நடப்பு
அறிவிப்பு
Published:Updated:

டேர்ம் இன்ஷூரன்ஸ்... - குடும்பத்தைக் காக்கும் கவசம்!

டேர்ம் இன்ஷூரன்ஸ்... - குடும்பத்தைக் காக்கும் கவசம்!
பிரீமியம் ஸ்டோரி
News
டேர்ம் இன்ஷூரன்ஸ்... - குடும்பத்தைக் காக்கும் கவசம்!

புனீத் நந்தா, செயல் இயக்குநர், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடன்ஷியல் ஆயுள் காப்பீட்டு நிறுவனம்

நாம் ஒவ்வொருவரும் நமது வருங்காலத் தேவைகளுக்காக வெவ்வேறு வகையான சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்கிறோம். நிரந்தர வைப்புக் கணக்கு, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், அஞ்சலகத் திட்டங்கள் உள்ளிட்ட பலவற்றில் பணத்தைச் செலுத்தி, அதை வருங்காலத் தேவைகளுக்குப் பயன்படுத்த விரும்புகிறோம்.

நமது விருப்பங்களும் பணத் தேவை களும் பல்வேறு வகையானவைகளாக உள்ளன. வீடு வாங்குவது, வாகனங்கள் வாங்குவது, குழந்தைகளின் கல்விச் செலவு, திருமணம் மற்றும் பிற முக்கியத் தேவைகளுக்குப் பணம் தேவையாக உள்ளது.

நாம் நினைத்தவை அனைத்தும் சுமுகமாகக் கைகூட வேண்டும் என்ற விருப்பத்துடன் அல்லது கைகூடும் என்ற நம்பிக்கையுடன்தான், நாம் எதிர்காலத் திட்டங்கள் அனைத்தையும் தீட்டுகிறோம்.

டேர்ம் இன்ஷூரன்ஸ்... - குடும்பத்தைக் காக்கும் கவசம்!

ஆனால், நம் வாழ்க்கை தற்போது கணிக்க முடியாததாக உள்ளது. கண் இமைக்கும் நேரத்தில் ஒட்டுமொத்த கணிப்புகளும் சில சமயங்களில் மாறிவிடு கின்றன. அதுபோன்ற ஏதாவது அசம்பா விதம் நிகழ்ந்து, உங்கள் குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள நீங்கள் இல்லாத நிலை ஏற்பட்டால், உங்கள் குடும்பத் தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போவது யார், அவர்களின் வாழ்வில் அக்கறை எடுத்துக்கொள்ளப்போவது யார் என்கிற கேள்விகள் நம்மை ஆழமாக யோசிக்க வைப்பவை. 

அன்புக்குரியவர்களை இழப்பது என்பது உணர்வுரீதியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அவர் குடும்பத் துக்குத் தேவையான வருவாயை ஈட்டுபவ ராகவும் இருந்துவிட்டால், கூடுதல் சிக்கல்கள் உருவாகும். அந்தக் குடும்பம் வருமானம் இன்றித் தவிக்கும் நிலை ஏற்படும்.வருவாய் ஈட்டும் நபரின் இழப்பால் வாடும் குடும்பத்தினரின் உணர்வுரீதியான கவலைகளைப் போக்க உலகில் எந்தத் திட்டமோ, சேவையோ இல்லை. ஆனால், அவர்களின் பொருளாதாரத் தேவைகளை ஈடு செய்ய நிதி மற்றும் காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன.

வருவாய் ஈட்டும் நபர் ஒருவரை ஒரு குடும்பம் இழக்கும் நிலை ஏற்பட்டால், அந்தக் குடும்பத்திற்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டங்கள் உதவியாக அமையும். இந்தத் திட்டங்கள் மூலம் பெரிய தொகை அந்தக் குடும்பத்தினருக்குக் கிடைக்கும். அதைக்கொண்டு அந்தக் குடும்பத்தினர் பெரிய தடங்கல்களின்றி, தங்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும். மேலும், அந்தத் தொகையைக் கொண்டு எதிர்காலத் தேவைகளுக் கான சேமிப்புத் திட்டங்களிலும் தொடர்ந்து முதலீடு செய்ய முடியும்.

