நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஸ்டாண்டர்டு டிடக்‌ஷன்... - அரசு ஊழியர்களின் வரிச்சுமை குறையுமா?

ஸ்டாண்டர்டு டிடக்‌ஷன்... - அரசு ஊழியர்களின் வரிச்சுமை குறையுமா?
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டாண்டர்டு டிடக்‌ஷன்... - அரசு ஊழியர்களின் வரிச்சுமை குறையுமா?

ப.முகைதீன் சேக்தாவூது

ந்த மாதத் தொடக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2018-2019-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், யாரும் எதிர்பாராத சலுகையாக வந்துசேர்ந்திருக்கிறது ஸ்டாண்டர்டு டிடக்‌ஷன் என்னும் ‘நிலைக்கழிவு’ வரிச்சலுகை.

2005-2006-ம் நிதியாண்டு வரை நடைமுறையில் இருந்த இந்த வரிச் சலுகை, இப்போது மீண்டும் வந்திருக்கிறது. அது மட்டுமல்ல, இதற்கு முன், வருமான வரம்பைப் பொறுத்து இந்த வருமான வரிச் சலுகை தரப்பட்டது. தற்போது எந்த நிபந்தனையுமின்றி, அனைத்து வகை வருமானப் பிரிவினருக்கும் ஒரே அளவாக ரூ.40,000 என்கிற அளவில் இந்தச் சலுகை தரப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதே.

இந்தச் சலுகை, வருமான வரிச் சட்டம் பிரிவு 16-ன் கீழ் வரும் என்பதால், ஒட்டுமொத்த வருமானத்தில் (Gross Total Income) இருந்து கழித்துக்கொள்ளலாம். ஆவண ஆதாரம் சமர்ப்பிக்கத் தேவையில்லை. எனவே, வருமானத்தின் அளவு அதிகரிக்கும்போது சலுகையின் பயனும் அதிகரிக்கும். அதிகமான வரியைக் குறைக்க வழிவகுக்கும்.  தமிழக அரசு ஊழியர்களுக்கு இப்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலைக்கழிவு தரப்போகும் பயன்களை இனி பார்ப்போம்.

ஸ்டாண்டர்டு டிடக்‌ஷன்... - அரசு ஊழியர்களின் வரிச்சுமை குறையுமா?

* தமிழக அரசு ஊழியர்களுக்குக் கடந்த அக்டோபர் மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டது ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைகள். அதன்படி, மேம்படுத்தப்பட்ட ஊதியமானது, ஐந்தாண்டுகளுக்குக் குறையாமல் பணிநிறைவு செய்துள்ள, குறைந்தபட்ச சம்பளம் கொண்ட பதவியினருக்கும்கூட ஓர் ஆண்டில் ரூ.40,000 என்ற அளவில் கூடுதல் ஊதியத்தைப் பெற்றுத் தந்திருக்கும். அவர்களுக்கு இந்த நிலைக் கழிவானது வருமான வரி எதுவும் கட்டவேண்டிய அவசியம் இல்லாமல் ஆக்கிவிடும். 

* வரிக்கு முற்பட்ட வருமானம் மற்றும் வரிச் சலுகையாக அதிகபட்சம் ரூ.14 லட்சம் வரை வரி விலக்கு தருகிறது தற்போதைய வருமான வரிச் சட்டம். அந்த வகையில் ரூ.14 லட்சத்துக்கு உட்பட்ட அனைத்து சலுகைகளையும் பயன்படுத் தியபிறகும்கூட, வரிக்கு உரிய வருமானம் (Taxable Income) ரூ.3,40,000 என்ற நிலையில் உள்ளவர்களுக்கு நிலைக்கழிவும், வரித் தள்ளுபடியும் (Tax Rebate) சேர்ந்து வருமான வரியே இல்லாமல் செய்துவிடும்.

* இதேபோல், அனைத்து வகை வரிச் சலுகை களையும் பயன்படுத்தியதுபோக, நிகர வரிக்குரிய வருமானமாக ரூ.5,40,000 கொண்ட ஊழியரின் வருமான வரியில் ரூ.8,000-த்தைக் குறைக்க உதவும்.

ஸ்டாண்டர்டு டிடக்‌ஷன்... - அரசு ஊழியர்களின் வரிச்சுமை குறையுமா?


* மேற்கண்ட கழிவுகள் போக, வரி செலுத்த வேண்டிய வருமானமாக ரூ.10,40,000 என்ற நிலையில் வருமானம் உள்ளவர்களுக்கும் வரிச் சலுகை ரூ.12,000 வரை கிடைக்கக்கூடும். 12 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் வந்துள்ள இந்த நிலைக்கழிவானது, தற்போது பணியில் உள்ள தமிழக அரசுப் பணியில் 30%  வரி வரம்பில் உள்ளவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.12,000 வரை வருமான வரியைக் குறைக்க உதவும்.  

