நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் ஐ.பி.ஓ முதலீடு செய்யலாமா?

ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் ஐ.பி.ஓ முதலீடு செய்யலாமா?
பிரீமியம் ஸ்டோரி
News
ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் ஐ.பி.ஓ முதலீடு செய்யலாமா?

ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் ஐ.பி.ஓ முதலீடு செய்யலாமா?

ந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கித்துறை நிறுவனமான ஐ.சி.ஐ.சி.ஐ நிறுவனத்தின் துணை நிறுவனம் ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம். இந்த நிறுவனம் ரூ.4,200 கோடி அளவுக்கு மூலதனத்தைத்  திரட்டுவதற்காக, அதனுடைய 24% பங்குகளைப் புதிய பங்கு வெளியீட்டின் மூலமாக வெளியிடவுள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் ஐ.பி.ஓ, மார்ச் 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை விற்பனையில் இருக்கும். இந்த நிறுவனமானது, ஐ.சி.ஐ.சி.ஐ லொம்பார்ட் ஜெனரல் இன்ஷூரன்ஸ் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களை அடுத்த மூன்றாவது துணை நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் பங்குகளை ஐ.பி.ஓ-வில் முதலீட்டாளர்கள் வாங்கலாமா, அப்படி வாங்கினால் லாபகரமாக இருக்குமா எனப் பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் கேட்டோம். அவர் கூறியதாவது,

“ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய புரோக்கிங் நிறுவனம்.  வருவாய் மதிப்பீட்டின்படியும், வாடிக்கை யாளர்கள் எண்ணிக்கையின்படியும் பார்த்தால், இந்த நிறுவனம் இந்தியாவின் முன்னணித் தனியார் புரோக்கிங் நிறுவனமாக உள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியானது, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல், ஐ.சி.ஐ.சி.ஐ லொம்பார்ட்  என ஒவ்வொரு நிறுவனமாக ஐ.பி.ஓ வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் நிறுவனத்துக்கும் ஐ.பி.ஓ வெளியிட்டுள்ளது. 

ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் ஐ.பி.ஓ முதலீடு செய்யலாமா?

இந்த நிறுவனத்தின்  புரோக்கரேஜ் கட்டணம் மற்ற புரோக்கிங் நிறுவனங் களைவிடக் கூடுதலாக இருக்கும். இதனால் இந்த நிறுவனத்தின் வருமானமும் கூடுதலாகவே இருக்கும். அதேபோல, இந்த நிறுவனம் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியோடு இணைந்து  செயல்படுவதால் தொடர்ச்சியாக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வளர வாய்ப்புள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் இந்த ஐ.பி.ஓ மூலம் வெறும் 24% பங்குகளை மட்டுமே வெளியிடுகிறது. மிச்சமுள்ள 76% பங்குகளை ஐ.சி.ஐ.சி.ஐ நிறுவனமே தன்னிடமே வைத்திருக்கும். இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 520 ரூபாயாக இருக்குமென தகவல் வெளியாகியுள்ளது.  இந்த விலை அதன் மதிப்புக்கு ஏற்றதே. எடில்வைஸ், மோதிலால் ஆஸ்வால், ஜியோஜித் போன்ற நிறுவனங்களோடு ஒப்பிடும்போது, ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொருவிதமாக இருக்கும். மோதிலால் ஆஸ்வால் நிறுவனமானது வங்கி கிடையாது. ஆனாலும், அவர்களின் பங்கு விலையானது ரூ.1,142-ஆக உள்ளது. ஜியோஜித் நிறுவனத்தின் பங்கு விலை ரூ.101-ஆக இருக்கிறது. எடில்வைஸ் நிறுவனத்தின் பங்கு விலை ரூ.271-ஆக உள்ளது. இந்த மூன்று நிறுவனங்களுமே  வங்கிகள் கிடையாது. எனவே, ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் நிறுவனத்தை ஒப்பிட வேண்டும் என்றால், ஹெச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் நிறுவனத்துடன் மட்டுமே ஒப்பிட முடியும். ஆனால், இந்த நிறுவனமானது இதுவரை பங்குச் சந்தையில் பட்டியலிடப்படவில்லை.

ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் ஐ.பி.ஓ முதலீடு செய்யலாமா?


ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் நிறுவனத்தை மோதிலால் ஆஸ்வால் பங்கு நிறுவனத்துடன் ஒப்பிட்டால், பாதி விலையாக இருக்கிறது. ஜியோஜித், எடில்வைஸ் நிறுவனங்களின் பங்கு களுடன் ஒப்பிட்டால் கூடுதலாகவும், மொத்தத்தில் இந்த ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ், நடுத்தரமான, நல்லதொரு பங்காக இருக்கும். குறிப்பாக, நீண்டகால முதலீட்டுக்கு ஏற்றதாக இருக்கும்.

இந்தப் பங்குகளை இப்போது வாங்கி வைத்தால், பிற்காலத்தில் இந்திய மக்கள் பலரும் புரோக்கிங் பிசினஸில் பங்கு பெறும்போது, இதன் பங்கு விலை அதிகரிக்க வாய்ப்புண்டு. ஏனெனில், தற்போது 3 - 4 சதவிகித மக்களே புரோக்கிங் பிசினஸில் பங்கேற்றிருக்கிறார்கள். இனிவரும் காலத்தில் இந்த எண்ணிக்கையானது கணிசமான அளவில் அதிகரிக்கும்.

தற்போதைய நிலையில், எஸ்.ஐ.பி முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வங்கியில் வைப்புத் தொகையாக வைத்தால் வரக்கூடிய வட்டி வருமானமும் குறைவாகவே இருக்கிறது. எனவே, இனிவரும் காலத்தில் இந்த புரோக்கிங் பிசினஸில் முதலீடு செய்யும் மக்களின் எண்ணிக்கை கண்டிப்பாக உயரும். அப்போது இந்த மாதிரியான நிறுவனங்களின் மதிப்பும் உயரும். ஆக, நீண்டகால முதலீட்டுக்கு ஏற்றதாக ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் பங்குகள் இருக்கும்” என்றார்.

பங்கு முதலீட்டாளர்கள் இந்தப் பங்கை நீண்டகால முதலீட்டுக்குக் கவனிக்கலாமே! 

- தெ.சு.கவுதமன்