நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ட்விட்டர் சர்வே: வங்கி மோசடி நடக்க யார் காரணம்?

ட்விட்டர் சர்வே: வங்கி மோசடி நடக்க  யார் காரணம்?
பிரீமியம் ஸ்டோரி
News
ட்விட்டர் சர்வே: வங்கி மோசடி நடக்க யார் காரணம்?

ட்விட்டர் சர்வே: வங்கி மோசடி நடக்க யார் காரணம்?

பொதுத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் பேங்கில் ரூ.11,400 கோடியை வாங்கி மோசடி செய்ய முயற்சி செய்திருக்கிறார் நீரவ் மோடி. இவர் மிகப் பெரிய வைர வியாபாரி. அமெரிக்கா, பெய்ஜிங், ஹாங்காங் எனப் பல நாடுகளில் இவருடைய வைர நகைகளை விற்கிறார். இது தொடர்பாக பஞ்சாப் நேஷனல் பேங்க்கைச் சேர்ந்த சில உயரதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பொதுத் துறை வங்கிகளில் இப்படிப்பட்ட மோசடிகள் நடக்க யார் காரணம் என்கிற கேள்வியை நாணயம் விகடனில் ட்விட்டர் சர்வேயில் (https://twitter.com/NaanayamVikatan) கேட்டோம். இந்த சர்வேயில் தெரியவந்த விஷயங்கள் சுவாரஸ்யமானவை.

ட்விட்டர் சர்வே: வங்கி மோசடி நடக்க  யார் காரணம்?

இந்த சர்வேயில் கலந்துகொண்டவர்களில், பொதுத் துறை வங்கிகளில் நடக்கும் முறைகேடு களுக்கு முக்கியமான காரணம், சுயநலமிக்க வங்கி அதிகாரிகள் என்று சொல்லியிருக்கிறார்கள். வங்கி

ட்விட்டர் சர்வே: வங்கி மோசடி நடக்க  யார் காரணம்?

அதிகாரிகளின் சம்மதம் இல்லாமல் வங்கிக் கடன் யாருக்கும் கிடைக்காது. தங்களுக்குக் கிடைக்கும் லாபத்துக்காக வங்கியில் இருக்கும் மக்கள் பணத்தை அவர்கள் பறிகொடுக்கத் தயாராகிவிடுகிறார்கள். வங்கி அதிகாரிகள் இது  மாதிரியான முறைகேடுகளுக்குத் துணைபோகாமல் இருந்தாலேபோதும், இதுபோன்ற தவறுகள் நடக்காமல் போய்விடும்.

பொதுத் துறை வங்கிகளில் இதுபோன்ற முறைகேடுகள் நடக்கக் காரணம், ஊழல் அரசியல் வாதிகள் என்றும் கணிசமானவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அரசியல்வாதிகள் வங்கி விஷயத்தில் தலையிடாமல் இருக்க நடவடிக்கை எடுத்தால், எதிர்காலத்தில் இதுமாதிரியான முறைகேடுகள் வங்கிகளில் நடக்க வாய்ப்பில்லை.

ட்விட்டர் சர்வே: வங்கி மோசடி நடக்க  யார் காரணம்?

வெறும் 10% பேர் மட்டுமே, ஏமாற்றும் நோக்கத்துடன் இருக்கும் தொழிலதிபர்கள் காரணம் என்று சொல்லியிருப்பது சரியான கணிப்பே. எல்லாத் தொழிலதிபர்களும் வங்கிகளை ஏமாற்றுகிறார்கள் என்று சொல்ல முடியாது. 

பொதுத் துறை வங்கி நிர்வாகத்தில், இனியும் இதுபோன்ற தவறுகள் நடக்காதபடிக்கு கறாரான முடிவுகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்.

- ஏ.ஆர்.கே