
அவசரகால நிதியைச் சேர்த்து வைத்திருக்கிறீர்களா? - ட்விட்டர் சர்வே
திடீர் செலவுகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். கடன் வாங்கி அந்தச் செலவுகளைச் சமாளிப்பதைவிட, கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து, அவசரத் தேவை என்று வரும்போது அதை எடுத்துச் செலவு செய்வதுதான் அவசரகால நிதி (Emergency money). இந்த நிதியை உங்களில் எத்தனை பேர் சேர்த்து வைத்திருக்கிறீர்கள் என்கிற கேள்வியை நாணயம் விகடன் ட்விட்டரில் (https://twitter.com/NaanayamVikatan) கேட்டோம். இந்த சர்வேயில் தெரியவரும் தகவல்கள் சுவாரஸ்யமானவை.

இதில் கலந்துகொண்டவர்களில் 42% பேர், ‘ஆம், அவசர கால நிதியை நாங்கள் சேர்த்து வைத்திருக்கிறோம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். இது ஓர் ஆரோக்கியமான முன்னேற்றமே. இப்படிச் சேர்த்து வைப்பவர்கள் எந்த அவசர செலவு வந்தாலும் அஞ்சத் தேவையில்லை. அநாவசியமாகக் கடன் வாங்கி வட்டி கட்டத் தேவை யில்லை. இந்த சர்வேயில் கலந்துகொண் டவர்களில் 38% பேர், ‘இதுவரை அவசரகால நிதியைச் சேர்த்து வைக்க வில்லை என்றாலும் இனி சேர்ப்போம்’ என்று சொல்லியிருப்பதும் ஆரோக்கிய மான மாற்றத்துக்கான தொடக்கமே. இவர்கள் இப்படிச் சொன்னதோடு நிற்காமல், அவசரகால நிதியைச் சேர்க்கத் தொடங்க வேண்டும்.
இந்த சர்வேயில் கலந்துகொண்டவர் களில் வெறும் 20% பேர் மட்டுமே ‘இதுவரை அவசரகால நிதியைச் சேர்த்து வைக்கவில்லை’ என்று சொல்லியிருக்கிறார்கள். இவர்களுக்கு இந்த நிதியின் அவசியம் தெரியாமல் இருந்திருக்கலாம். அல்லது போதிய வருமானம் இல்லாமல் இருந்திருக்கலாம். இவர்களும் தங்களால் முடிந்த அளவுக்கு அவசரகால நிதியைச் சேர்ப்பது அவசியம்.

இந்த அவசரகால நிதி, மூலதனத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத, ஒன்றிரண்டு நாள்களில் எடுக்கக்கூடிய வகையில் இருப்பது அவசியம்!
- ஏ.ஆர்.கே