மற்ற எபிசோடுகள்
Published:Updated:

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - தயக்கத்தை உடைக்கும் பயிற்சி!

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - தயக்கத்தை உடைக்கும் பயிற்சி!
பிரீமியம் ஸ்டோரி
News
டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - தயக்கத்தை உடைக்கும் பயிற்சி!

சூப்பர் ஸ்டார்ட்அப்களின் தொழில் ஜாதகம்! - 14

ப் டாக்ஸியில் இருந்து ஆன்லைன் ஷாப்பிங் வரை பல புத்தம்புது ஐடியாக்களை இந்த உலகுக்குத் தந்தது ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்தான். ஸ்டார்ட்அப் கையில் எடுக்கும் பிரச்னைகள் எதுவுமே புதியவை கிடையாது. நாள்தோறும் சமூகத்தில் நாம் எல்லோரும் சந்திக்கும் அன்றாடப் பிரச்னைகள்தான். ஆனால், அந்தப் பிரச்னைகளுக்கு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தரும் தீர்வுகள்தான் புதுமையானவைகளாக இருக்கின் றன. இதனால்தான் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மிக எளிதாக மக்க ளால் ஏற்றுக்கொள்ளப் படுகின்றன.

அந்த வரிசையில் வார்ஹார்ஸ் நிறுவனம்கூட, விநோதமான பிரச்னைகளுக்குத் தீர்வளித்துவரும் நிறுவனம்தான்.  இந்த நிறுவனத்துக் கான ஐடியா எங்கிருந்து வந்தது என்பது குறித்துப் பகிர்ந்துகொள் கின்றனர் விஷால் மற்றும் அவருடைய குழுவினர்.

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - தயக்கத்தை உடைக்கும் பயிற்சி!

   இன்ஸ்பிரேஷன்

“நாங்கள் அனைவருமே பொறியியல் மாணவர்கள். வெவ்வேறு கல்லூரிகளில் படித்த வர்கள். ஆனால், எங்கள் அனைவருக்கும் பொதுவாக ஒரே ஒரு விஷயம் இருந்தது. அது, மேடை அனுபவம். பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் நாங்கள் அனைவருமே பேச்சுப்போட்டிகள், பட்டி மன் றங்கள், மேடை நாடகங்கள் போன்ற வற்றில் பங்கேற்றவர்கள்.

அப்படித்தான் நாங்கள் அனைவருமே நண்பர்களானோம். இந்தப் போட்டிகளில் நாங்கள் கலந்துகொள்ளக் காரணம், எங்கள் ஆர்வம் மட்டும்தான். ஆனால், இந்தப் போட்டிகள் எல்லாம் எங்களுக்கு எந்தளவுக்கு பாசிட்டிவ்- ஆன மாற்றங்களைத் தந்தன என்பதைக் கல்லூரிக் காலத்திலேயே உணர்ந்தோம்.

கல்லூரியில் நன்றாகப் படிக்கும் மாணவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். ஆனால்,  மேடை யில் நின்று ஐந்து நிமிடம்  பேசுவது என்றால் மிகவும் தயங்குவார்கள்;  மேடைகளில் மட்டுமல்ல, நேர் காணல், குழு விவாதம் என எல்லா இடங்களிலும் தயக்கத்துடன்தான் இருப்பார்கள். இந்தப் பிரச்னை யால் பல நல்ல வாய்ப்புகளை இழப்பார்கள். எங்கள் நண்பர் களில் பலரும்கூட, இந்தத் தயக்கத்தால் நல்ல வாய்ப்புகள் பலவற்றை இழந்திருக்கிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் அனைவருமே படிப்பில் கில்லிகள். இதையெல்லாம் பார்த்த்போது தான் எங்கள் மேடை அனுபவம் எங்களை எந்தளவுக்கு மெருகேற்றி யிருக்கிறது, வாழ்க்கையில் எப்படி யெல்லாம் உதவியாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டோம். நண்பர்களின் இந்தப் பிரச்னைக்கு எப்படி உதவலாம் என்று யோசித் தோம். அதுதான் வார்ஹார்ஸ் உருவாக விழுந்த விதை.

