நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

கடந்த வாரத்தில், ‘‘இந்தியப் பங்குச் சந்தை ஒரு ரேஞ்ச் பவுண்டுக்குள் வர்த்தகமாகும். ஒட்டுமொத்த சந்தை யானது கரடியின் பிடியில் இருக்கும்” என்று எழுதியிருந்தோம். இது நடக்கவே செய்திருக்கிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!


சந்தை இறக்கம் எதிர்பார்க்கப் பட்டதைவிட அதிகமாகவே கடந்த வாரம் இருந்தது.  நிஃப்டியின் ஆதரவு நிலை 10300-ஆக இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், தேவை குறைந்து, பங்குகளின் விலை இறக்கம் கண்டதால் வெள்ளிக்கிழமை, நிஃப்டி புள்ளிகள் 10227-க்கு இறங்கியது.

வார இறுதியில், வர்த்தகத்தின் இடையே சந்தை ஏற்றம் கண்டாலும் விரைவிலேயே கரடியின் ஆதிக்கத்தில் சிக்கிக்கொண்டதைப் பார்க்க முடிந்தது.

நிஃப்டி இப்போது சுமார் 9%  இறக்கம் கண்டுள்ளது. இதைவிட அதிகமாக பேங்க் நிஃப்டி 12%  இறக்கம் கண்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் பேங்க் மோசடியால், வங்கிப் பங்குகளின் விலை கண்டபடி இறக்கம் கண்டு வருகின்றன. நிஃப்டி புள்ளிகள் இறக்கத்துக்கு இது முக்கியக் காரணமாக இருக்கிறது.

பிப்ரவரி மாத குறைந்தபட்ச நிலைக்கு நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீடுகள் இறக்கம் கண்டுள்ளன. ஆனால், ஸ்மால் மற்றும்  மிட் கேப் குறியீடுகள் இன்னும் அவற்றின் பிப்ரவரி மாத குறைந்தபட்ச நிலைக்கு இறங்கவில்லை. 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

அந்நிய நிதி நிறுவன முதலீட் டாளர்கள் (எஃப்.ஐ.ஐ.கள்) தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்துவருவது, பெரும் பணக்காரர்கள் தற்போது பங்கு முதலீட்டிலிருந்து சற்று விலகி இருப்பது போன்றவை பங்குச் சந்தையின் சென்டிமென்ட்டைப் பாதிக்கும் விஷயங் களாக இருக்கின்றன. இந்த நிலை இன்னும் சில காலத்துக்கு நீடிக்கக்கூடும்.

தற்போது இந்தியப் பங்குச் சந்தை, செய்திகளால் நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்தச் செய்திகள் மோசமான செய்தி களாக இருக்கின்றன. பொதுத் துறை வங்கிப் பிரச்னை, அமெரிக்காவில் வர்த்தகக் கட்டணம் உயர்வு போன்றவை சந்தையை இறக்கம் காண வைத்தன. தொடர்ந்து நல்ல செய்திகள் எதுவும் வரவில்லை என்றால், சென்டிமென்ட் இன்னும் பாதிக்கக்கூடும். அதுவரைக்கும் நிஃப்டி 10500-10600 என்கிற நிலையில் வர்த்தகமாகக்கூடும். இது, வலிமையான ரெசிஸ்டென்ஸ் நிலையாக உள்ளது.

ஆப்ஷன்கள் சுமார் 10,000 என்கிற நிலையில், சப்போர்ட் நிலையாக உள்ளது. வரும் வாரத்தில், இந்த இரு நிலைகளில் சந்தை வர்த்தகமாகும் என எதிர்பார்க்கிறோம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

தேஜாஸ் நெட்வொர்க் ( TEJASNET)

360.15

வாங்கலாம்

அண்மைக் காலத்தில் புதிய தொழில்நுட்ப மாற்றங்கள் தொடர்பான துறையில் இருக்கும் பங்குகளுக்கு அதிகத் தேவை இருந்துவருகிறது. அதில் ஒன்றுதான், தேஜாஸ் நெட்வொர்க். கடந்த வாரங்களில் பங்கின் விலை, ரூ.475 என்கிற நிலையிலிருந்து ரூ.310-க்கு இறக்கம் கண்டது. வார சார்ட்டில் நீண்ட வாலை கொண்ட கேண்டில் உருவாகி இருக்கிறது. இது, இந்தப் பங்குகளில் முதலீட்டாளர்கள் அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது.

ரூ. 360-350 என்கிற விலையில் முதலீடு செய்யலாம். வரும் வாரங் களில் ரூ. 400-க்கு உயரக்கூடும். ஸ்டாப் லாஸ் ரூ.340-க்குக் கீழே வைத்துக் கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இப்கா லேப்ஸ் (IPCALAB)

679.80

வாங்கலாம்


லார்ஜ் கேப் பார்மா பங்குகளி லிருந்து மிட் கேப் பங்குகளில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. இதில் ஒரு பங்குதான் இப்கா லேப்ஸ். தற்போது ரவுண்டிங் பேட்டர்ன் உருவாகியிருப்பதால், பங்கின் விலை பிரேக் அவுட் ஆகக்கூடிய நிலை உருவாகி இருக்கிறது.

இந்தப் பங்கைத் தற்போதைய விலையில் வாங்கலாம். சில வாரங்களில் பங்கின் விலை ரூ.700-க்கு உயரக்கூடும். ஸ்டாப் லாஸ் ரூ.660 வைத்துக் கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

மாஸ்டெக் (MASTEK)

533.65

வாங்கலாம்


மாஸ்டெக், ஐடி துறையைச் சேர்ந்த மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்காகும். சார்ட்டுகளில் நல்ல பேட்டர்ன் உருவாகி இருக்கிறது. கடந்த வாரத்தில் பங்கின் விலையில் நல்ல பிரேக் அவுட் உருவாகி இருக்கிறது. பங்கின் விலை தொடர்ந்து ஏற்றம் காண வாய்ப்புள்ளது. வரும் வாரங்களில் பங்கின் விலை ரூ.575-க்கு உயரக்கூடும். ஸ்டாப் லாஸ் ரூ.515 என வைத்துக் கொள்ளவும்.

தொகுப்பு: சி.சரவணன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.