மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 33 - அதிர்ஷ்டம்... துரதிர்ஷ்டம்... வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளுங்கள்!

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 33 - அதிர்ஷ்டம்... துரதிர்ஷ்டம்... வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளுங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர் மார்க்கெட் ஏபிசி - 33 - அதிர்ஷ்டம்... துரதிர்ஷ்டம்... வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளுங்கள்!

செல்லமுத்து குப்புசாமி

ஷேர் மார்க்கெட் என்றில்லை; பொதுவாக, எல்லாவிதமான முதலீடுகளையும், நிதி நிர்வாகம் தொடர்பான சங்கதிகளையும் அணுகுவதை இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அதில் முதலாவது வழிமுறை, ஷேர் மார்க்கெட் இயங்கும் விதம், அதில் புழங்கும் சொற்கள், பயன்படுத்தும் வாய்ப்பாடுகள் ஆகிய சங்கதிகளை உள்ளடக்கியது. இந்தத் தொடரின் முற்பகுதியைப் பெரும்பாலும் ஆக்கிரமித்தது அதுதான்.  

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 33 - அதிர்ஷ்டம்... துரதிர்ஷ்டம்... வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளுங்கள்!

இந்த வழிமுறைகளுக்கு நிகரான முக்கியத்துவம் உடையது மனநிலை. முதலீடுகளையும், பங்குச் சந்தையையும் நாம் எப்படி அணுகுகிறோம் என்பதைப் பற்றி விரிவாகப் பேசும் பிரிவு இது. சமீப காலத்தில் ‘Behavioral Finance’ என்ற பெயரில் இது கூடுதல் கவனம் பெறுகிறது. ஷேர் மார்க்கெட்டில் இந்த       ‘Behavioral Finance’-ன் தாக்கத்தைப் பல அத்தியாயங் களில் பேசுகிற அளவுக்கு சங்கதிகள் உண்டென்றாலும், அதில் குறிப்பாகக் கவனிக்க வேண்டியது திட்டமிட்ட வெற்றிக்கும், அதிர்ஷ்டத்திற்கும் உள்ள வேறுபாட்டைத்தான்.

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 33 - அதிர்ஷ்டம்... துரதிர்ஷ்டம்... வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளுங்கள்!நீங்கள் நூற்றுக்கணக்கான கம்பெனிகளை ஆராய்ந்து, குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் ஷேரை மட்டும் வாங்குகிறீர்கள். வாங்கி மூன்று வருடங்கள் வைத்திருக்கிறீர்கள். விலை,  சொல்லிக்கொள்ளும் அளவுக்கு உயரவில்லை. மூன்று வருடங்கள் கழித்து விற்கிறீர்கள். நீங்கள் விற்ற ஒரே மாதத்தில் அதன் விலை இரு மடங்காக உயர்கிறது. நல்ல கம்பெனிதான். உங்கள் ஷேர் செலக்‌ஷன் டெக்னிக் எல்லாம் பக்காவாக இருந்தது. ஆனாலும் துரதிர்ஷ்டம்.

2007 முதல் 2011 வரையிலான காலத்தைக் கணக்கில் எடுத்துப் பாருங்கள். 2007-ம் வருடம் 13827.77 புள்ளியில் ஆரம்பித்த சென்செக்ஸ் அந்த வருடம் முடியும்போது 20286.99 புள்ளிகளில் முடிவடைந்தது, அதாவது, 46.71% லாபம்.  

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 33 - அதிர்ஷ்டம்... துரதிர்ஷ்டம்... வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளுங்கள்!

2008-ஐ பொறுத்தவரை 20325.27 புள்ளியில் ஆரம்பித்து இடையே 21206.77 புள்ளிக்கு உயர்ந்து, அதன் பின்னர் 7697.39 வரைக்கும் சரிந்து, வருடக் கடைசியில் 9647.31 புள்ளியைத் தொட்டது. நீங்கள் 200 ரூபாய் முதலீடு செய்து வைத்திருந்தால், அது 212 ரூபாய்க்கு உயர்ந்து, 76.97 ரூபாய்க்கு குட்டிக் கரணம் அடித்து, பின்னர் 96.47-ல் தள்ளாடி நின்றிருக்கும். அதாவது, வருடத் துவக்கத்தில் ரூ.100 வைத்திருந்தால் வருடம் முடியும்போது ரூ.47.46-ஆகச் சுருங்கியிருக்கும்.

இதையே 2009-ஐ கணக்கில் எடுத்துப் பார்த்தால், 9720.55 புள்ளியில் துவங்கி 17464.81 புள்ளியில் முடிந்தவகையில் 79.67% லாபம் ஈட்டித் தந்திருக்கும். 2009-ல் 9720.55 புள்ளி அளவில் முதலீடு செய்து ஆறு வருடங்கள் கழித்து, 2015-ல் 27485.77 புள்ளிக்கு விற்றிருந்தால், 182.76% லாபம் கிடைத்திருக்கும். 2009-லிருந்து 9 வருடங்கள் கழித்து 2018 ஜனவரியில், 34059.99 புள்ளிக்கு விற்றிருந்தால் 250.39% லாபம் கிட்டியிருக்கும்.

