நடப்பு
அறிவிப்பு
Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் / அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் / அக்ரி கமாடிட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் / அக்ரி கமாடிட்டி

தி.ரா.அருள்ராஜன் தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் / அக்ரி கமாடிட்டி

தங்கம் (மினி)

பொதுவாக, தங்கம் ஏறுமுகமான டிரெண்டில் இருந்தாலும், தற்போது வலிமையான தடை நிலையைச் சந்தித்துள்ளது. தற்போது இந்தத் தடையைத் தாண்டமுடியாமல் கீழ்நோக்கி இறங்க ஆரம்பித்துள்ளது.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் / அக்ரி கமாடிட்டி


தங்கமானது, நாம் கடந்த இதழில் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 30400-ஐ உடைத்து இறங்க ஆரம்பித்துள்ளது. சென்ற வாரம் திங்களன்று மேலேயும் போகமுடியாமல், கீழேயும் போக முடியாமல் திணறியது. அதேபோல்,  செவ்வாயன்று காலையில் மேலே ஏறமுடியாமல் திணறியபோது, கரடிகள் சந்தையில் வலுவாக இறங்கின. 

நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 30400-ஐ கரடிகள் உடைத்தன. அன்று குறைந்தபட்சப் புள்ளியாக 30262-ஐ தொட்டு, சந்தை முடியும்போது 30306-ல் முடிவடைந்தது.

புதனன்று சந்தை சற்றே பக்கவாட்டு நகர்வில் முடிந்தது. ஆனால், வியாழனன்று, ஒரு கேப்டவுனில் தொடங்கி, படிப்படியாக இறங்கியது.  அதோடு மட்டும் அல்லாமல், புதன் கிழமையின் குறைந்தபட்ச புள்ளியான 30280-ஐ உடைத்துப் பலமாக இறங்கியது. வியாழனன்று குறைந்தபட்சப் புள்ளியாக 30138-ஐ தொட்டது.

 இனி என்ன நடக்கலாம்? தங்கம் டிரெண்ட் லைனை உடைத்து இறங்கியுள்ளது. இனி வலிமையான இறக்கங்கள் வரலாம் என்பதையே இது காட்டுகிறது.  கீழே 30050 என்பது மிக முக்கிய ஆதரவு; இதை உடைத்தால் வலிமையான இறக்கம் வரலாம். அதுவரை ஒரு புல்பேக் ரேலியும் வரலாம்.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் / அக்ரி கமாடிட்டி

வெள்ளி (மினி)

வெள்ளி, ஒரு தொடர் இறக்கத்திற்கு மாறி யுள்ளது. சென்ற வாரத்தின் முடிவு விலையிலிருந்து படிப்படியாக இறங்க ஆரம்பித்துள்ளது.

வெள்ளியானது, ஒவ்வொரு வாரமும், நாம் தந்துள்ள தடைநிலையைத் தாண்ட முடியாமல், இறங்கிக்கொண்டு இருப்பதைப் பார்க்கிறோம்.  சென்ற வாரமும் 39450 என்று நாம் கொடுத்து இருந்த தடைநிலையை வெள்ளியால் தாண்ட முடியவில்லை. சென்ற வாரம், திங்களன்று ஒரு கேப் அப்பில் தொடங்கினாலும், இறங்கியே முடிந்தது. இப்படி ஒவ்வொரு நாளும் ஒரு லோயர் டாப் மற்றும் லோயர் பாட்டம் அமைப்பைத் தோற்றுவித்து, வெள்ளி இறங்குமுகமாக உள்ளதை நிரூபித்து வருகிறது.

இனி என்ன நடக்கலாம்? ஒரு தொடர் இறக்கத்தில் உள்ள வெள்ளி, மேலே 38920 என்ற தடைநிலையைக் கொண்டுள்ளது. கீழே 38760 என்ற எல்லையை ஆதரவாகக் கொண்டு இயங்கி வருகிறது.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் / அக்ரி கமாடிட்டி

கச்சா எண்ணெய் (மினி)

கச்சா எண்ணெய் திங்கள்கிழமை வரை வலிமையைக் காட்டியது. அதன்பின், திசை திரும்பிக் கீழே இறங்க ஆரம்பித்துள்ளது.

கச்சா எண்ணெய்,   சென்ற வாரம் 4100 என்ற தடைநிலையைத் தாண்டி 4173 வரைச் சென்றது.  ஆனால், செவ்வாயன்று ஓரளவுக்குத் தாக்குப் பிடித்த கச்சா எண்ணெய் விலை, புதனன்று புதிய இறக்கத்தைத் தோற்றுவித்து, கீழ்நோக்கி இறங்கிவிட்டது. குறிப்பாக, வியாழனன்று ஒரு கேப் டவுனில் தொடங்கி, பின் வலிமையாக இறங்கி, கொடுத்திருந்த 3960 என்ற ஆதரவை உடைத்தது.  ஆனால், மீண்டும் ஏறி 3960-க்கு சற்று மேலே முடிந்துள்ளது.

