நடப்பு
தொடர்கள்
Published:Updated:

சாதித்த ஏற்றுமதியாளர்களுக்கு விருதுகள்!

சாதித்த ஏற்றுமதியாளர்களுக்கு விருதுகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
சாதித்த ஏற்றுமதியாளர்களுக்கு விருதுகள்!

சாதித்த ஏற்றுமதியாளர்களுக்கு விருதுகள்!

ந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (FIEO) சார்பாக, 2015-16 & 2016-17-ம் ஆண்டுகளுக்கான சதர்ன் ரீஜியன் - எக்ஸ்போர்ட்ஸ் எக்ஸலென்ஸ் அவார்ட்ஸ் நிகழ்ச்சி, சென்னையில்  நடந்தது. இந்த நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோர் கலந்துகொண்டனர்.  

சாதித்த ஏற்றுமதியாளர்களுக்கு விருதுகள்!

2015-16-ம் ஆண்டுக்கான விருதுப்பட்டி யலில், டாப் த்ரீ ஸ்டார் ஏற்றுமதியாளர்கள் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கே.ஹெச்.எக்ஸ்போர்ட்ஸ் இந்தியா நிறுவனத்திற்கு கோல்டு விருதும், டாப் ஒன் ஸ்டார் ஏற்றுமதியாளர்கள் பிரிவில் வைகை அக்ரோ புராடக்ட்ஸ் நிறுவனத்திற்கு கோல்டு விருதும், டாப் சர்வீஸ் புரவைடர் பிரிவில் மியாட் ஹாஸ்பிட்டலுக்கு கோல்டு விருதும் வழங்கப்பட்டன.

2016-17-ம் ஆண்டுக்கான விருதுப்பட்டியலில், டாப் ஃபோர் ஸ்டார் எக்ஸ்போர்ட்டர் பிரிவில், ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் குளோபல் குளோதிங் நிறுவனத்திற்கு கோல்டு விருதும், டாப் பப்ளிக் செக்டார் எக்ஸ்போர்ட்டர் பிரிவில், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு கோல்டு விருதும், டாப் எம்.எஸ்.எம்.இ எக்ஸ் போர்ட்டர் பிரிவில் முராரி அக்ரோடெக் நிறுவனத்திற்கு கோல்டு விருதும், டாப் மல்டி புராடக்ட் எக்ஸ்போர்ட்டர் பிரிவில் சூப்பர் ஆட்டோ ஃபோர்ஜ் நிறுவனத்திற்கு கோல்டு விருதும், டாப் வுமன்  தொழில்முனைவோர் பிரிவில் வாசினி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு கோல்டு விருதும், தி அரசன் அலுமினியம் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு சில்வர் விருதும், டாப் சர்வீஸ் புரவைடர் பிரிவில் சோழன் டூர்ஸ் நிறுவனத்திற்கு கோல்டு விருதும் வழங்கப்பட்டன. விருது பெற்ற ஏற்றுமதியாளர்களுக்கு நாணயம் விகடனின் வாழ்த்துகள்!

- தெ.சு.கவுதமன், 

படம்: கே.ஜெரோம்