டேர்ம் இன்ஷூரன்ஸ்... - குடும்பத்தைக் காக்கும் கவசம்!


இந்த டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டங்கள் குறைந்த செலவு கொண்டவை. நாம் இவற்றில் பிரீமியம் செலுத்தி ஆயுள் காப்பீடு பெறுகிறோம். நாம் பிரிமீயம் செலுத்திவரும் வரை ஆயுள் காப்பீட்டுச் சலுகை நமக்குக் கிடைக்கும்.

உதாரணமாக, நாம் 10 லட்சம் ரூபாய்க்கு ஒரு காரை வாங்குகிறோம் என்றால் இன்ஷூரன்சைப் பற்றித்தான் நாம் முதலில் யோசிப்போம். அந்த காருக்கு ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை இன்ஷூரன்ஸ் செலுத்துவோம். ஆனால், டேர்ம் இன்ஷூரன்ஸ்  எனப்படும் கால அளவு ஆயுள் காப்பீட்டில் ஆண்டுக்கு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை செலுத்தினால் நமக்கு ரூ.1 கோடி ரூபாய் (30 வயதிலான புகைப் பழக்கமற்ற ஆணுக்கு இந்தக் காப்பீட்டுத் தொகை பொருந்தும்) வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும்.

நமது கார்களின் பாதுகாப்புக்காக மிகப் பெரிய தொகையைக் காப்பீடாகச் செலுத்தத் தயாராக உள்ள நாம், நம் குடும்பத்தினரின் எதிர்கால நலனுக்காக டேர்ம் இன்ஷூரன்ஸ்  எடுப்பது அவசியத்திலும் அவசியம். சரி, டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கத் தயார் என்பவர்கள், எந்த அளவு தொகைக்கு ஆயுள் காப்பீடு எடுக்க வேண்டும் என்கிற கேள்வியைப் பொதுவாகக் கேட்பார்கள். வருவாய் ஈட்டும் ஒவ்வொரு நபரும் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் சேரும் முன்பு கீழ்க்காணும் மூன்று அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆயுள் காப்பீட்டின் அடித்தளம்: பொதுவாக, 40 வயதுக்கு உட்பட்ட நபர் தமது ஆண்டு வருவாயைவிட 20 முதல் 30 மடங்கு பணம் கிடைக்கும் வகையிலான ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் சேருவது நல்லது. 40 வயதுக்கு மேற்பட்ட 50 வயதுக்கு உட்பட்ட நபர்கள் தங்களின் ஆண்டு வருவாயில் இருந்து 10 முதல் 20 மடங்கு தொகை கிடைக்கும் வகையிலான திட்டத்தில் சேர்வது நல்லது. அதேபோல 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஆண்டு வருவாயில் 5 முதல் 10 மடங்கு வரையிலான தொகை கிடைக்கும் வகையிலான திட்டத்தில், ஆயுள் காப்பீட்டை நிர்ணயித்துக்கொள்ளலாம். கால அளவு, காப்பீட்டுத் திட்டம் ஓய்வுபெறும் வயது வரை நீடிக்கும்.

கடன் பாக்கிகள்: கடன்கள் மற்றும் நிதிப் பொறுப்புகள் அடிப்படை ஆயுள் காப்பீட்டில் சேர்க்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட நபர் முன்கூட்டியே இறந்தால், அவரது குடும்பத்தினர்மீது கடன் சுமை விழுவது இதன்மூலம் தவிர்க்கப்படும்.

சிக்கலான நோய்களுக்கான சலுகைகள்: நமது வாழ்க்கை முறைகளில் சிலருக்குச் சிக்கலான பல நோய்கள் வந்துவிடுவதுண்டு. வருவாய் ஈட்டும் நபருக்கு அவ்வாறு நோய் ஏற்பட்டால், அதற்கு உதவும் வகையில் காப்பீடு அமைய வேண்டியது முக்கியம். இதுபோன்ற அம்சங்கள் உள்ள காப்பீட்டுத் திட்டங்களில் இணைந்தால், வருவாய் ஈட்டும் நபர் சிக்கலான நோய்களால் பாதிக்கப்படும்போது ஒரு பெரிய தொகை கிடைக்கும்.

