நடப்பு
அறிவிப்பு
Published:Updated:

நீண்ட கால மூலதன ஆதாய வரி... பற்றாக்குறையைச் சமாளிக்க என்ன வழி?

நீண்ட கால மூலதன ஆதாய வரி... பற்றாக்குறையைச் சமாளிக்க என்ன வழி?
பிரீமியம் ஸ்டோரி
News
நீண்ட கால மூலதன ஆதாய வரி... பற்றாக்குறையைச் சமாளிக்க என்ன வழி?

மீ.கண்ணன், நிதி ஆலோசகர், radhaconsultancy.blogspot.in

நீண்ட கால மூலதன ஆதாய வரி... பற்றாக்குறையைச் சமாளிக்க என்ன வழி?

ங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில், நீண்ட கால மூலதன ஆதாயம் ரூ.1 லட்சத்துக்கு மேற்படும் போது 10% வரி கட்ட வேண்டும் என்று சமீபத்தில் வெளியான பட்ஜெட்டில்

நீண்ட கால மூலதன ஆதாய வரி... பற்றாக்குறையைச் சமாளிக்க என்ன வழி?

அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரியானது, எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வருபவர்களுக்குக் கிடைக்கும் லாபத்தில் ஒருபகுதியானது வரி கட்டுவதற்கே போய்விடும் (பார்க்க அட்டவணை-1). எனவே, இந்த வரியினால் ஏற்படும் பற்றாக்குறையை எப்படிச் சமாளிப்பது?

உதாரணமாக, ஒருவர் தனது வருங்காலத் தேவைக்காக ரூ.1 கோடி, 15 வருட முடிவில் கிடைக்க வேண்டும் என்று  திட்டமிடுகிறார். ஆண்டுக்குச் சராசரியாக 12.5% வருமானம் அவருக்குக் கிடைக்கிறது எனில், அவர் ரூ.1 கோடியை அடைய 14 ஆண்டுகள் 19,486 ரூபாயைத் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும்.

நீண்ட கால மூலதன ஆதாய வரி... பற்றாக்குறையைச் சமாளிக்க என்ன வழி?

இப்போது நீண்ட கால மூலதன ஆதாய வரி நடைமுறைக்கு வந்திருப்பதால், இனி மாதமொன்றுக்கு ரூ.20,930 முதலீடு செய்தால் மட்டுமே இலக்குத் தொகையான ரூ.1 கோடியானது அவருக்குக் கிடைக்கும். அதாவது, மாதமொன்றுக்கு ரூ.1,444 அதிகமாக முதலீடு செய்ய வேண்டும்.

ரூ.1 கோடியை இலக்குத் தொகையாக வைத்து 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் முதலீடு செய்பவர்கள், அதிகமாகச் செய்ய வேண்டிய தொகை  எவ்வளவு என்ற விவரம் அட்டவணை 2-ல் தரப்பட்டுள்ளது. இலக்குத் தொகையை எஸ்.ஐ.பி தொகையில் டாப் அப் செய்வது அவசியம்.