நடப்பு
தொடர்கள்
Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
News
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தி.ரா.அருள்ராஜன் தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in

தங்கம் மினி

பங்குச் சந்தை தடுமாற ஆரம்பித்துள்ளது. தங்கம் வலிமையாகத் தலையெடுக்க ஆரம்பித்துள்ளது. இந்த வலிமையான ஏற்றம் தொடருமா என்று பார்க்கவேண்டும்.

கடந்த இதழில் சொன்னது, “தங்கம் இன்னும் 29900 என்ற ஆதரவைத் தக்கவைத்துள்ளது.  இதை உடைத்துக் கீழே இறங்கினால் வலிமையாக இறங்கலாம். மேலே 30150 என்பது உடனடித் தடைநிலை ஆகும். இதைத் தாண்டினால் நல்ல ஏற்றம் வரலாம்.”

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தங்கம், அவ்வப்போது இறங்கினாலும், அதன் ஏற்றம் என்பது தொடர்ச்சியாக உள்ளது. தங்கம், நாம் மேலே குறிப்பிட்டு இருந்த இரண்டையும் பின்பற்றியது. அதாவது 29900 என்ற ஆதரவைத் தக்கவைத்துள்ளது. மேலே 30150 என்ற தடையை உடைத்து ஏறியும் உள்ளது. தடையை உடைத்து ஏறினால், நல்ல ஏற்றம் வரலாம் என்றும் குறிப்பிட்டிருந்தோம். மிக நல்ல ஏற்றமே நிகழ்ந்துள்ளது. கடந்த வாரம், திங்கள் மற்றும் செவ்வாயன்று தடைநிலையான 30150-ஐத் தாண்ட கொஞ்சம் சிரமப்பட்டது. ஆனால், புதனன்று 30150 என்ற தடையை உடைத்ததோடு மட்டும் அல்லாமல், மிகப்பெரிய ஏற்றத்தைக் கொடுத்தது. அதாவது, 30150-ஐ தாண்டி 30693 என்ற உச்சத்தைத் தொட்டது குறிப்பிடத்தக்கது. அடுத்து வியாழனன்று கொஞ்சம் பக்கவாட்டு நகர்வில் இருந்தது. அடுத்து வெள்ளியன்று மீண்டும் வலிமையான ஏற்றத்திற்குத் தயாராகியுள்ளது.

இனி என்ன நடக்கலாம்? தங்கம் வலுவான ஏற்றத்தில் உள்ளது. எனவே, மேலே அடுத்த வலிமையான தடைநிலை 30850 ஆகும். இதை உடைத்து ஏறினால். அடுத்தகட்ட வலிமையான ஏற்றம் நிகழலாம்.அடுத்து 31500 என்ற இலக்கைக்கூட அடையலாம். தற்போது 30400 என்பது உடனடி ஆதரவு நிலையாகும்.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

வெள்ளி மினி

வெள்ளியும், தங்கத்தையொட்டி அதே திசையில் சென்றவாரம் நகர்ந்துள்ளது. கடந்த சில வாரங்களாக வெள்ளி, தங்கம் ஏறுமுகமாக இருக்கும்போது இறங்கி ஆரம்பித்துள்ளது.

சென்ற வாரம் சொன்னது... “தற்போது வெள்ளி 37400 என்ற எல்லையை ஆதரவாக எடுத்துள்ளது.  இந்த எல்லை உடைக்கப்பட்டால், மீண்டும் பெரிய இறக்கம் வரலாம்.  மேலே 38250 என்பது உடனடித் தடைநிலை.  உடைத்தால் ஒரு புல்பேக் ரேலி வரலாம்.’’

வெள்ளி, ஆதரவு எல்லையான 37400-ஐயும் தக்கவைத்தது. மேலே உள்ள தடைநிலையான 38250-ஐ தாண்டி வலிமையாக ஏற ஆரம்பித்தது.  சென்ற வாரம் திங்களன்று 38250-ஐ தாண்டி 38320-ஐ தொட்டது.  செவ்வாயன்று கொஞ்சம் தயங்கி நின்றது. புதனன்று தங்கம் ஒரு வலிமையான ஏற்றத்தில் இருக்கும்போது வெள்ளி சற்றே பின் தங்கி, பின் வலிமையாக ஏற ஆரம்பித்தது.  அன்று அதிகபட்சமாக 38864-ஐ தொட்டது. அதன்பின் சற்றே பக்க வாட்டில் நகர்ந்து வருகிறது.

இனி என்ன நடக்கலாம்? வெள்ளி 38900 என்ற எல்லையைத் தடைநிலையாகக் கொண்டுள்ளது.  இதை உடைத்தால் மிக வலிமை யான ஏற்றம் வரலாம்.  கீழே 38300 உடனடி ஆதரவு எல்லை ஆகும்.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கச்சா எண்ணெய் மினி

கச்சா எண்ணெய் நீண்ட இறக்கத்திற்குப் பிறகு, ஒரு பாட்டத்தை ஏற்படுத்தி மேலே திரும்ப முயல்கிறது. 

சென்ற இதழில் சொன்னது... “நன்கு இறங்கிய நிலையில் 3830 என்பது வலிமையான ஆதரவாகவும், மேலே 3920 என்பது தடைநிலையாகவும் உள்ளது. எந்தப் பக்கம் உடைக்கிறதோ, அந்தப் பக்கம் பயணிக்கலாம்.”

கச்சா எண்ணெய், சென்ற வாரம் கீழே 3830 என்ற ஆதரவை திங்கள்கிழமையன்று தக்கவைத்தது. ஆனால், செவ்வாயன்று உடைக்கப்பட்டது.  புதனன்று குறைந்தபட்சமாக 3736 என்ற எல்லையைத் தொட்டது.

 பின்னர் முந்தைய ஆதரவான 3830 என்பதே தடைநிலையாக மாறியது. சென்ற வியாழனன்று, அந்தத் தடையை உடைத்து வலிமையாக ஏறி 3934 என்ற உச்சத்தைத் தொட்டது. பின் தொடர்ந்து ஏறுவதற்குத் தடுமாறிக்கொண்டி ருக்கிறது. 

இனி என்ன நடக்கலாம்? கச்சா எண்ணெய் மேலே 3970 என்ற எல்லை உடனடித் தடைநிலையாக உள்ளது.  அதை உடைத்து ஏறினால், 4020 மற்றும் 4130 என்ற எல்லைகளை அடையலாம். கீழே 3830 என்பது மீண்டும் ஆதரவாக மாறலாம்.