நடப்பு
அறிவிப்பு
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

கடந்த வாரத்தின் தொடக்கத்தில், இந்தியப் பங்குச் சந்தை வர்த்தகம் ஏற்றத்தில் தொடங்கி னாலும், காளையின் போக்கு வாரம் முழுவதும் தொடரவில்லை. இதனால் விலைநகர்வுகள் வாரத்தின் இறுதியில் இறக்கத்தைச் சந்தித்தன.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!



பங்கு விற்பனை பெரிய அளவில் இல்லை என்பதால், வழக்கமான லாபம் பார்த்தல் மற்றும் லாங்க் பொசிஷன்களிலிருந்து வெளியேறுதல் போன்ற காரணங்களால் ஏற்றம் தடைபட்டிருப் பதைப் பார்க்க முடிகிறது. 

கடந்த இதழில், நிஃப்டி ஃப்யூச்சர்ஸ் 10300 என்ற சப்போர்ட் நிலையில் வலுவாக இருப்ப தாகக் கூறியிருந்தது சரியாகவே அமைந்தது. ஆனால், 10600 என்ற நிலையில் நல்ல ரெசிஸ்டன்ஸ் நிலையும் உருவாகியிருக்கிறது. இதனால், மூன்றாவது முறையாக சந்தை இறங்கி, இந்த வரம்பு நிலையில் வர்த்தகமாகத் தொடங்கியிருக்கிறது.

எனவே, சந்தையை நகர்த்தும் செய்திகள் எதுவும் இல்லாத நிலை யிலும், நிஃப்டி இந்த வரம்புகளுக்குள் வர்த்தகமாகி, தன்னை இந்த வரம்புக் குள் தக்கவைத்துக் கொள்கிறது. ஆப்ஷன்  வர்த்தகமும்  இதை உறுதி செய்வதாக இருக்கிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இந்த வாரத்தில், ஓப்பன் இன்ட்ரஸ்ட் மாற்றமடைந்து இரண்டு விதமான ஆப்ஷன் வர்த்தகங்களையும் கொண்டதாக அமைந்தது. எனவே, 10400 /  10700 என்ற வரம்புக்குள் அதிக ஓப்பன் இன்ட்ரஸ்ட் இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆனால், நிஃப்டியின் இறக்கத் துக்குக் காரணமாக பேங்க் நிஃப்டி தான் இருக்கிறது. நிஃப்டி ஏற்றமடைந் தாலும் பேங்க் நிஃப்டி பலவீனமாக இருக்கிறது. பொதுத்துறை வங்கிப் பங்குகளின் இறக்கம், தனியார் வங்கிப் பங்குகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி, அவற்றையும் இறக்கமடையச் செய்துவிடுகின்றன.

ஐ.டி துறையின் செயல்பாடும் குறைவாகவே இருக்கிறது. பிற துறைகள் கலவையாகச் செயலாற்றி, காளையின் போக்குக்கு ஓரளவுக்கு உதவி செய்துள்ளன. 

மேற்சொன்ன வரம்பில் சந்தை தன்னை தக்கவைத்துக்கொண்டாலும் சந்தை சற்றுக் கரடியின் போக்கில்தான் இருக்கும். எனவே, வரும் வாரம் 10300 என்ற நிலையை மீண்டும் சந்தை சந்திக்கலாம். இந்த நிலையில், சந்தை எவ்வாறு நகர்கிறது என்பதை வைத்தே குறுகிய காலத்துக்குச் சந்தையின் போக்கு இருக்கும்.

எனவே, பெரும்பாலும் தீவிரமான வர்த்தகங்களைத் தவிர்க்கவும். விற்பதையும் வாங்குவதையும் நிதானமாக,  தேர்ந்தெடுத்துச் செயல்படுவது அவசியம். இப்போதைக்குக் காத்திருப்பது நல்லது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ரத்தினமணி மெட்டல்ஸ் அண்டு டியூப்ஸ் (RATNAMANI)

தற்போதைய விலை: ரூ.960

வாங்கலாம்

சில குறிப்பிட்ட மெட்டல் பங்குகள், சந்தையில் தொடர்ந்து நன்றாகச் செயலாற்றி வருகின்றன. அவற்றின் வர்த்தக போக்கும், பெரும்பாலும்  தடங்கல்கள் ஏதுமின்றி நன்றாகவே இருப்பதை சார்ட் பேட்டர்ன்களில் தெரிகிறது. அவற்றில் ஒன்றுதான், ரத்தினமணி மெட்டல்ஸ். சமீபத்தில், இந்த நிறுவனப் பங்கில் ஏற்பட்ட இறக்கம், அதன் நீண்ட கால மூவிங் ஆவரேஜின் சப்போர்ட் நிலைக்கு விலையைக் கொண்டுவந்திருக்கிறது.

இதன் சார்ட்டில் உள்ள ஆசிலேட்டர் பேட்டர்ன், இந்தப் பங்கின் இறக்கம் முடிவுக்கு வந்ததைக் காட்டுகிறது. கடந்த வார கேண்டில் பேட்டர்னும் இதை உறுதிப்படுத்துகிறது. எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். ரூ.1,025 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.930-க்குக்கீழ் வைத்துக்கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

மெடிகாமென் பயோடெக் (பி.எஸ்.இ மட்டும்)

தற்போதைய விலை: ரூ.744.80

வாங்கலாம்

முன்னணி பார்மா பங்குகள் ஏற்றமடைவதற்குத் திணறும் நேரத்தில், சில மிட்கேப் ஃபார்மா பங்குகள் ஏற்றமடைந்து வர்த்தகமாகின்றன. அவற்றில் ஒன்றாக மெடிகாமென் உள்ளது. இந்தப் பங்கு, சந்தை இறங்கும் நேரத்திலும் ஏற்றத்தின் போக்கில் தொடர்ந்து வர்த்தகமாகி வந்திருக்கிறது.
கடந்த சில வாரங்களில், இதில் ஏற்பட்ட இறக்கம் முடிவுக்கு வந்து, புதிய ஏற்றத்திற்குத் தயாரானது. இந்தப் பங்கு தற்போது ரூ.880 வரை உயர வாய்ப்புள்ளது. எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.715-க்குக்கீழ் வைத்துக் கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஃபர்ஸ்ட் சோர்ஸ் சொல்யூஷன்ஸ் (FSL)

தற்போதைய விலை 53.30


வாங்கலாம்

பல ஐ.டி துறை மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளில், புதிதாக வாங்கும் ஆர்வமும் முதலீடுகளும் வருவதைப் பார்க்க முடிகிறது. ஃபர்ஸ்ட்  சோர்ஸ் சொல்யூஷன்ஸ் பங்கில் உருவாகியுள்ள நல்ல ரென்ட்டிங் பேட்டர்ன், சில நிதானமான அக்யூ முலேஷன் பேர்ட்டன்களை உருவாக்க லாம். எனவே, இந்தப் பங்கு ப்ரேக் அவுட் ஆகி புதிய உச்சத்தை அடையத் தயாராகியுள்ளது.

 எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். குறுகிய காலத்தில், வரும் வாரங்களில் ரூ.65-70 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.45-க்கு கீழ் வைத்துக் கொள்ளவும்.

தொகுப்பு: ஜெ.சரவணன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.