ஒரு தனி நபர் ஆயுள் காப்பீட்டு பாலிசிக்கு விண்ணப்பிக்கும்போது காப்பீடு வழங்கும் நிறுவனத்தின் சார்பில் பல்வேறு தகவல்கள் கேட்கப்படும். வாடிக்கையாளர்கள் அவை அனைத்திற்கும் முறையாகப் பதில் அளிக்க வேண்டும். குறிப்பாக, தங்களது பழக்கவழக்கங்கள், குடும்பத்தினரின் ஆரோக்கியம், உடல்நலம் தொடர்பான விவரங்கள் ஆகியவற்றைத் தெளிவாகக் கூறவேண்டும். இதன்மூலம் அந்த வாடிக்கை யாளருக்கு எவ்வளவு தொகைக்குக் காப்பீடு வழங்கலாம் என்பதைக் காப்பீட்டு நிறுவனம் மதிப்பிட்டு, சரியான தொகைக்குக் காப்பீடு வழங்க வழிவகை ஏற்படும். தவறான தகவல்களை அளித்தல் அல்லது சில தகவல்களை அளிக்காமல் தவிர்த்தல் போன்றவை பின்னர் இழப்பீடு கோரும்போது சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே, உண்மையான மற்றும் சரியான தகவல்களை வழங்க வேண்டும். அனைத்து விவரங்களையும் நேர்மையான முறையில் வழங்கினால், காப்பீட்டு நிறுவனம் பாலிசிதாரரின் குடும்பத்தினருக்கு எந்தச் சிக்கலும் இன்றி பணத்தை வழங்க ஏதுவாக அமையும்.

சுருக்கமாகச் சொன்னால் டேர்ம் இன்ஷூரன்ஸ், குடும்பத்தின் எதிர்கால இலக்குகளைப் பாதுகாப்பதுடன் பொருளாதாரச் சிக்கலில் இருந்து குடும்பத்தினரை விடுவிக்கும். மேலும், வருவாய் ஈட்டும் நபருக்கு இது ஒரு மிகப் பெரிய பரிசாகும். தனக்குப்பின் தனது குடும்பம் பற்றிய கவலைகளைத் தவிர்த்து, மனநிம்மதியை வழங்கும்.

டேர்ம் இன்ஷூரன்ஸ்... - குடும்பத்தைக் காக்கும் கவசம்!

வங்கிசாரா நிதி நிறுவனம்... ஆர்.பி.ஐ எச்சரிக்கை!

ம் நாடு முழுக்க உள்ள 9,491 வங்கிசாரா நிதி நிறுவனங்கள் அதிக அளவில் அபாயம் (High Risk) உள்ளதாக இருப்பதாக ரிசர்வ் வங்கி எச்சரித்திருக்கிறது. இந்த நிதி நிறுவனங்களில் ரூ.10 லட்சத்துக்கு மேல் பணப் பரிமாற்றம் செய்யும்போது அதைக் கண்காணிப்பதற்கு நிதி அதிகாரி யாரையும் நியமிக்கவில்லை. எனவே, இந்த நிதி நிறுவனங்களில் தவறுகள் நடக்க வாய்ப்பு உண்டு என எச்சரிக்கை செய்திருக்கிறது ஆர்.பி.ஐ. பொதுமக்களிடமிருந்து பணம் வசூலிப்புத் தடுப்பு சட்டத்தின்படி, கூட்டுறவு வங்கிகள் உள்பட எல்லா நிதி நிறுவனங்களின் பணப் பரிவர்த்தனை களையும் நிதிப் புலனாய்வு மையம் மிகவும் உன்னிப் பாகக் கவனித்து வருகிறது.