நடப்பு
தொடர்கள்
Published:Updated:

“தொலைநோக்குடன் திட்டமிடுங்கள்!” - திருப்பூரில் திரண்டுவந்த வாசகர்கள்!

 “தொலைநோக்குடன் திட்டமிடுங்கள்!” - திருப்பூரில் திரண்டுவந்த வாசகர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
“தொலைநோக்குடன் திட்டமிடுங்கள்!” - திருப்பூரில் திரண்டுவந்த வாசகர்கள்!

“தொலைநோக்குடன் திட்டமிடுங்கள்!” - திருப்பூரில் திரண்டுவந்த வாசகர்கள்!

திருப்பூரில் நாணயம் விகடன், ஆதித்ய பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்திய ‘செல்வத்தைப் பெருக்கும் முதலீடு’ நிகழ்ச்சிக்குத் திரண்டுவந்திருந்தார்கள் முதலீட்டாளர்கள்.

 “தொலைநோக்குடன் திட்டமிடுங்கள்!” - திருப்பூரில் திரண்டுவந்த வாசகர்கள்!

இந்தக் கூட்டத்தில் முதலில் பேசிய ஆதித்ய பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழக தலைவர் சுவாமிநாதன், ‘‘இப்போது ஒரு குடும்பத்தின் செலவுகளைச் சமாளிக்க ரூ.10 ஆயிரம் தேவையெனில், 30 ஆண்டுகள் கழித்து ரூ.1.72 லட்சம் தேவை. எனவே, தொலைநோக்குடன் இன்றே முதலீடு செய்யத் தொடங்குவது நல்லது. பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் அளிப்பதாகவும், வரிச் சலுகை பெற்றுத் தருவதாகவும் நம் முதலீடுகள் இருக்க வேண்டும்’’ என்றார்.

 “தொலைநோக்குடன் திட்டமிடுங்கள்!” - திருப்பூரில் திரண்டுவந்த வாசகர்கள்!

அடுத்து பேசிய பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பன், ‘‘டேர்ம் இன்ஷூரன்ஸ், ஹெல்த் இன்ஷூரன்ஸ்  முதலில் எடுத்துவிட்டு, அதன்பிறகு முதலீட்டைத் தொடங்குங்கள். இந்த உலகத்தில் கஷ்டப்பட்டு உழைத்தவர்கள் பெரும் பணக்காரராக ஆனதில்லை. சம்பாதித்த பணத்தைப் புத்திசாலித்தனமாகச் செயல்பட வைத்தவர்களே பணக்காரர்களாக மாறியிருக்கிறார்கள். இதைப் புரிந்துகொண்டு, சரியான திட்டங்களில் முதலீடு செய்யுங்கள்’’ என்றார்.

 “தொலைநோக்குடன் திட்டமிடுங்கள்!” - திருப்பூரில் திரண்டுவந்த வாசகர்கள்!

நிபுணர்கள் பேசி முடித்தபின்பு, வாசகர்கள் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். சமீபத்திய பட்ஜெட்டில் நீண்ட கால ஆதாய வரி 10% கொண்டு வரப்பட்டுள்ளதால், தங்கள் லாபம் குறையுமோ என்கிற சந்தேகம் அவர்களின் மனதில் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

 - ஆகாஷ்,

படங்கள்: ரமேஷ் கந்தசாமி