நடப்பு
தொடர்கள்
Published:Updated:

அமெரிக்காவில் மகள்... இந்தியாவில் உள்ள சொத்துகளை எப்படி நிர்வகிப்பது?

அமெரிக்காவில் மகள்... இந்தியாவில் உள்ள சொத்துகளை எப்படி நிர்வகிப்பது?
பிரீமியம் ஸ்டோரி
News
அமெரிக்காவில் மகள்... இந்தியாவில் உள்ள சொத்துகளை எப்படி நிர்வகிப்பது?

கேள்வி - பதில்

அமெரிக்காவில் மகள்... இந்தியாவில் உள்ள சொத்துகளை எப்படி நிர்வகிப்பது?

என் மகள் தற்போது அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கு வசிக்கிறார். அவளுக்குப் பூர்வீக வீடு, விவசாய நிலங்கள், இந்தியாவிலிருந்தபோது செய்த முதலீடுகள், பங்குகள் இன்னும் இருக் கின்றன. 1987-ம் ஆண்டு தொடங்கிய வங்கி சேமிப்புக் கணக்கும் உள்ளது. திருமணமானபின் குடும்ப அட்டை யிலிருந்தும் அவளது பெயர் நீக்கப்பட்டு விட்டது. ஆதார் மற்றும் பான் கார்டு இல்லை. இந்தியா வரும்போது அவளது சொத்துகளை என் பெயருக்கு பவர் ஆஃப் அட்டர்னி எழுதிக்கொடுத்து நான் நிர்வகிக்க முடியுமா, அவள் பெயரில் இருக்கும் சேமிப்புக் கணக்கை என் பெயருக்கு எப்படி மாற்றுவது, அவள் பெயரில் பான் கார்டு, ஆதார் கார்டு வாங்கலாமா?

அமெரிக்காவில் மகள்... இந்தியாவில் உள்ள சொத்துகளை எப்படி நிர்வகிப்பது?


த.ராதாகிருஷ்ணன், ஸ்ரீரங்கம்


ஆர்.செல்வமணி, கனரா வங்கி உதவி பொது மேலாளர் (ஓய்வு)


“பூர்வீக வீடு, விவசாய நிலங்கள், இந்தியாவிலிருந்த போது செய்த முதலீடுகள், பங்கு கள் போன்றவற்றை நிர்வாகம் செய்வதற்கு அமெரிக்காவில் இருந்தபடியே தூதரகத்தின் மூலம் அட்டெஸ்ட் செய்த பவர் ஆஃப் அட்டர்னி அனுப்பி, அதை இந்தியாவில் ரிஜிஸ்டர் ஆபீஸில்  90 நாள்களுக்குள் அட்ஜுடிகெட் செய்தால் போதும். இதை வைத்தே சேமிப்புக் கணக்கை ஆபரேட் செய்யலாம். பான் கார்டு பெறுவதற்கு அங்குள்ள இந்தியத் தூதரகத்தைத் தொடர்புகொண்டு விண்ணப்பிக்கலாம். இந்தியா வரும்போது ஆதார் கார்டு பெறலாம்.”

என் வயது 23. ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். மாதம் ரூ.5,000 மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விருப்பம். ஒவ்வோர் ஆண்டும் சம்பள உயர்வுக்கேற்ப முதலீட்டுத் தொகையை அதிகரிக்கவும் ஆசை. பத்தாண்டுகளுக்குப் பின் நல்ல வருமானம் தரும் ஃபண்டுகளைப் பரிந்துரைக்கவும்.

டேனியல் ராஜ், திருநெல்வேலி

அமெரிக்காவில் மகள்... இந்தியாவில் உள்ள சொத்துகளை எப்படி நிர்வகிப்பது?



எஸ்.ராமலிங்கம், நிதி ஆலோசகர்


‘‘மாத முதலீட்டுத் தொகை 5,000 ரூபாயை மூன்றாகப் பிரித்து முதலீடு செய்யவும். ரூ.2,000 ரிலையன்ஸ் ஸ்மால்கேப் ஃபண்ட் (அ) எல்&டி எமர்ஜிங் பிசினஸஸ் ஃபண்ட், ரூ.2,000 டாடா ரிட்டயர்மென்ட் சேவிங்ஸ் ஃபண்ட் (ஓய்வூதியத்திற்காக), ரூ.1,000 ஆதித்யா பிர்லா சன் லைஃப் பியூர் வேல்யூ ஃபண்டில் முதலீடு செய்து நல்ல வருமானத்தை எதிர்பாருங்கள். ஆண்டுதோறும் கிடைக்கவிருக்கும் சம்பள உயர்வுத்தொகையை அவ்வப்போது மொத்தமாக எல்&டி புரூடென்ஸ் ஃபண்ட் அல்லது ஹெச்.டி.எஃப்.சி பேலன்ஸ்டு ஃபண்டில் முதலீடு செய்து வந்தால் இடைப்பட்ட காலத்துக்கான செலவுகளை அதிக ரிஸ்க் இல்லாமல் சமாளிக்கலாம்.’’ 

செக்டோரல் ஃபண்டுகளில் 5 ஆண்டு களுக்கு முதலீடு செய்வது நல்லதா?

சக்தி வடிவேல், மதுரை

அமெரிக்காவில் மகள்... இந்தியாவில் உள்ள சொத்துகளை எப்படி நிர்வகிப்பது?



ஸ்ரீகாந்த் மீனாட்சி, ஃபண்ட்ஸ் இந்தியா டாம் காம்


செக்டோரல் ஃபண்டு களில் முதலீடு செய்பவர்கள் முதலில் அந்தத் துறை (வங்கி, நுகர்பொருள் போன்றவை) தற்போது முதலீடு செய்வதற்குச் சரியானதுதானா என்பதை ஆராய வேண்டும். அப்படி ஆராய்ந்தபின், அதில் மூன்றிலிருந்து ஐந்து வருடங்களுக்குக் குறையாமல் முதலீட்டை வைத்திருக்க வேண்டும். உதாரணமாக, உள்கட்டமைப்பு துறை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் அடுத்த 3-5 வருடங்களுக்கு முதலீடு செய்தால், பயன் அடைவதற்கு நல்ல வாய்ப்பு உண்டு.’’

தொகுப்பு : தெ.சு.கவுதமன்

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.