நடப்பு
தொடர்கள்
Published:Updated:

மிரே அஸெட் இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட்... அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஃபண்ட்!

மிரே அஸெட் இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட்... அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஃபண்ட்!
பிரீமியம் ஸ்டோரி
News
மிரே அஸெட் இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட்... அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஃபண்ட்!

சொக்கலிங்கம் பழனியப்பன் டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.prakala.com)

மிரே அஸெட் இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் ஒரு லார்ஜ்கேப் ஃபண்ட். இது, தற்போது ரூ.5,600 கோடி மதிப்புள்ள சொத்துகளை நிர்வகித்து வருகிறது. இதன் போர்ட்ஃபோலி யோவில் 83 சதவிகிதத்துக்கும் மேலாக லார்ஜ்கேப் நிறுவனப் பங்குகளிலும், மீதமுள்ள 17%  மிட்கேப் நிறுவனப் பங்குகளிலும் உள்ளது. கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது, இதனுடைய போர்ட்ஃபோலியோவில் மிட்கேப் சதவிகிதத்தை தற்போது குறைத்துக் கொண்டுள்ளது.  

மிரே அஸெட் இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட்... அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஃபண்ட்!

இதன் போர்ட்ஃபோலியோவில் உள்ள லார்ஜ்கேப் பங்குகள் இந்த ஃபண்டிற்கு ஒரு ஸ்திரத்தன்மையைக் கொடுக்கின்றன. அதே சமயம், இதன் போர்ட்ஃபோலியோவில் உள்ள தரமான மிட்கேப் பங்குகள் இந்த ஃபண்டிற்கு ஒரு கவர்ச்சியைக் கொடுக்கின்றன.

மிரே அஸெட் இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட்... அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஃபண்ட்!

 இதன் ஃபண்ட் மேனேஜர்கள் நீலேஷ் சுரானா மற்றும் ஹர்ஷத் போராவேக் ஆவார்கள். இந்த ஃபண்ட் தொடங்கப்பட்டு ஒன்பது வருடங்களுக்கு மேல் ஆகின்றன. இதனுடைய கேட்டகிரியில் தொடர்ந்து நல்ல வருமானத்தைத் தந்துள்ளதே இந்த ஃபண்டை நாம் பரிந்துரை செய்ய முக்கியக் காரணம். இந்த ஃபண்ட் ஆரம்பிக்கப்பட்டபோது (ஏப்ரல் 04, 2008) ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம், தற்போது ரூ.4,84,560-ஆக வளர்ந்துள்ளது. இது சி.ஏ.ஜி.ஆர் அடிப்படையில் ஆண்டுக்கு 17.57% வருமானம் ஆகும்.

இந்த ஃபண்ட் கடந்த ஒன்பது ஆண்டுகளில், 2013-ம் ஆண்டைத் தவிர, தொடர்ந்து பி.எஸ்.இ சென்செக்ஸ் குறியீட்டைவிட மிக அதிகமான மார்ஜினில் (5% - 28%) வருமானம் கொடுத்துள்ளது. இதன் பீட்டா சந்தையைவிட சற்றே குறைவாக 0.97 என்ற அளவிலும், ஆல்பா 7.67 என்ற அளவிலும் நன்றாக உள்ளது. 

மிரே அஸெட் இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட்... அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஃபண்ட்!

தரமான நிறுவனப் பங்குகளையே தனது போர்ட்ஃபோலியோவிற்கு தேர்வு செய்யப்படுகிறது. மேலும், அந்தப் பங்குகளை நியாயமான விலையில் வாங்கி நீண்ட காலம் வைத்திருக்கிறது. பங்குகளை வாங்கும் போது, அந்நிறுவனங்கள் தங்களது துறையில் லீடராக இருக்குமாறு பார்த்துக்கொள்வதுடன், நல்ல லாபத்துடன் அந்நிறுவனங்கள் பொருள்களை விற்க முடியுமா என்பதையும் கவனித்து வாங்குகிறது.

ஹெச்.டி.எஃப்.சி பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், ஹெச்.டி.எஃப்.சி லிட், எஸ்.பி.ஐ, இன்ஃபோசிஸ் போன்ற பங்குகள் இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன. இது ஒரு லார்ஜ்கேப் ஃபண்ட் என்பதால், முதன்முறை ஈக்விட்டி முதலீட்டாளர்கள் மற்றும் பங்குச் சந்தையையொட்டிய ரிஸ்க்கை விரும்புபவர்களுக்கு இந்த ஃபண்ட் மிகவும் ஏற்றது.   

மிரே அஸெட் இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட்... அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஃபண்ட்!

மேலும், தொடர்ந்து கடந்த ஆறு வருடங்களாக டிவிடெண்டை வழங்கி வருகிறது. ஆகவே, நீண்ட காலத்தில் ஃபிக்ஸட் டெபாசிட்டை ஒட்டிய வரியில்லா வருமானத்தை எதிர்பார்ப் பவர்களுக்கு, இதன் டிவிடெண்ட் ஆப்ஷன் பொருந்தும். இந்த ஃபண்டின் டிவிடெண்ட் ஆப்ஷனின் என்.ஏ.வி (ஜனவரி 02, 2018) ரூ.20.72 ஆகும்.

தொடர்ச்சியாக நிஃப்டி 50/ சென்செக்ஸ் குறியீட்டைத் தாண்டி நல்ல வருமானத்தைப் பெற விரும்பு பவர்கள் இந்த ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யலாம். சந்தைச் சரிவுகளைப் பயன்படுத்தி மொத்தமாகவும் அல்லது எஸ்.டி.பி முறையிலும் முதலீடு செய்யலாம்.   

மிரே அஸெட் இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட்... அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஃபண்ட்!

யாருக்கு உகந்தது?

அனைத்து வயதினர், முதன்முறை முதலீட்டாளர்கள், பணம் உபரியாக உள்ளவர்கள், ஸ்திரமான பங்கு சார்ந்த போர்ட்ஃபோலியோவை நாடுபவர்கள் போன்றவர்களுக்கு உகந்தது.

யார் முதலீடு செய்யக்கூடாது?

குறுகிய காலத்தில் பணம் தேவைப்படுபவர்கள், உறுதியான/ நிலை யான வருமானத்தை விரும்புபவர்கள், ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள், பங்குச் சந்தை ஏற்ற இறக்கம் குறித்துப் போதிய ஞானம் இல்லாதவர்கள் இதில் முதலீடு செய்யக்கூடாது!

மிரே அஸெட் இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட்... அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஃபண்ட்!

ஏ.டி.எம்-களில் 200 ரூபாய் நோட்டுகள் வருமா?

தற்போதுள்ள ஏ.டி.எம் மெஷின்களின் 200 ரூபாயை அடுங்கி பொது மக்களுக்கு வழங்கும் வசதி இல்லை. இதனால், அதிக எண்ணிக்கையில் 200 ரூபாய் தாள்கள் அச்சிடப் பட்டும் மக்களிடம் புழக்கத்துக்கு செல்லாமல் இருக்கிறது.

தற்போது வங்கிகள் மூலம் மட்டுமே 200 ரூபாய் நோட்டுகள் விநியோ கிக்கப்பட்டு வருகிறது. ஏ.டி.எம் மூலம் 200 ரூபாய் நோட்டுகளை வழங்க வங்கிகளுக்கு     ஆர்.பி.ஐ உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை வங்கிகள் நிறைவேற்ற ரூ.1,000 கோடி செலவாகும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. விரைவில் அனைத்து ஏ.டி.எம்-களிலும் 200 ரூபாய் நோட்டை எதிர்பார்க்கலாம்!