தமிழக அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று, ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்களுக்கு நிலைக் கழிவின் மூலம் இன்னும் அதிகம் நன்மை கிடைக்கும். ஏனெனில், 2005-2006 வாக்கில்  நிலைக்கழிவு சலுகை இருந்தபோது, 65 வயதுக்கு மேற்பட்டவர்களே மூத்த குடிமக்கள் என்று கருதப்பட்டனர். தற்போது 60 வயது நிரம்பிய வர்கள் ‘மூத்த குடிமக்கள்’ என்கிற வரையறைக்கு உட்படுவதால், நிலைக்கழிவின் பலன் அதிக எண்ணிக்கையிலான ஓய்வூதியதாரர்களுக்கு வரிச்சுமையைக் குறைக்கும் என்பதை எப்படி என்று பார்ப்போம்.

* மருத்துவக் காப்பீட்டுக்கான வருமான விலக்கு ரூ.30 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்வு. இதன் மூலம் ரூ.20 ஆயிரத்துக்கான வருமானத்துக்கு வரிக்கழிவு கிடைக்கும்.

* சேமிப்புக் கணக்கின் மீதான ரூ. 10 ஆயிரம் வரைக்குமான வருமானத்துக்கு மட்டுமே தரப் பட்ட வருமான விலக்கு, சேமிப்புக் கணக்கு, நிலைவைப்பு மற்றும் தொடர் வைப்பு ஆகிய அனைத்துக்குமான வட்டி வருமானம் ரூ.50 ஆயிரம் வரை வருமானக் கழிவு.

   7.75% வட்டி தரும் 10 ஆண்டு கால பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா திட்டத்தின்கீழ் செய்யப்படும் டெபாசிட் உச்சவரம்பை ரூ.7.5 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தியதன் மூலம் கூடுதல் வட்டி பெற வசதி முதலானவை.

   நிலைக்கழிவு சலுகை பாதிக்கப்படுமா?

நிதிநிலை அறிக்கையில் ‘நிலைக்கழிவு’ பற்றிய அறிவிப்பு வெளியானவுனேயே ஒரு கணக்கு, காட்டுத் தீயாகப் பரவியது. அதாவது, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலைக்கழிவு முழுமையும் ஊழியர்களுக்குக் கிடைக்காது. நிலைக்கழிவு ரூ.40,000-ல் ரூ.15,000 மருத்துவச் செலவு திருப்புத் தொகைக்கும் (Medical Reimbursement) ரூ.19,200 போக்குவரத்துப்படிக்கும் போக ரூ.5800 மட்டுமே நிலைக்கழிவு சலுகையாகக் கிடைக்கும் என்பதே அந்தக் கணக்கு.

ஆனால் இந்தக் கணக்கு, தமிழக அரசு ஊழியர் களுக்குப் பொருந்தாது. ஏனெனில், மருத்துவச் செலவு திருப்புத்தொகையும், போக்குவரத்துப் படியும் தமிழக அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பொதுவானதல்ல. 10 சதவிகிதத்துக்கும் குறைவான ஊழியர்கள் மட்டுமே பெற்றுவருவது. மேலும், மருத்துவச் செலவுத் தொகை பெறுபவர், போக்கு வரத்துப்படியும் சேர்ந்தே பெறுவார் என்பதும் கிடையாது. இந்த இரண்டு விஷயங்களுக்கான தகுதி பெற்றவர்கள் வேறு வேறு. எனவே, தற்போது வந்திருக்கும் இந்த நிலைக்கழிவினால் 90 சதவிகித தமிழக அரசு ஊழியர்களுக்கு வரிச் சலுகையில் எந்த பாதிப்பும் வராது!

தமிழக அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று, ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்களுக்கு நிலைக் கழிவின் மூலம் இன்னும் அதிகம் நன்மை கிடைக்கும் 

படம்: ஜெ.வேங்கடராஜ்

ஸ்டாண்டர்டு டிடக்‌ஷன்... - அரசு ஊழியர்களின் வரிச்சுமை குறையுமா?

நோயாளிகளின் உணவுக்கு ஜி.எஸ்.டி இல்லை!

‘மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கான உணவுக்கு இனி ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படாது’ என மத்திய அரசாங்கம் அறிவித் துள்ளது. மருத்துவமனை யில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு, மருத்து வர்கள் பரிந்துரைக்கும் உணவுகளுக்கு மட்டும் இந்த வரி விலக்கு அளிக்கப்படும். ஆனால், மருத்துவர் பரிந்துரை செய்த உணவாக இருந்தா லும், அதை மருத்துவ மனைக்கு வெளியே சாப்பிடுவதாக இருந்தால் அல்லது வீட்டில் சாப்பிடு வதாக இருந்தால், அது வரிக்கு உட்பட்டதாகவே இருக்கும்  எனவும் மத்திய அரசு தெளிவுபடுத்தியிருக் கிறது!