இவற்றையெல்லாம் சுட்டிக் காட்டக் காரணம், நம் கட்டுப்பாட்டைக் கடந்து பல விஷயங்கள் பங்குச் சந்தையின் போக்கைத் தீர்மானிக்கும் என்பதைப் புரியவைக்கத்தான். அவற்றிற்கான காரணங்கள் சில நேரங்களில் புலப்படும்; பல நேரங்களில் புலப்படாது. பெரும்பாலான வல்லுநர்கள், மார்க்கெட் நகர்ந்தபிறகு அதற்கான காரணங்களைக் கண்டறிவார்கள். முன்கூட்டியே யாராலும் கணிக்க இயலாது.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் நீண்ட கால முதலீட்டாளர். பங்குகளை வாங்குவதுதான் முக்கியமே தவிர, விற்பது அவசியமில்லாத ஒன்று என அடிக்கடி கூறுவார். அவர் 2007 இறுதியில், சென்செக்ஸ் 19000 இருந்தபோது, தான் வைத்திருந்த 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஷேர்களை விற்றார். சில ஆண்டுகள் முன்பே வாங்கியது. அதனால், அதில் அவருக்கு ரூ.20 லட்சம் லாபம். விற்றதற்கான காரணம், சொந்த வீடு வாங்க பணம் தேவைப் பட்டதால். மற்றபடி ஷேர் மார்க்கெட் 21 ஆயிரம் புள்ளி களுக்குப் போகுமென்றோ, பின்னர் 7697 புள்ளிக்கு அந்தர் பல்டி அடிக்குமென்றோ அவர் கனவிலும் நினைக்கவில்லை. ஒருவேளை, அப்போது விற்காமல் மார்க்கெட் சரிந்தபிறகு விற்றிருந்தால் வெறும் ரூ.20  லட்சத்துக்கு மட்டுமே விற்றிருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும்.  

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 33 - அதிர்ஷ்டம்... துரதிர்ஷ்டம்... வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளுங்கள்!

மார்க்கெட் சரிவதற்கு முன்பாக டைமிங் பார்த்து விற்று விட்டதாகவும், அது தன்னுடைய திறமை எனவும் சில காலம் நம்பிவந்தார். பிறகு ஆழமாக யோசித்தபின்னர், அது குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதையென்று உணர்ந்துகொண்டார். கூடவே, அதிர்ஷ்டத்தைத் தன் திறமையாக நினைத்துக் குழம்பிக் கொள்ளக்கூடாது எனவும் புரிந்து கொண்டார்.

தற்செயலாக நடக்கிற விஷயத்தால் லாபம் ஏற்பட்டால், அது தன் திறமை யினால் கிடைத்த வெற்றியென்ற போலி மயக்கமும், சந்தர்ப்பவசமாக ஏற்பட்ட நஷ்டம் தனது திறமை யின்மையால் ஏற்பட்டதென்று மூலையில் உட்கார்ந்து புலம்புவதும் அவசியமற்றது.

அதிர்ஷ்டம் தரும் பாத்திரத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பதுதான் துரதிர்ஷ்டத்திற்கான முதல்படி.  அதிர்ஷ்டம் என்ற ஒன்று இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளும்போது அந்த அதிர்ஷ்டத்தை நாம் எப்படிக் கட்டுப்படுத்துவது, துரதிர்ஷ்டத்தை நாம் எப்படி நமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவது என்றெல்லாம் நாம் யோசிக்கலாம்.

ஒரு நிகழ்வு நடக்க சாத்தியங்களை நம்மால் தவிர்க்க இயலாமல் போகலாம். ஆனால், அந்த நிகழ்வுக்கு நாம் எப்படி எதிர்வினையாற்றுகிறோம் என்பதை நாம் தீர்மானிக்கலாம். உதாரணத்திற்கு, மார்க்கெட் 20000 புள்ளியில் இருந்து 8000 புள்ளிக்கு வருகிறது எனில், நாம் என்ன செய்யலாம்? மேலும், நல்ல பங்குகளை வாங்கிச் சேகரிக்கலாம்.

ஆனால், மார்க்கெட் சரிந்திருக்கும் போது, நல்ல பங்குகள் மலிவாகக் கிடைக்கும்போது நம்மிடம் பணம் இருக்காது. மார்க்கெட் சரிவது துர திர்ஷ்டம் என்பது தவறு. மார்க்கெட் சரிவது அதிர்ஷ்டம். ஆனால், அந்தச் சரிவின்போது பெரு மளவில் ஷேர் களை வாங்க பணம் புரட்ட முடியாமல் போகிறதே, அதுதான் துரதிர்ஷ்டம்.

முதலீட்டாளர்கள் இந்த நுட்பமான விஷயங்களையும் புரிந்துகொள்ள வேண்டியது மிக முக்கியம்.

(லாபம் சம்பாதிப்போம்)