மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஃபண்ட் டேட்டா! - 13 - ஆதித்யா பிர்லா டாக்ஸ் ரிலீஃப் 96 ஃபண்ட்... - வருமான வரிச் சலுகைக்கு சிறப்பான ஃபண்ட்!

ஃபண்ட் டேட்டா! - 13 - ஆதித்யா பிர்லா டாக்ஸ் ரிலீஃப் 96 ஃபண்ட்... - வருமான வரிச் சலுகைக்கு சிறப்பான ஃபண்ட்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபண்ட் டேட்டா! - 13 - ஆதித்யா பிர்லா டாக்ஸ் ரிலீஃப் 96 ஃபண்ட்... - வருமான வரிச் சலுகைக்கு சிறப்பான ஃபண்ட்!

சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.prakala.com)

ன்னும் சில வாரங்களில் நடப்பு நிதி ஆண்டு முடிவுக்கு வருகிறது. பலரும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதல்முறையாக நுழைவது வரியைச் சேமிக்கத்தான். 80சி பிரிவின் கீழ் ரூ.1.50 லட்சம் வருமானத்திற்கு வரியைச் சேமிக்க முடியும். இதற்கு பல ஆப்ஷன்கள் இருந்தாலும், அதிக வருவாயைத் தரவல்லது டாக்ஸ் சேவிங் மியூச்சுவல் ஃபண்டுகள்தான்.  

இந்த வகையில் பல வருடங்களாக நடப்பில் இருந்துவரும் ஆதித்ய பிர்லா சன்லைஃப் டாக்ஸ் ரிலீஃப் 96 ஃபண்டை நமது பரிந்துரைக்கு எடுத்துக்கொண்டுள்ளோம். 80சி பிரிவின் கீழ்வரும் முதலீடுகளில், மிகக் குறுகிய லாக்-இன் உள்ள மியூச்சுவல் ஃபண்ட் முதலீடாகும். இதன் லாக்-இன் காலம் மூன்று வருடங்கள் மட்டுமே. 

ஃபண்ட் டேட்டா! - 13 - ஆதித்யா பிர்லா டாக்ஸ் ரிலீஃப் 96 ஃபண்ட்... - வருமான வரிச் சலுகைக்கு சிறப்பான ஃபண்ட்!

பெயரில் உள்ளது போல, 1996-ம்ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது இந்த ஃபண்ட். 21 வருடங்களுக்கும் மேலாக நடப்பிலிருந்து வருகிறது. இந்த ஃபண்டை நாம் பரிந்துரைக்க எடுத்துக் கொண்டதற்கு முக்கியக் காரணம், இதன் கடந்தகால மற்றும் நிகழ்காலச் செயல்பாடு தான். இந்த ஃபண்ட் ஆரம்பித்த போது டிவிடெண்ட் ஆப்ஷன் மட்டும்தான் இருந்தது.

ஃபண்ட் டேட்டா! - 13 - ஆதித்யா பிர்லா டாக்ஸ் ரிலீஃப் 96 ஃபண்ட்... - வருமான வரிச் சலுகைக்கு சிறப்பான ஃபண்ட்!

இந்த ஃபண்டில் 2008-ம் ஆண்டிலிருந்துதான் குரோத் ஆப்ஷன் தொடங்கப்பட்டது. ஆரம்பித்தபோது ஒருவர் ஒருமுறை செய்த முதலீடான ரூ.1 லட்சத்தின் தற்போதைய (பிப்ரவரி 09, 2018) மதிப்பு ரூ.1 கோடியே 48 லட்சத்திற்கும் மேல். ஆச்சர்யப்பட வேண்டாம், இது மிகச் சரியான தகவல். இது கூட்டு வட்டி அடிப்படையில் ஆண்டிற்கு 25.69% ஆகும். அதாவது, இரண்டு வட்டிக்கு மேல்! இந்தக் கணக்கில் வந்த டிவிடெண்டுகள் அனைத்தும், அதே ஃபண்டில் வந்தவுடன் மறுமுதலீடு செய்ததாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இதே சமயத்தில், ஒருவர் பி.எஃப் அல்லது பி.பி.எஃப்-ல் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால், அதன் மதிப்பு தற்போது, ஆண்டிற்கு 9% வருமானம் என்கிற அடிப்படையில், ரூ.6,59,134-ஆக வளர்ந்திருக்கும். இந்த ஒப்பிடுதல் மூலம் டாக்ஸ் சேவர் ஃபண்டுகளின் மகிமை உங்களுக்குப் புரிந்திருக்கும்.

ஃபண்ட் டேட்டா! - 13 - ஆதித்யா பிர்லா டாக்ஸ் ரிலீஃப் 96 ஃபண்ட்... - வருமான வரிச் சலுகைக்கு சிறப்பான ஃபண்ட்!

இந்த ஃபண்டில் 58 சதவிகிதத்துக்கு மேல் ஸ்மால் அண்ட் மிட்கேப் பங்குகளும், எஞ்சியது லார்ஜ்கேப் பங்குகளிலும் உள்ளது.

தற்போது இந்த ஃபண்ட் ரூ.4,900 கோடிக்கு மேலான சொத்தை நிர்வகித்து வருகிறது. இந்த ஃபண்டின் போர்ட்ஃபோலியோவில் பன்னாட்டு நிறுவனப் பங்குகள் அதிகமாகவே உள்ளன. அதனால்தான் இந்த ஃபண்டின் போர்ட்ஃபோலியோ பி/இ-யும் (40.22) அதிகமாக உள்ளது.

இதன் பீட்டா, சந்தையைவிடக் குறைவாக 0.83 என்ற அளவிலும், ஆல்ஃபா 5.34 என்ற அளவிலும் உள்ளன. இதன் டாப் ஹோல்டிங்-ஆக சுந்தரம் க்ளைட்டன், ஹனிவெல் ஆட்டோமேஷன், ஜில்லெட், பேயர் கிராப்சயின்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற பங்குகள் உள்ளன. 

ஃபண்ட் டேட்டா! - 13 - ஆதித்யா பிர்லா டாக்ஸ் ரிலீஃப் 96 ஃபண்ட்... - வருமான வரிச் சலுகைக்கு சிறப்பான ஃபண்ட்!

இந்த ஃபண்டை அஜய் கர்க் என்பவர் 2006-ம் ஆண்டிலிருந்து நிர்வகித்து வருகிறார். 2006-ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக டிவிடெண்டை வழங்கி வருகிறது. ஈக்விட்டி ஃபண்டுகள் கொடுக்கும் டிவிடெண்டுக்கு ஏப்ரல் 2018-லிருந்து மூலத்தில் 10% வரிப் பிடித்தம் இருப்பதால், முதலீட்டாளர்கள் கவனமாக ஆப்ஷனைத் தேர்வு செய்ய வேண்டும்.

இந்த வகை ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும்போது ஒவ்வொரு மாத முதலீட்டிற்கும், முதலீடு செய்த தேதியிலிருந்து 3 வருட லாக்-இன் ஆகும். நல்ல செயல்பாட்டைக்கொண்ட இந்தத் திட்டத்தில் எஸ்.ஐ.பி முறையிலும், சந்தை சரிவுகளைப் பயன்படுத்தி மொத்தமாகவும் வரிச்சலுகை பெற விரும்புபவர்கள் தாராளமாக முதலீடு செய்யலாம்.