நடப்பு
தொடர்கள்
Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
News
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தி.ரா.அருள்ராஜன் தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in

தங்கம் (மினி)

தங்கம், டிசம்பர் முதல் வாரம் வரை இறங்கு முகமாக இருந்தது. அதாவது, டிசம்பர் 12-ம் தேதி, குறைந்தபட்ச புள்ளியாக 28271-ஐ தொட்டபிறகு, மேலே திரும்பியது. அதன்பின் படிப்படியாக ஏற ஆரம்பித்தது. இந்த வலிமையான ஏற்றம், தற்போது முக்கியமான எல்லைக்கு அருகில் உள்ளது. 

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தங்கம், முந்தைய வாரம் வெள்ளிக்கிழமை நன்கு ஏறினாலும், 29600 என்ற தடைநிலைக்கு அருகில் முடிந்தது. 

கடந்த வாரம் திங்களன்று, வலிமையான ஏற்றத்தில் தொடங்கி 29600 என்ற தடையை உடைத்து ஏற ஆரம்பித்தது. அன்று 29785 என்ற உச்சத்தைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.  

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்அடுத்து செவ்வாயன்று, ஏற்றம் தொடர்ந்தது. அதிகபட்சமாக 29860 என்ற உச்சத்தைத் தொட்டது. புதனன்று ஒரு கேப்பில் துவங்கினாலும், அதனால் தொடர்ந்து தாக்கு பிடிக்கமுடியாமல், இறங்கியது.

வியாழனன்று கடுமையான இறக்கம் நிகழ்ந்தது. கமாடிட்டி மார்க்கெட்டுக்கு வியாழக்கிழமை முக்கிய நாளாகும். அமெரிக்காவின் முக்கியப் புள்ளிவிவரங்கள் வெளியாகி, சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தும்.

அப்படி இறங்கினாலும், மீண்டு எழுந்து 29600-க்கு மேலாக நின்றது, காளைகளின் சாமர்த்தியத்தைக் காட்டியது. வெள்ளியன்று மீண்டும் எழ முயற்சி செய்தது. 

இனி என்ன நடக்கலாம்?

தங்கம், ஏற்றத்தின் இறக்கம் முடிந்து 29600 என்ற முந்தைய தடை நிலையை ஆதரவாக மாற்றி ஏற ஆரம்பித்துள்ளது.   

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

இந்த ஏற்றம் முதல் கட்டமாக 29900-ல் தடுக்கப் படலாம். அதன்பின், 30120 என்பது அடுத்த வலிமையான தடைநிலை ஆகும்.

கீழே 29600-ஐ உடைத்து இறங்கினால், நன்கு இறங்கி, பின் இறங்குமுகமாக மாறலாம். 

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

வெள்ளி (மினி)

வெள்ளியும், தங்கம் நகரும் திசையில் நகர்ந்தாலும், சற்றே மாறியே நகர்ந்து வருகிறது.  கடந்த வாரம் தங்கம் இறங்குவதற்குமுன்பே வெள்ளி வலிமையாக இறங்கியது.

வெள்ளி, கடந்த வாரம், நாம் கொடுத்திருந்த 39420 என்ற எல்லையைத் தாண்ட முடியாமல், சிரமப்பட்டுக்கொண்டு இருந்தது.
 
சென்ற வாரம் 39420-ஐ உடைத்து, 38712 வரை ஏறியது. அங்கு வலிமையாகத் தடுக்கப்பட்டு, கீழே திரும்பவும் இறங்கி, பழைய ஆதரவான 38850 என்ற எல்லையில் மீண்டும் ஆதரவு எடுத்துள்ளது.

இனி என்ன நடக்கலாம்?

தற்போது 38850 என்ற ஆதரவைத் தக்கவைத்து, மேலே ஏற முயல்கிறது. இருந்தாலும், கீழே 38850 என்ற ஆதரவையும், மேலே 39750 என்ற தடைநிலையையும் கொண்டு இயங்கி வருகிறது.  

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கச்சா எண்ணெய் (மினி)

கச்சா எண்ணெய், கடந்த வாரம் வரலாறு படைத்தது. அமெரிக்காவின் கச்சா எண்ணெய் கையிப்பு தொடர்ந்து குறைந்துவருவது, விலை ஏற்றத்திற்குக் காரணமாக இருந்தாலும், சென்ற வாரம் ஒரு பக்கவாட்டு நகர்விலேயே இருந்தது.

கச்சா எண்ணெய், எதிர்பார்த்தபடியே, ரிடிரேஸ்மென்டில் 4000 என்ற எல்லைக்கு அருகில் வந்து தயங்கி நிற்கிறது.
 
சென்ற வாரம், திங்களன்று ஏற முற்பட்டாலும் அடுத்தடுத்த நாள்கள் சற்றே இறங்கு முகத்துடனேயே காணப்பட்டது.

இனி என்ன நடக்கலாம்?

தற்போது 4000 என்ற புள்ளி முக்கிய ஆதரவாக உள்ளது. இதை உடைத்து இறங்கினால், வலிமையாக இறங்கி 3950, 3970 என்ற எல்லைகளை நோக்கி இறங்கலாம்.

மேலே 4130-ஐ உடைத்து ஏறினால், வலிமை யான ஏற்றம் வரலாம். எனவே, எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

அக்ரி கமாடிட்டிப் பகுதியைப் படிக்க: http://bit.ly/2DuimVG