
ட்விட்டர் சர்வே: அதிகரிக்கும் நிதிப் பற்றாக்குறை... இலவசங்களை நிறுத்த வேண்டுமா?

2018-19-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார் தமிழக நிதி அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம். இந்த பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.17,491 கோடியாகவும், நிதிப் பற்றாக்குறை ரூ.44,481 கோடியாகவும் இருக்கும் எனவும், இது ஜி.டி.பி விகிதத்தில் 2.79% மட்டுமே என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், மாநில அரசுக்கு இருக்கும் இரண்டு வழிகள், ஒன்று வரி வருமானத்தை உயர்த்துவது; மற்றொன்று, இலவசங் களைக் குறைப்பது. இதில் எதைச் செய்ய வேண்டும் என நாணயம் விகடன் ட்விட்டரில் (https://twitter.com/NaanayamVikatan) ஒரு சர்வே நடத்தினோம்.

இந்த சர்வேயில் வெறும் 5% பேர் மட்டுமே வரி வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். பொருள் மற்றும் சேவை வரி கடந்த ஆண்டில் நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து மாநில அரசு நேரடியாக ஈட்டக்கூடிய வரி வருமானம் என்பது கணிசமாகக் குறைந்துவிட்டது.

வரி வருவாய் மூலம் அரசின் வருமானத்தைப் பெருக்கும் வாய்ப்புகள் குறைவு என்கிற நிலையில், இலவசங்களை நிறுத்துவதன் மூலம் அரசுக்கு ஏற்படும் செலவுகளைக் சற்றுக் குறைக்க முடியும். எனவே, இந்த சர்வேயில் 95% பேர் இலவசங் களை நிறுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். எல்லா இலவசங்களையும் நிறுத்த வேண்டியதில்லை. பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் என்பது கல்வியை ஊக்கப் படுத்தும் அரசின் நடவடிக்கை. இதை நிறுத்தக்கூடாது. ஆனால், மக்களின் வாக்குகளைக் கவர மட்டுமே தரப்படும் இலவசங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.
- ஏ.ஆர்.கே
படம்: வி.ஸ்ரீனிவாசலு