  அடித்தளம்


இந்தப் பிரச்னை வெறும் தயக்கம் சார்ந்தது மட்டுமல்ல,  அறிவியல் மற்றும் உளவியல் சார்ந்தது. இதனால் ஏன் மாணவர்கள் பாதிக்கப்பட வேண்டும்..? இளமையிலேயே எங்களைப்போல பயிற்சி பெற்றால் அவர்களும் எளிதாக இதனைக் கையாளலாமே என நினைத்தோம். ஆனால், இதை எப்படிச் செய்வது என்பதில் நிறைய தயக்கங்கள் இருந்தன. நாங்களே இப்போதுதான் கல்லூரிப் படிப்பை முடித்திருக் கிறோம். உடனே இதைத் தொடங்கி னால் சரியாக இருக்குமா, முழுநேர வேலையாக இதையே செய்யலாமா என நிறைய கேள்விகள் எழுந்தன.

எதற்கும் ஒரு முயற்சி செய்து பார்க்கலாமே என முதலில் பள்ளிக்குழந்தைகள் சிலருக்கு மட்டும் பொதுமேடைகளில் பேசு வதற்கான சம்மர் கேம்ப் ஒன்றை நடத்தினோம். அதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. அதன் மூலம் இன்னும் நிறைய பெற்றோர்கள், தங்கள் குழந்தை களைப் பயிற்சிக்கு அழைத்து வந்தார்கள். அப்போதுதான் இதனை முழுநேர பிசினஸாகவே எடுத்துச் செய்யலாம் என முடிவெடுத்தோம்.

பிறகு குழந்தைகளுக்கான பாடங்களை வடிவமைக்கத் தொடங்கினோம். எங்கள் அனுபவம் சார்ந்து மட்டுமில்லாமல், அறிவியல்பூர்வமாகவும் எங்கள் பயிற்சி இருக்க வேண்டும் என்பதற்காக நிறையப் புத்தகங்கள், இணையதளங்கள் மற்றும் நிபுணர் களிடமிருந்து தகவல்களைச் சேகரித்தோம்.  சிறப்பாகப் பேசவைப்பது, சிந்திக்க வைப்பது, தேடித் தேடி கற்றுக் கொள்ளவைப்பது. இந்த மூன்று விஷயங்கள்தான் எங்கள் நோக்கம். இதற்கான பயிற்சிகளைப் பள்ளி மாணவர்களுக்கு அளித்துவிட்டாலே போதும். அவர்கள் தானாகக் கற்றுக்கொள்ளத்  தொடங்கிவிடுவார்கள். உடனே தனியாகப் பயிற்சி மையங் களைத் தொடங்கினோம். பின்னர் பள்ளிகளுக்கும் எடுத்துச்சென்றோம்.

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - தயக்கத்தை உடைக்கும் பயிற்சி!

  சவால்கள்

எங்களுக்கு இன்று சென்னையில் மட்டும் ஒன்பது பயிற்சி மையங்கள் இருக்கின்றன. அதில் வாரந்தோறும் மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கிறோம். அதுதவிர, இன்னும் நிறைய பேரைச் சென்றடைய வேண்டுமென்பதற்காகப் பள்ளிகளுக்கு இந்தத் திட்டத்தைக் கொண்டு சென்றோம்.

ஆனால், அங்கே நிறைய சவால்கள் இருந்தன. இந்தப் பிரச்னையைப் பலரும் புரிந்து கொள்ளவே இல்லை. இன்னும் சிலர் குறைவான நேரத்தைத் தந்து பயிற்சி அளிக்கச் சொன்னார்கள். ஆங்கிலம் தெரிந்தாலே பலருக்கும் தைரியம் வந்துவிடும் என நினைக்கிறார்கள்.

