ட்விட்டர் சர்வே - எத்தனை லட்சம் ரூபாய்க்கு நீங்கள் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கிறீர்கள்?

ட்விட்டர் சர்வே - எத்தனை லட்சம் ரூபாய்க்கு நீங்கள் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கிறீர்கள்?

இன்ஷூரன்ஸ் என்பதே நம் குடும்ப உறுப்பினர்களின் எதிர்கால பாதுகாப்புக்கானது. எண்டோமென்ட் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதைவிட டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதே சரி. இந்த உண்மையைச் சரியாகப் புரிந்துகொள்பவர்கள், தங்கள் குடும்பத்தினரின் எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிற அளவுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைக்கிற மாதிரி பாலிசி எடுப்பார்கள். இந்த உண்மையை எத்தனை சதவிகிதம் பேர் சரியாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை அறிய நாணயம் ட்விட்டரில் (https://twitter.com/NaanayamVikatan) ஒரு சர்வே நடத்தினோம்.

இந்த சர்வேயில் கலந்துகொண்டவர் களில் சுமார் 41% பேர் ரூ.1 - 2 லட்சத்துக்கு இன்ஷூரன்ஸ் எடுத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். ரூ.2 லட்சத்துக்கு பாலிசி எடுத்திருப்பதாக எடுத்துக் கொண்டால், பாலிசிதாரர் இறக்கும் பட்சத்தில் அவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு கிடைத்தாலும், அவர்கள் அதை வங்கி எஃப்.டி-யில் டெபாசிட் செய்தால், அதன் மூலம் மாதமொன்றுக்கு ரூ.3 ஆயிரம் மட்டுமே கிடைக்கும். அதை வைத்துக் குடும்ப உறுப்பினர்கள் தங்கள் தேவையை எப்படி நிறைவேற்றிக் கொள்ள முடியும்? எனவே, இவர்கள் குறைந்தது ரூ.25 லட்சத்துக்காவது டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பது அவசியம்.

இந்த சர்வேயில் 29% பேர் ரூ.3-5 லட்சத்துக்கும், 30% பேர் ரூ.6-10 லட்சத்துக்கும் பாலிசி எடுத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். இவர்களும் எண்டோவ்மென்ட் பாலிசி எடுப்பதை விட்டுவிட்டு, ரூ.50 லட்சத்துக்குக் குறையாமல் டேர்ம் பாலிசி எடுத்து, குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
-ஏ.ஆர்.கே