இனி என்ன நடக்கலாம்? தொடர்ந்து மூன்று நாள்களாக இறங்கி உள்ளதால், ஒருபுல்பேக் ரேலி வரலாம். கீழே ஆதரவான 3960-யை மீண்டும் உடைத்தால், இறக்கம் வலிமையானதாக இருக்கலாம்.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் / அக்ரி கமாடிட்டி

மென்தா ஆயில்

மென்தா ஆயில், தொடர்ந்து பெரிய இறக்கத்தில் இருந்துகொண்டு இருப்பதைப் பார்த்தோம். 2017 டிசம்பர் தொடக்கத்தில் 1991 என்ற உச்சத்திலிருந்து விழ ஆரம்பித்தது. மென்தா ஆயில் கடும் வீழ்ச்சியில் இருந்தபோது, அதே டிசம்பர் மாத இறுதியில் 1540 என்ற எல்லையில் ஒரு பாட்டத்தைத் தோற்றுவித்து மீண்டது.  இந்த மீட்சி 50% என்கிற அளவில் அதாவது, 1757 என்ற புள்ளி வரை, ஒரு புல்பேக் ரேலியாக மேல்நோக்கி நகர்ந்து. அதன்பின், மென்தா ஆயில் இறக்கம் தொடர்ந்தது என்று பார்த்தோம்.

அதேபோல், 2018 பிப்ரவரி முதல் வாரத்தில் 1603 என்ற புள்ளியிலிருந்து இறங்க ஆரம்பித்த மென்தா ஆயில், அதே பிப்ரவரி மாத முடிவில் 1246 என்ற ஆதரவை எடுத்து மேல்நோக்கி திரும்பி உள்ளது.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் / அக்ரி கமாடிட்டி

மென்தா ஆயில், நாம் சென்ற வாரம்  கொடுத்திருந்த ஆதரவான 1240 என்ற எல்லையை அந்த வாரம் முழுவதும் தக்கவைத்துள்ளது. திங்களன்று ஆதரவை எடுத்து மேலே நகர்ந்து, பின்னர் உச்சமாக 1321-ஐ தொட்டு, சற்றே இறங்கியது.

அடுத்து செவ்வாயன்று, ஒரு கேப் அப்பில் தொடங்கி, உச்சமாக 1347-ஐ தொட்டது.  அதன் பின் இறங்கி, 1279 என்ற புள்ளியில் முடிந்தது.  இந்த இறக்கம் அடுத்த நாளும் தொடர்ந்து, 1242 என்ற புள்ளியைத் தொட்டு மேல்நோக்கித் திரும்பியது.

இனி என்ன செய்யலாம்? இன்னும் 1240 என்ற ஆதரவு இரண்டாவது வாரமாகத் தக்கவைத்துள்ள தால், அது ஒரு வலிமையான ஆதரவாக மாறி யுள்ளது. தற்போது மேலே 1345 என்ற புள்ளி தடைநிலையாக உள்ளது.  எல்லா வாங்குதலுக்கும் 1240 என்ற எல்லையை நஷ்டத்தடையாக வைத்து வியாபாரம் செய்யலாம்.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் / அக்ரி கமாடிட்டி

காட்டன்

மென்தா ஆயில் திசை தெரியாமல் திணறிக் கொண்டிருக்க, காட்டன் தெளிவாக மேல்நோக்கி திரும்பி உள்ளது.

காட்டன், சென்ற வாரத்தின் முதல் நாளிலிருந்தே வலிமைகாட்ட ஆரம்பித்துள்ளது.  சென்ற வாரம், திங்களன்று நாம் கொடுத்த தடைநிலையான 20270-ஐத் தாண்டி 20350 என்ற உச்சத்தைத் தொட்டது. 

செவ்வாயன்று சற்றுத் தடுமாறிய காட்டன், புதனன்று ஒரு வலிமையான ஏற்றத்தைக் கொடுத்தது.  இந்த ஏற்றம் வலிமையான ஏற்றமாக மாறி, 20600 என்ற புள்ளி வரை ஏறியது.  ஆனாலும், காளைகளின் இந்த ஏற்றத்தை, கரடிகள் போராடித் தடுத்தன.

காட்டன் உச்சமாக 20600-ஐ தொட்டாலும்,  சந்தை முடியும்போது 20360 என்ற எல்லையில் முடிந்தது. அடுத்த நாள் வியாழனன்று, காளைகள் முழுப் பலத்தையும் திரட்டி, வலுவான ஒரு ஏற்றத்தைக் காட்டி, ஒரு கேப் அப்பில் துவக்கின. அதாவது, 20360 என்ற புள்ளியில் துவங்கி, பின்பு உச்சமாக 20840-ஐ தொட்டது. ஆனாலும், கரடிகள் விடாது துரத்தி, உச்சத்தில் இருந்து இறக்கி, முடியும்போது 20600 என்ற புள்ளியில் முடித்துள்ளன. இதனால், கரடிகள் மீண்டும் இந்த ஆட்டத்தில் இறங்கி இருப்பது போல்தான் தோன்றுகிறது.

இனி என்ன செய்யலாம்? காட்டன், வாரத்தின் அடிப்படையில், கடந்த வாரம் ஏறி முடிந்தாலும், கடைசி தினத்ன்று, மிகப் பெரிய ஏற்றத்திற்கு காளைகள் முயன்று அதில் தோல்வி அடைந்தன. 

அதாவது, ஏற்றத்தின் முடிவில்  டோஜி என்ற உருவமைப்பு தோன்றியதால், கீழே ஆதரவு, 20500 உடைக்கப்பட்டால், நல்ல இறக்கம் வரலாம். எனவே, காட்டன் டிரேடர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்பது அவசியம்!