நடப்பு
தொடர்கள்
Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
News
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

மீ. கண்ணன், நிதி ஆலோசகர், Radhaconsultancy.blogspot.in

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுடன் ஆதார் எண்ணை இணைக்க, இந்த மார்ச் 31 கடைசித் தேதி என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.  ஒருவர், பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் பல்வேறு ஃபண்டுகளில் முதலீடு செய்திருந்தாலும்,  அனைத்து ஃபண்டுகளுடனும் ஆதார் எண்ணை இணைக்கவேண்டியதில்லை.

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு முதலீட்டாளர் சார்ந்த சேவையை கேம்ஸ், கார்வி, சுந்தரம் மற்றும் ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் இந்தியா போன்ற நான்கு நிறுவனங்கள் அளித்து வருகின்றன. இந்த  நிறுவனங்களில் நமது ஃபண்டுகள் எந்த நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது என்று அறிந்துகொண்டு, அந்த நிறுவனங்களில் ஆதார் எண்ணை இணைத்துவிட்டால்  போதும், நிறுவனத்தில் உள்ள எல்லாத் திட்டங்களிலும் ஆதார் இணைக்கப்படும். 

ஒருவர் ஏழு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் உள்ள  ஏழு ஃபண்டுகளில் முதலீடு செய்துள்ளார் என்று வைத்துக் கொள்வோம். உதாரணமாக, ஒரு ஃபண்ட்  கேம்ஸ்-லும், மற்ற ஆறு ஃபண்டுகள் கார்வியிலும் இருந்தால், கேம்ஸ் மற்றும் கார்வியின் இணையதளங்களுக்குச் சென்று, ஆதார் எண்ணை இணைத்துவிட்டால் அந்த ஏழு ஃபண்டுகளுடன் ஆதார் எண் இணைந்துவிடும்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

ஆதார் எண்ணை இணைக்கத் தேவையான லிங்குகள் இதோ...

CAMS - http://www.camsonline.com/InvestorServices/COL_Aadhar.aspx

SUNDARAM - https://www.sundarambnpparibasfs.in/web/service/aadhaar/

KARVYhttps://www.karvymfs.com/karvy/Aadhaarlinking.aspx

FRANKLIN TEMPLETON
- https://accounts.franklintempletonindia.com/guest/#/customerservices/updateaadhaar/accountdetails

ஆன்லைன் மூலம் இணைக்க இயலாதவர்கள், மேற்கண்ட நிறுவனங்களின் அலுவலகங்கள், முதலீடு செய்திருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள், மற்றும் மேற்கூறிய சேவை நிறுவனங்களின் அலுவலகங் களுக்குச் சென்று ஆதார் கார்டு, பான் கார்டு  மற்றும் அதன் நகலுடன் சென்று இணைத்துக் கொள்ளலாம்.

மார்ச் 31-ம் தேதிக்குள் இதைச் செய்யாவிட்டால், புதிதாகப் பணத்தை முதலீடு செய்யவும் முடியாது, திரும்ப எடுக்கவும் முடியாது!