நடப்பு
தொடர்கள்
Published:Updated:

இரு மடங்காக உயர்ந்த வரியில்லா கிராஜூவிட்டி!

இரு மடங்காக உயர்ந்த வரியில்லா கிராஜூவிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
News
இரு மடங்காக உயர்ந்த வரியில்லா கிராஜூவிட்டி!

ஜி.அருண்கார்த்திக், சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட், பண்ரூட்டி

நீண்ட காலமாக எதிர்பார்க்கப் பட்ட வரியில்லா பணிக் கொடை (கிராஜூவிட்டி) வரம்பு அண்மை யில் உயர்த்தப்பட்டிருக்கிறது. ரூ.10 லட்சமாக இருந்துவந்த கிராஜூ விட்டி தொகை, இரு மடங்கு உயர்த்தப்பட்டு ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அண்மையில், நாடாளுமன்றத் தில் கிராஜூவிட்டி மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. கூடவே, மகப்பேறு கால விடுமுறை 12 வாரங்களிலிருந்து 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக் காலமும் கிராஜூ விட்டியைக் கணக்கிட எடுத்துக் கொள்ளப்படும் என்பதால், பெண் பணியாளர்களுக்குக் கூடுதல் லாபமே. பொதுவாக, கிராஜூவிட்டி என்பது பணிமூப்பின்போது தரப்படும் வெகுமானம் ஆகும். நாம் பெறும் கிராஜூவிட்டியின் ஒரு பகுதி, வருமான வரிச் சட்டம் பிரிவு 10(10)-ன் கீழ் வரிவிலக்கிற்கு உரியதாகும்.

இரு மடங்காக உயர்ந்த வரியில்லா கிராஜூவிட்டி!

கிராஜூவிட்டி சட்டத்திற்கு உட்பட்டவர்கள்

தொழிற்சாலை, சுரங்கம், ரயில்வே, எண்ணெய் நிறுவனங்கள்,  பெருந்தோட்ட தொழில்கள், துறைமுகம், நிறுவனம்/ கடைகள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிபவர்கள் எண்ணிக்கை பத்துக்கும் மேற்பட்டிருந்தால்,  கிராஜூவிட்டி சட்டத்திற்கு உட்பட வேண்டியிருக்கும். ஒருமுறை சட்டத்திற்கு உட்பட்டபின், பணிபுரிபவர்களின் எண்ணிக்கை பத்துக்கும் கீழே குறைந்தாலும், தொடர்ந்து இந்தச் சட்டத்திற்கு உட்படவேண்டியிருக்கும்.

   கிராஜூவிட்டி பெறுபவர்களின் வகை

இரு மடங்காக உயர்ந்த வரியில்லா கிராஜூவிட்டி!



பொதுவாக, கிராஜூவிட்டி பெறுகிறவர்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றனர்.

1.     அரசுப் பணியில் கிராஜூவிட்டி பெறுபவர்கள்

2.     கிராஜூவிட்டி சட்டத்தின்கீழ் தனியார் நிறுவனப் பணியில் உள்ளவர்கள்

3.     கிராஜூவிட்டி சட்டத்திற்கு உட்படாத மற்ற பணியாளர்கள்

மேற்கண்ட வகைப்படுத்தலின்படி கிராஜூவிட்டி வரிவிலக்கு நிர்ணயிக்கப்படும்.

   கிராஜூவிட்டி சட்டத் திருத்தம்


சமீபத்தில் திருத்தப்பட்ட கிராஜூவிட்டி சட்டத்தின்படி, முந்தைய வரி விலக்கு உச்ச வரம் பான ரூ.10 லட்சம், ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டு ள்ளது. இந்தச் சட்டத் திருத்தம், கிராஜூவிட்டி பெறுபவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இது குறித்த அறிவிப்பு இன்னும் மத்திய அரசு கெஸட்டில் வெளியிடப்பட வில்லை. அப்படி வெளியிடப்படும்போது, அதில்  அப்போது சில மாற்றங்கள் வர வாய்ப்புள்ளது.

இரு மடங்காக உயர்ந்த வரியில்லா கிராஜூவிட்டி!

   யார் பலன் பெறுவார்கள்?

அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு 7-வது ஊதிய கமிஷன் மூலம், 01.01.2016 முதல் கிராஜூ விட்டி ரூ.20 லட்சமாக உயர்த்தியது குறிப்பிடத் தக்கது. ஆகையால், இந்தச் சட்டத்திற்குப்பின், அரசுப் பணியில் அல்லாத மற்ற நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் பலன் பெறுவார்கள்.

மேற்கண்ட சட்ட மசோதாவின் பலன் சட்டத் திருத்தத்திற்குமுன்பும், பின்பும் எவ்வாறு வேறுபடுகிறது என்பதை ஓர் உதாரணம் மூலம் காண்போம். (பார்க்க, மேலே உள்ள அட்டவணை)

கிராஜூவிட்டி மீதான வரி விலக்கு, அவர் கடைசியாகப் பெற்ற ஊதியம் மற்றும் பணிபுரிந்த வருடங்கள் ஆகிய இரண்டையும் சார்ந்து மாறுபடும். உச்ச வரம்பு, நிறுவனம் கொடுத்த கிராஜூவிட்டி, வருமான வரித் துறையின் கணக்கீடுபடியான கிராஜூவிட்டி - இந்த மூன்றில் எது குறைவோ, அது வருமான வரி விலக்குக்காக எடுத்துக்கொள்ளப்படும்.

சட்டத் திருத்தத்துக்கு முந்தைய நிலையில், ஒருவர் ரூ.5,00,000-க்கு வரி கட்ட வேண்டிவரும். சட்டத் திருத்தத்துக்குப்பின் ஒருவர் ரூ.2,01,923-க்கு வரி கட்ட வேண்டிவரும். மேலே குறிப்பிட்ட உதாரணத்தில் குறிப்பிடப்பட்டிருப்பவர், 20% வருமான வரி வரம்பில் வந்தால், அவர் கூடுதலாக (2,98,077x20%) ரூ.59,615 வரி சேமிக்க முடியும்.

ஒருவருக்கு நிறுவனம் கொடுத்த கிராஜூவிட்டி, வருமான வரியைக் கணக்கிடும்படியான கிராஜூ விட்டி ரூ.20,00,000-க்கு அதிகமாக இருந்தால், அவருக்கு ரூ.20,00,000 வரி இல்லா கிராஜூவிட்டியாக கிடைக்கும்.