
ஃபண்டமென்டல் விஷயங்களை வைத்தே பங்கை வாங்கலாமா?
நாணயம் விகடன், பங்குச் சந்தை ஃபண்டமென்டல் அனாலிசிஸ் இரண்டு நாள் பயிற்சி வகுப்பை, கடந்த வாரம் திருச்சியில் நடத்தியது. எக்ட்ரா பயிற்சி மையத்தின் முதன்மைச் செயல் அதிகாரி தி.ரா.அருள்ராஜன், இந்தப் பயிற்சி வகுப்பைச் சிறப்பாக நடத்தினார். பயிற்சி வகுப்பில் அவர் சுட்டிக்காட்டிய முக்கியமான சில விஷயங்கள்...

“நம்முடைய வயது, ரிஸ்க் எடுக்கும் திறன், இலக்கு மற்றும் நம்மிடம் இருக்கும் பணம் ஆகியவற்றை வைத்தே முதலீடு களைத் திட்டமிட வேண்டும். பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய விரும்புபவர்கள் கட்டாயம் அதன் ஃபண்டமென்டல் விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். முதலீட்டு விஷயத்தில் நமக்கான போர்ட்ஃபோலியோ ஒன்றை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
நீண்டகால அடிப்படையில் ஒரு பங்கை வாங்குவதாக இருந்தால், நிறுவனத்தின் ஃபண்டமென்டல் விஷயங்களை வைத்தே அதன் பங்கை வாங்கலாமா வேண்டாமா என்பதை முடிவுசெய்ய வேண்டும். டிரேடராக இருப்பின் ஃபண்டமென்டல் குறித்துப் பெரிதாகப் பார்க்க வேண்டியதில்லை. அந்தப் பங்கு எதுவரை உயர வாய்ப்புள்ளது என்பதே போதுமானது. பங்குகளின் செய்திகளைக் கவனிக்க வேண்டும்.

ஃபண்டமென்டல் அனாலிசிஸ்படி ஒரு நிறுவனப் பங்கின் பி.இ விகிதம் குறைவாக இருக்கும் போது வாங்கலாம். அதிகமாக இருக்கும்போது விற்க வேண்டும். நிறுவனத்துக்குக் கடன் எவ்வளவு இருக்கிறது, டிவிடெண்ட் மற்றும் டிவிடெண்ட் யீல்டு எப்படி என்பதையெல்லாம் வைத்தும் ஒரு பங்கை வாங்குவது குறித்து முடிவெடுக்கலாம்” என்றார். அருள்ராஜன்.
பயிற்சியின் இறுதியில் முதலீட்டாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளிக்கப்பட்டது.
- ஜெ.சரவணன்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்