம் மற்றும் முந்தைய வாரம், இறக்கம் ஏற்றத்தின் வேகத்திற்கு இணையாக இருந்தது.  அப்படி வலிமையாக இறங்கிய மென்தா ஆயில், கடந்த வாரம் சற்றே இளைப்பாறியதாக எடுத்துக்கொள்ளலாம்.    

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் - அக்ரி கமாடிட்டி

சென்ற இதழில் சொன்னது... “எப்படி வலிமையான ஏற்றம் வரும்போது இறக்கம் வரலாம் என்று சொல்கிறோமோ, அதுபோல், வலிமையான இறக்கம் வரும்போதும், ஓர் ஆதரவை எடுத்து புல்பேக் ரேலி வரலாம்.   தற்போது 1580 என்ற எல்லை மிக முக்கிய ஆதரவு ஆகும். இந்த எல்லைக்கு அருகே ஆதரவு எடுத்து, ஒரு புல்பேக் ரேலி வரலாம்.”

நாம் சொன்னபடியே ஒரு புல்பேக் ரேலியும் வந்தது.  சென்ற வாரம் திங்களன்று ஒரு கேப் டவுனானவுடன் இறங்கத் துவங்கினாலும், அன்று முடியும் போது 1604 என்ற புள்ளியில் முடிந்தது. 

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் - அக்ரி கமாடிட்டி

அதாவது, நாம் கொடுத்துள்ள 1580 என்ற ஆதரவு எல்லையை மென்தா ஆயில் தக்க வைத்துள்ளது.  அதன் பிறகு, ஒரு நாள் ஏற்றம், ஒரு நாள் இறக்கம் என்று மாறிமாறி நிகழ்ந்தது. திங்களன்று ஆதரவைத் தக்க வைத்த மென்தா ஆயில், அடுத்த நாள் செவ்வாயன்று, அதிகபட்சமாக 1668-ஐ தொட்டது. 

அடுத்து புதனன்று ஒரு கேப் அப்பில் துவங்கியது. 1704 என்ற புள்ளியில் துவங்கி, படிப்படியாக இறங்க ஆரம்பித்தது. அன்று மாலை 1598 என்ற புள்ளியில் முடிந்தது. ஏற்றத்தின் மூலம் வந்த எல்லா புள்ளி களையும் இழந்தது. வியாழனன்று ஒரு கேப் டவுனில் துவங்கியது. அதாவது, 1574 என்ற புள்ளியில் துவங்கி, மேலே வலிமையாக ஏறி    1657-ல் முடிந்தது. இவ்வாறு ஏற்றம் தக்கவைக்கப் பட்டுள்ளது.

இனி என்ன செய்யலாம்? தற்போது 1705 என்ற எல்லை முக்கியத் தடைநிலையாக உள்ளது.  இதைத் தாண்டினால் புல்பேக் ரேலி முடிவுக்கு வந்து, அதுவே ஏறுமுகமாக மாறலாம்.  1705ஐ தாண்ட முடியாவிட்டால், பக்கவாட்டு நகர்வுக்குப் போகலாம்; மற்றும் 1540 என்ற ஆதரவு நிலை தக்கவைக்கப் படலாம். கரடிகள் சந்தையில் இறங்கினால், தற்போதைய ஆதரவு நிலையான 1540-ஐ உடைத்து வலிமையான இறக்கத்திற்கு வழிவகுக்கலாம்.

காட்டன்

காட்டன் விலையையும், மென்தா ஆயில் விலையையும் தொடர்ந்து கண்காணித்து வரும்போது, இவை இரண்டும் எதிர்எதிராக நகர்ந்துகொண்டு இருப்பதுபோல் தான் உள்ளன. மென்தா ஆயில் இறங்கி பக்கவாட்டில் நகரும்போது, காட்டன் பக்கவாட்டு நகர்வில் இருந்து வலிமையாக ஏறி உடனடியான புதிய உச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.  

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் - அக்ரி கமாடிட்டி

சென்ற வாரம் சொன்னது போலவே வலிமையான ஏற்றம் நிகழ்ந்தது. சென்ற வாரம் திங்களன்று சற்றே இறங்கி 19530 என்ற புள்ளியில் முடிந்துள்ளது. அடுத்தடுத்த இரண்டு நாள்களும், அதாவது செவ்வாய் மற்றும் புதனன்று பக்காவாட்டிலேயே 19610 என்ற உச்சத்தைத் தாண்ட முடியாமல் முடிந்தது. அதாவது, அந்த இரண்டு நாள்களும் காளைகள் பதுங்கி இருந்தன என்றே சொல்லலாம்.  வியாழனன்று காளைகள் வெகுண்டு, 19610 என்ற தடை நிலையை உடைத்தன. காட்டன் விலை வேகமெடுத்து 19910 என்ற நிலைக்குப் பலமாக ஏறி முடிந்துள்ளது. வெள்ளியன்றும்  ஒரு கேப் அப்பில் துவங்கி, 20010 முடியும்போது 20070ல் முடிந்துள்ளது.

இனி என்ன செய்யலாம்? காட்டன் வலுவான ஏற்றத்தில் உள்ளது.  உடனடித் தடைநிலை  20130 ஆகும்.  இந்தத் தடையை உடைத்தால் இன்னும் ஒரு பெரிய ஏற்றம் வரலாம். மாறாக, 20130-ஐ தாண்ட முடியவில்லை என்றால், ரிடிரேஸ்மென்ட் என்ற வகையில் 19700-ஐ நோக்கி வரலாம்.