ஆனால், அது உண்மையல்ல. உதாரணமாக, மேடையில் தமிழில் பேசச் சொன்னால்கூட அதே பயம், தயக்கம் எல்லாம் இருக்கும். இதையெல் லாம் பொறுமையாக எடுத்துச் சொன் னோம். பின்னர் கொஞ்சம் கொஞ்ச மாகப் புரிந்து கொண்டனர். இன்று 13 பள்ளிகளில் நாங்கள் பயிற்சி அளிக்கிறோம்.

முதலில் 10 முதல் 15 வயதுள்ளவர் களுக்கு மட்டுமே பயிற்சியளித்து வந்தோம். ஆனால், இதில் பங்கெடுக்க நிறைய இளைஞர்களும் ஆர்வம் காட்டினர். எனவே, இதுதவிர்த்து இன்னும் சில பயிற்சிகளை அறிமுகம் செய்தோம். ‘DELTA’ என்ற பெயரில் ஒரு பயிற்சியை உருவாக்கினோம்.

இதற்கு வயதுவரம்பே கிடையாது. புதிதாக ஏதேனும் ஒரு விஷயத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கும் யார் வேண்டுமானாலும் இதில் இணைய முடியும். இதன் வெற்றியைத் தொடர்ந்து பயிற்சியின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினோம். இந்த பிசினஸைத் தொடங்கும்போது இதற்கு வரவேற்பு இருக்குமா, இதில் என்னென்ன சிரமங்கள் இருக்கும் என எதுவுமே தெரியாது.  நாங்களாகவே கற்றுக்கொண்டதுதான் எல்லாமே. பிசினஸைப் பொறுத்தவரைக்கும், நாம் எதிர்பார்க்கும் பிரச்னைகளைவிடவும், எதிர்பாராமல் வருகிற பிரச்னைகள்தான் அதிகம். அந்த அனுபவங்கள்தான் எங்களுக்கு நிறைய அனுபவங்களைக் கற்றுத் தந்திருக்கின்றன.

   இலக்கு


‘Best Version of yourself’ - இதுதான் எங்கள் நோக்கம். அதாவது, ஒவ்வொரு மாணவரையும் அவர்களின் முழுத் திறமையையும் பயன்படுத்தும்படி மாற்றவேண்டும். அதை நோக்கி பயணிப்பதுதான் எங்கள் இலக்கு. இதற்காக, தனிப் பள்ளி ஒன்றை நிறுவுவது, ஆன்லைனில் பாடங்களைக் கொண்டுசேர்ப்பது உள்படப் பல்வேறு எதிர்காலத் திட்டங் களையும் வைத்திருக்கிறோம்” என்றனர் உறுதியுடன்.

ஸ்டார்ட்அப்களுக்கான ஐடியாக்களை எங்கிருந்து பெறுவது எனச் சிந்திக்கும் இளைஞர்களுக்கு வார்ஹார்ஸ் சரியான உதாரணம்.

- ஞா.சுதாகர்


படங்கள்: ப.பிரியங்கா

எந்த மேடையையும் கையாள முடியும்!

இதுவரைக்கும் எங்களிடம் 1,000 மாணவர்களுக்கும் மேல் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். பலரும் சர்வதேச அளவிலான போட்டிகளில்கூட பங்கேற்று வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்தப் பயிற்சி என்பது கம்யூனிகேஷன் டிரெய்னிங் தரலாமா, பர்சனாலிட்டி டிரெய்னிங் தரலாமா எனக் கேட்பார்கள். இரண்டுமே இல்லை. இது மாணவர்களின் முழுத் திறமையை அவர்களுக்கே அறிமுகப்படுத்தும் ஒரு பயிற்சி. இதைத்தான் நாங்கள் எல்லோரிடமும் சொல்கிறோம். எந்த மேடையையும் கையாளும் திறன் இருப்பவர்கள் நேர் காணல், அலுவலகப் பணி, தலைமைப் பொறுப்பு என எங்கிருந்தாலும் ஜொலிப்பார்கள். இதற்கான உதாரணங்களை எல்லோரும் தங்கள் பணியிடங்களிலேயே காணமுடியும்!