நடப்பு
தொடர்கள்
Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
News
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தி.ரா.அருள்ராஜன் தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in

தங்கம் (மினி)

பங்குச் சந்தை வலிமையாக ஏறினால், தங்கம் வலிமையாக இறங்கும் என்பது பழைய அனுபவம்.  ஆனால், கடந்த வாரம், பங்குச்சந்தையும் வலிமை யாக ஏறியது,  தங்கமும் வலிமையாக ஏறியது ஒரு புதுமையான அனுபவம்தான். தங்கம் விலை எப்போதுமே, உலகப் பொருளாதாரத்தில் ஏதேனும் நிச்சயமற்றத்தன்மை வரும்போது ஏறும்.  அப்படி ஏதாவது வருமோ என்ற அச்சத்தையும் இது கொடுக்கிறது. 

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கடந்த இதழில் சொன்னது... “இறக்கம் முடிந்து 29600 என்ற முந்தைய தடை நிலையை ஆதரவாக மாற்றி ஏற ஆரம்பித்துள்ளது தங்கம்.  இந்த ஏற்றம் முதல்கட்டமாக 29900-ல் தடுக்கப்படலாம். அதன்பின், 30120 என்பது அடுத்த வலிமையான தடைநிலை ஆகும்.”

நாம் சொன்னது நிஜமாகி, இன்னும் வலுவாக மாற ஆரம்பித்தது. சென்ற வாரம், திங்கள் கிழமை யின் குறைந்தபட்ச புள்ளி, சரியாக 29600 ஆகும். இந்த ஆதரவை எடுத்து திங்கள், செவ்வாய், புதன் என்று மூன்று நாள்களும் படிப்படியாக ஏற ஆரம்பித்தது. இந்த ஏற்றமானது, நாம் தந்த அடுத்த தடைநிலையான 29900 தொட்டுத் தயங்கி நின்றது. 

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்



ஆனால், வியாழனன்று 29900 என்ற தடை நிலை வலிமையாக உடைக்கப்பட்டு, காளைகள் வெகுண்டு எழுந்தார். தங்கம் 29900 என்ற புள்ளியில் இருந்து எகிறி, 30290 என்ற உச்சத்தைத் தொட்டது. இது மிகப் பெரிய ஏற்றம் ஆகும்.   வியாழக்கிழமையும் அடுத்தகட்ட ஏற்றத்திற்கு முயற்சி நடந்தது. ஆனால், அது அத்தனை எளிதானதாக இல்லை.

இனி என்ன நடக்கலாம்? தங்கம் வலிமையாக உயர்ந்துவரும் நிலையில், மேலே 30550 என்பது வலிமையான தடைநிலையாக மாறியுள்ளது.  அதை உடைத்தால், அடுத்து இன்னும் வலிமையாக ஏறலாம்.   கீழே முந்தைய தடைநிலையான 29900 என்பது இப்போது ஆதரவு நிலை. இது உடைக்கப் பட்டால், இறக்கம் கணிசமானதாக இருக்கலாம்.

வெள்ளி (மினி)

வெள்ளியும், தங்கமும் ஒரே திசையில் நகர்ந்தாலும், அதன் நகரும் வீச்சு மாறியுள்ளது.   தங்கம் மிக வலிமையாக ஏறும்போது, வெள்ளி கொஞ்சம் மிதமாக ஏறுகிறது.

சென்ற வாரம் சொன்னது... ‘‘தற்போது 38850 என்ற ஆதரவைத் தக்கவைத்து, மேலே ஏற முயற்சிக்கிறது.  இருந்தாலும், கீழே 38850 என்ற ஆதரவையும், மேலே 39750 என்ற தடைநிலையையும் கொண்டு இயங்கி வருகிறது.’’  

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

வெள்ளியானது நாம் சொன்னதுபோலவே, 38850 என்ற ஆதரவைக் கடந்த வாரம் திங்கள் மற்றும் செவ்வாயன்று தக்கவைத்து கொண்டது.  ஆனால், புதனன்று தங்கம் மேலே ஏற, வெள்ளி இறங்கியதுதான் ஆச்சர்யம்.

புதனன்று விட்டதை, வியாழனன்று தங்கம் ஏறியபோது, வெள்ளியும் கூடவே வலிமையாக ஏறியது. வியாழனன்று ஏறினாலும், சற்றே சிரமத்துடன் உள்ளது.

இனி என்ன நடக்கலாம்? வெள்ளி இப்போது நன்கு ஏறினாலும், மேலே 40300 என்பது வலிமையான தடைநிலை ஆகும்.  அதை உடைத்தால் ஏற்றம் வலுவானதாக இருக்கும்.  கீழே 39600 என்பது உடனடி ஆதரவு நிலை ஆகும்.

கச்சா எண்ணெய் (மினி)

டெக்னிக்கல் அனாலிசிஸ்படி, ஒரு பக்கவாட்டு நகர்வு இருந்தால் அதில் ஒரு புதையல் இருக்கும் என்று சொல்வேன். கச்சா எண்ணெயிலும் அந்தப் புதையல் இருந்தது.

சென்ற இதழில் சொன்னது... “தற்போது 4000 என்ற புள்ளி முக்கிய ஆதரவாக உள்ளது. மேலே 4130-ஐ உடைத்து ஏறினால், வலிமையான ஏற்றம் வரலாம்.”

கச்சா எண்ணெய்  மேலே 4130-ஐ உடைத்து,   மிக வலிமையாக ஏறி 4250-யைத் தொட்டது.   இது மிகப் பெரிய லாபத்தைக் கொடுத்த வாரமாக முடிந்துள்ளது.

கடந்த வாரம் திங்கள் மற்றும் செவ்வாயன்று சற்றே சுணக்கத்துடன் காணப்பட்டாலும்,  மற்ற நாள்களில் தொடர் ஏற்றத்தைக் காட்டி உள்ளது. 

இனி என்ன நடக்கலாம்? முந்தைய தடை நிலையான 4130 என்பது இப்போது ஆதரவு எல்லையாக மாறலாம்.  தற்போது 4250 என்பது தடைநிலையாக மாறியுள்ளது.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

அக்ரி கமாடிட்டிப் பகுதியைப் படிக்க: http://bit.ly/2AQOzRQ