நடப்பு
தொடர்கள்
Published:Updated:

சிங்கப்பூர் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மீதான தடை... - இந்தியாவிற்கு பலன் தருமா?

சிங்கப்பூர் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மீதான தடை... - இந்தியாவிற்கு பலன் தருமா?
பிரீமியம் ஸ்டோரி
News
சிங்கப்பூர் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மீதான தடை... - இந்தியாவிற்கு பலன் தருமா?

சுமதி மோகனபிரபு

ந்தியாவின் பங்குச் சந்தையில் சிறு முதலீட்டாளர்களின் கவனத்துக்கு வராத ஒரு பெரிய நிகழ்வு சில நாள்களுக்கு முன் நடந்தது. அது, சிங்கப்பூர்  பங்குச் சந்தையான எஸ்.ஜி.எக்ஸ்-ல்  இனி நிஃப்டி ஃப்யூச்சர் வர்த்தகமாகாது என்பதுதான். ஏன் இந்த முடிவு?

சிங்கப்பூர் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மீதான தடை... - இந்தியாவிற்கு பலன் தருமா?

இந்தியப் பங்குச் சந்தை வர்த்தகத்தில் லாபம் காண விரும்பும், அதேசமயம் இந்திய சட்டதிட்டங்கள் மற்றும் வரி விதிப்புக்கு உட்பட விரும்பாத பன்னாட்டு முதலீட்டாளர்கள் பலர் இதுநாள் வரை  சிங்கப்பூர் எஸ்.ஜி.எக்ஸ் நிஃப்டி-யைப் பயன்படுத்தி பெருமளவு பலன்  அடைந் தார்கள். இந்தியப் பங்குச் சந்தைகளில் நிகழ்ந்த நிஃப்டி ஃப்யூச்சர் வர்த்தகத்தைவிட சிங்கப்பூர் எஸ்.ஜி.எக்ஸ்  சந்தையில் நடந்த நிஃப்டியின் வர்த்தகம் அதிகமாக இருந்தது, இந்தியப் பங்குச் சந்தைகளுக்குப் பெரும் அதிர்ச்சி அளித்தது.

இந்த நிலையில், தனிப்பட்ட 50 இந்திய பங்குகளின் ஃப்யூச்சர்களும் இனி சிங்கப்பூர் எஸ்.ஜி.எக்ஸ்-ல் வர்த்தகமாகும் எனக் கடந்த டிசம்பரில்  அது வெளியிட்ட அறிவிப்பு, என்.எஸ்.இ மற்றும் பி.எஸ்.இ பங்குச் சந்தைகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சமீபத்தில் தாக்கலான மத்திய பட்ஜெட்டில் நீண்ட கால ஆதாய வரி விதிப்பு அறிமுகப்படுத்தப் பட்டுள்ள நிலையில், சிங்கப்பூர் எஸ்.ஜி.எக்ஸ்-ல்  இந்தியாவின் தனிப்பட்ட பங்குகளும் வர்த்தக மாகத் தொடங்கினால், வரியைத் தவிர்க்கப் பலரும் அங்கு போய்விடுவார்கள். இதனால், இந்தச்  சந்தைகளின் வருமானம் குறையும். இதற்கு ஒரே வழி, இந்திய பங்குச் சந்தைகள் சிங்கப்பூர் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுக்கு அளித்திருந்த லைசென்ஸை ரத்து செய்வதுதான் என்று முடிவு செய்து, அதை நடைமுறைப்படுத்தியும் உள்ளன. 

இந்த அதிரடி முடிவின் விளைவாக, சிங்கப்பூர் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் பங்குகள் ஒரே நாளில் 7%  சரிவைச் சந்தித்துள்ளன. அதே சமயம், குஜராத்தில் அமைந்துள்ள பன்னாட்டு நிதிச் சேவை மையத் தின் உதவியுடன் சிங்கப்பூர் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் புதிய நிதிச் சேவைகளை உருவாக்க உள்ளதாக ஊகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிங்கப்பூர் பங்குச் சந்தையில் எஸ்.ஜி.எக்ஸ் நிஃப்டி வர்த்தகம் நின்றபின், இனி குஜராத்தில் உள்ள பன்னாட்டு நிதிச் சேவை மையத்தில் உள்ள பங்குச் சந்தையில் நிஃப்டி ஃப்யூச்சர் வர்த்தகம் பெருமளவில் உயருமா அல்லது நமது பங்குச் சந்தையில் நிஃப்டி ஃப்யூச்சர் வர்த்தகம் அதிகரித்து  வரி வசூல் அதிகமாகுமா என்பது போகப் போகத் தெரியும்!