நடப்பு
தொடர்கள்
Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
News
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தி.ரா.அருள்ராஜன்
கமாடிட்டி சந்தை நிபுணர்,
www.ectra.in

தங்கம் மினி

தங்கம், சென்ற வருடம் டிசம்பர் மாதத் துவக்கத்தில் 29000 என்ற முக்கிய ஆதரவை உடைத்து இறங்கியது.  இது ஒரு வலிமையான இறக்கமாக மாறி, 12.12.17 அன்று 28132 என்ற குறைந்தபட்ச புள்ளியைத் தொட்டது. வலிமையான வீழ்ச்சி நடக்கும்போதெல்லாம், வலிமையான ஏற்றமும் வரலாம் என்று சொல்வோம். அதுவும் தங்கத்தில் நடந்தது.  டிசம்பரில் குறைந்தபட்ச புள்ளியான 28132-ஐ தொட்டபிறகு, படிப்படியாக ஏறி, டிசம்பர் முடிவில், எந்த ஆதரவை உடைத்ததோ, அந்த ஆதரவான 29000 புள்ளியை வந்தடைந்தது. அதுமட்டும் அல்ல, அதைத் தாண்டியும் ஏறியுள்ளது.

கடந்த இதழில் சொன்னது, “தங்கம்.  மேலே 28700 என்ற எல்லையில் வலுவாகத் தடுக்கப்பட்டுள்ளது.  கீழே 28500 என்ற எல்லையில் வலுவான ஆதரவு உள்ளது.”

ஆனால், கடந்த வாரத்தில் தங்கம், பக்கவாட்டு எல்லையின் மேல்பக்க எல்லையை உடைத்து பலமாக ஏறியது. முந்தைய ஆதரவு நிலையான 29000-யைத் தொட்டது. அந்த எல்லையில் சற்றே ஏறி, 29294 என்ற உச்சத்தைத் தொட்டபின், அதைத் தாண்ட முடியாமல், பக்கவாட்டு நகர்வுக்கு மாறியுள்ளது.

இனி என்ன நடக்கலாம்..? தங்கம் ஒரு வலிமையான ஏற்றத்திற்குப்பிறகு, தற்போது ஒரு பக்கவாட்டு நகர்வாக, மேலே 29320-ல் தடுக்கப்பட்டும், கீழே 29100 என்ற எல்லையில் ஆதரவை எடுத்தும், நகர்ந்துகொண்டு இருக்கிறது.  எப்போதுமே பக்கவாட்டு நகர்வில் இருக்கும்போது, அடுத்து பெரிய நகர்வுகள் வரலாம். இனி, மேல் எல்லையான 29320-யை உடைத்தால்,  அடுத்து 29450 மற்றும் 29780 என்ற எல்லைகளை நோக்கி நகரலாம். கீழே 29100-யை உடைத்தால், பெரிய இறக்கம் வரலாம்.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

வெள்ளி மினி

வெள்ளியும், தங்கத்தைப் போலவே அதே காலகட்டத்தில் ஒரு பெரிய வீழ்ச்சியையும், மீட்சியையும் கண்டது.  2017 நவம்பர் மாதக் கடைசியில், முக்கிய ஆதரவான 38700-யை உடைத்து இறங்கியது. நவம்பர் முடிவில் குறைந்த பட்சமாக 36732-யைத் தொட்டு, பின்பு மீள ஆரம்பித்தது. இந்த ஏற்றம் டிசம்பர் முடிவில், முந்தைய ஆதரவான 38700-யைத் தொட்டு, ஜனவரி முதல் வாரத்தில், அதையும் தாண்டி முடிந்துள்ளது.

சென்ற வாரம் சொன்னது... “கீழே 37300 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 37800 என்ற எல்லையைத் தடைநிலையாகவும் கொண்டு இயங்கி வருகிறது.”

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

வெள்ளி, மேல் எல்லையான 37800-யை  உடைத்து வலிமையாக ஏற ஆரம்பித்தது. இந்த வலிமையான ஏற்றம், டிசம்பர் 29-ம் தேதி வரை தொடர்ந்தது, அடுத்தகட்டமாக 39329-யைத் தொட்டபிறகு, பக்கவாட்டுக்கு மாறியுள்ளது.

இனி என்ன நடக்கலாம்..? வெள்ளி தற்போது மேலே 39420 என்ற எல்லையில் வலிமையாகத் தடுக்கப்படுகிறது. இந்த எல்லையை உடைத்தால், அடுத்த முக்கியத் தடைநிலையான 40300-யை நோக்கி நகரலாம். கீழே  38850 என்பது முக்கிய ஆதரவு நிலை.  இது உடைக்கப்பட்டால், இறக்கம் பலமானதாக இருக்கலாம்.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கச்சா எண்ணெய் மினி

கச்சா எண்ணெய் விலை 2017 ஆரம்பத்தில், ஒரு பேரல் ரூ.3700 என்ற விலையில் இருந்தது. பின்பு அது படிப்படியாக இறங்கி ஜூலை 2017-ல் 2732 என்ற புள்ளியைத் தொட்டது. அதன்பின் படிப்படியாக மீண்டு, டிசம்பரில் 3700 என்ற எல்லையை உடைத்தது.

சென்ற இதழில் சொன்னது... “மேலே 3740 வலுவான தடைநிலை ஆகும்.  இது உடைக்கப் பட்டால், வலிமையாக ஏறி 3815-ல் தடுக்கப்படலாம். உடைத்தால் பெரிய ஏற்றம் வரலாம்.” நாம் சொன்னபடியே உடைத்தது, ஏறவும் செய்தது.  ஆனால், கடந்த வாரங்களில் 3740 என்ற எல்லையை உடைத்து ஏறினாலும், அதன்பின் 3600-க்கும் 3800-க்கும் இடையே சுழன்றது. பின்பு 3800-யை  உடைத்து மேலே 3946 வரை ஏறியது.

இனி என்ன நடக்கலாம்? கச்சா எண்ணெய் சற்றே வலிமையாக ஏற முயற்சித்தாலும், 3950-ல் தடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஏறினாலும் 4000 என்பது வலுவான தடைநிலை ஆகும். இதை உடைத்தால், பலமான ஏற்றம் வரலாம்.  கீழே 3810 உடனடி ஆதரவு ஆகும். இதை உடைத்து இறங்கினால், முக்கிய ஆதரவான 3600-ஐ நோக்கி நகரலாம்.

அக்ரி கமாடிட்டி பகுதியைப் படிக்க: http://bit.ly/2lZRr9F