நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ட்விட்டர் சர்வே: எதில் முதலீடு செய்வீர்கள்?

ட்விட்டர் சர்வே: எதில் முதலீடு செய்வீர்கள்?
பிரீமியம் ஸ்டோரி
News
ட்விட்டர் சர்வே: எதில் முதலீடு செய்வீர்கள்?

ட்விட்டர் சர்வே: எதில் முதலீடு செய்வீர்கள்?

ட்விட்டர் சர்வே: எதில் முதலீடு செய்வீர்கள்?

ங்களுக்கு இப்போது ரூ.1 லட்சம் கிடைத்தால் எதில் முதலீடு செய்வீர்கள் என்கிற கேள்வியை நாணயம் ட்விட்டரில் (https://twitter.com/NaanayamVikatan) கேட்டிருந்தோம். இந்த சர்வேயில் கலந்துகொண்டவர்களில் 44% பேர் பங்குச் சந்தையில் முதலீடு செய்வோம் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த ஆண்டு தொடங்கி இன்றுவரை நிஃப்டியானது 2.89% இறங்கியுள்ள நிலையில், பங்குச் சந்தையானது மீண்டும் உயரும் என்கிற நம்பிக்கை இருப்பதால், அதிலேயே முதலீடு செய்யலாம் எனப் பலரும் நினைக்கின்றனர்.

ட்விட்டர் சர்வே: எதில் முதலீடு செய்வீர்கள்?

கடந்த பத்து ஆண்டுகளில் தங்கமும் ரியல் எஸ்டேட்டும் மிகக் குறைந்த வருமானத்தையே அளித்திருந்த நிலையில், தங்கத்தில் 41% பேரும், ரியல் எஸ்டேட்டில் 15% பேரும் முதலீடு செய்யத் தயாராக இருப்பது சற்று விநோதமான விஷயமே.

இந்த சர்வேயில் கலந்துகொண் டவர்களில் சிலர் அளித்த கமென்ட்களும் சுவாரஸ்யமாக உள்ளன. முரளி அருணகிரி என்பவர், ‘‘என்னுடைய கடனை அடைப்பேன்’’ என்று புத்திசாலித் தனமான பதிலைச் சொல்லி யிருக்கிறார். வைரமுத்து என்பவர் ‘‘முதலில்  கிடைக்கட்டும், அப்புறம் பார்ப்போம்யா’’ என்று கமென்ட் போட்டிருக்கிறார். வாரன் ஜுன்ஜுன்வாலா என்கிற பெயரில் ட்விட்டர் அக்கவுன்ட் வைத்திருப்பவர், ‘‘நாணயம் விகடன் ஃபாலோ பண்ணியும் 40% ஆளுங்க கோல்டுலதான் இன்வெஸ்ட் பண்ணுவேன்னு சொல்வது ஆச்சர்யம்’’ என்று சரியாகச் சொல்லியிருக்கிறார்.

ட்விட்டர் சர்வே: எதில் முதலீடு செய்வீர்கள்?

ஒரே ஒரு முதலீட்டில் அத்தனை பணத்தையும் முதலீடு செய்வது எப்போதும் ஆபத்து தான். சரியான போர்ட்ஃபோலி யோவை உருவாக்கி, அதன்படி முதலீடு செய்வதே சரி!

- ஏ.ஆர்.கே