நடப்பு
தொடர்கள்
Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

தி.ரா.அருள்ராஜன் தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in

மென்தா ஆயில்

மென்தா ஆயில் தொடர் இறக்கத்தில் இருப்பது பற்றி கடந்த வாரமே நான் சொல்லியிருந்தேன்.   4.12.2017-ல் அது 1991 என்கிற உச்சத்தை எட்டியது உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்த உச்சத்தைத் தோற்றுவித்தபிறகு, தொடர்ந்து ஒரு லோயர் டாப் என்று சொல்லும் வகையில் தொடர்ந்து இறங்கு முகமாகவே உள்ளது.

29.12.2017-ல் 1798 என்ற அடுத்த உச்சத்தைத் தோற்றுவித்தது. அதன்பிறகு 1600 என்ற எல்லை முக்கிய ஆதரவாக மாறியது. அதுவும் உடைக்கப் பட்டபின், தற்போது இந்த 1600 என்ற எல்லை வலிமையான ஆதரவாக மாறியுள்ளது. அதன் பின்னும் இறக்கம் ஒரு தொடர்கதையாக உள்ளது.

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

முந்தைய இதழில் சொன்னது... “மென்தா ஆயில் தொடர்ந்து வலிமையாக இருக்கக்கூடிய நிலையில்,  தற்போது 1388 என்ற புள்ளி உடனடி ஆதரவு கொடுக்கலாம். இந்த ஆதரவை எடுத்து ஒரு புல்பேக் ரேலி வரலாம். இந்த புல்பேக் ரேலியும், மேலே செல்லும்போது முதல்கட்டமாக 1475 என்ற புள்ளியில் தடுக்கப்படலாம். அதையும் தாண்டி ஏறும்போது, 1515 என்ற புள்ளி மிக வலிமையான தடைநிலையாக மாறலாம். கீழே 1388 உடைத்து இறங்கும்போது, அடுத்தகட்ட வலிமையான இறக்கம் வரலாம்.”

மென்தா ஆயில், கடந்த வாரம் நாம் குறிப்பிட்டு இருந்தபடியே 1388 என்ற ஆதரவைத் திங்கள் மற்றும் செவ்வாயன்று தக்கவைத்தது. மேலே 1453 என்ற எல்லை வரை ஏறி, நாம் குறிப்பிட்டிருந்த 1475 என்ற தடைநிலையைத் தாண்டமுடியாமல் கீழ் நோக்கி இறங்கியது.

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

புதன்கிழமையன்று நாம் கொடுத்த ஆதரவான 1388-ஐ உடைத்து வலிமையாக இறங்கியது. இந்த இறக்கம் 1376 வரை தொடர்ந்தது. வியாழனன்று இறக்கம் மீண்டும் தொடர்ந்தது.  கீழே அடுத்து 1338 என்ற புள்ளியைத் தொட்டது. வெள்ளியன்று ஒரு கேப் டவுனில் துவங்கி, குறைந்தபட்சப் புள்ளியாக 1319-ஐ தொட்டது. பின் மேல்நோக்கி திரும்ப முயற்சி செய்தது.

இனி என்ன செய்யலாம்? நீண்ட இறக்கத்துக்குப் பிறகு, மென்தா ஆயில், ஒரு புல்பேக் ரேலிக்குத் தயாராகலாம். இந்த ஏற்றம், 1411 என்ற முதல் தடைநிலை மற்றும் 1500 இரண்டாம் தடை நிலையில் தடுக்கப்படலாம். இதைத் தாண்டினால், மென்தா ஆயில் ஏறுமுகமாக மாறலாம். கீழே 1310 என்பது உடனடி ஆதரவு.  உடைத்தால் 1280 வரை இறங்கலாம். ஆனால், இந்த இரண்டு ஆதரவு நிலையில் இருந்தும் மீண்டும் ஏற வாய்ப்புள்ளது.

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

காட்டன்

சென்ற வாரம் காட்டன், ஒரு  ஏற்றத்திற்கு முயற்சி செய்தது. அந்த ஏற்றம் ஒரு தற்காலிக ஏற்றமாகவே முடிந்தது.  அதன்பின், இறக்கம் ஒரு தொடர் கதையாக மாறியது.

முந்தைய இதழில் சொன்னது... “தற்போது ஒரு ஹயர்பாட்டத்தைத் தோற்றுவித்து மேலே ஏற ஆரம்பித்து இருக்கும் நிலையில், 20260 என்ற தடைநிலையில் தடுக்கப்படலாம். கீழே 19750 என்ற ஆதரவு உடைக்கப்படாதவரை ஏற்றம் தொடரலாம்.’’

காட்டன், சென்ற வாரம் ஒரு ஏற்றத்துக்கு முயற்சி செய்தது என்னவோ உண்மைதான்.  ஆனால், தடைநிலையான 20260-ஐத் தாண்ட முடியாமல், கீழ் நோக்கித் திரும்பியது. நாம் கொடுத்த ஆதரவான 19750-ஐ உடைத்து இறங்க ஆரம்பித்தது. 

சென்ற வாரம் ஒரு கேப் அப் மூலம் ஏற்றத்துக்கு முயன்று, அதில் தோற்றுப் போனது.  அதன்பின் செவ்வாய், புதன், வியாழன் மற்றும் வெள்ளி என்று அனைத்து நாள்களும், முந்தைய நாளின் முடிவு விலையைத் தாண்டி ஏற முயன்று, பின் ஏற முடியாமல் தொடர்ந்து இறங்கிக்கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஒரு புதிய இறக்கத்தைத்  தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது.

இனி என்ன செய்யலாம்? இத்தனை கடுமையான இறக்கத்திற்குப் பிறகு, தற்போது மிக முக்கிய ஆதரவை நோக்கி இறங்கிக்கொண்டு இருக்கிறது. தற்போது 19400 என்பது அடுத்த கட்ட மிக முக்கிய ஆதரவு நிலை ஆகும். இனி மேலே திரும்பினால், முதல்கட்டமாக 19780 என்ற எல்லையில் தடுக்கப்படலாம்.