நடப்பு
தொடர்கள்
Published:Updated:

வேலை இழப்பு... வருமானம் குறைவு... - டாக்ஸ் ஃபைலிங் செய்யாமல் விட்டால் சிக்கல் வருமா?

வேலை இழப்பு... வருமானம் குறைவு... - டாக்ஸ் ஃபைலிங்  செய்யாமல் விட்டால்  சிக்கல் வருமா?
பிரீமியம் ஸ்டோரி
News

நான் கடந்த 2013-ம் ஆண்டு வரை  வருமான வரிக் கணக்கை முறையாகத் தாக்கல் செய்துவந்தேன். பிறகு பணியிழப்புக் காரணமாக வேறு வேலையில் சேர்ந்து  வேலை பார்த்தபோது வரித் தாக்கல் செய்ய வில்லை.  மீண்டும் நல்ல வேலை கிடைத்துள்ள நிலையில், வருமான வரியைக் கட்டவேண்டும் என்றால், இடையில் வரி கட்டாத ஆண்டுகளுக்கு என்ன செய்வது?

முருகவேல், சென்னை 

வேலை இழப்பு... வருமானம் குறைவு... - டாக்ஸ் ஃபைலிங்  செய்யாமல் விட்டால்  சிக்கல் வருமா?

எஸ்.சதீஸ்குமார், சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்

‘‘வருமான வரி செலுத்துமளவிற்குச் சம்பாதித்தால் மட்டுமே வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். உங்கள் வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் இருந்தால், வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டியதில்லை. கணக்குத் தாக்கல் செய்யாதது குறித்து வருமான வரித் துறை யிலிருந்து உங்களுக்குக் கடிதம் அனுப்புவார் கள். அப்போது, வருமான வரி கட்டுமளவிற்கு  சம்பாதிக்கவில்லை என்பதை, உங்களுடைய வங்கிக் கணக்கு விவரங்களுடன் பதில் கடிதம் அனுப்பினால் போதும்.’’ 

என் வயது 35. என் மூன்று வயது மகளுக்காகவும், ஒரு வயது மகனுக்காகவும் மாதம் 6,000 ரூபாயை எஸ்.ஐ.பி முறையில் மியூச்சுவல் ஃபண்டில் சேமிக்க நினைக்கிறேன். எப்படிச் செய்வது?

ராஜேந்திரன், விழுப்புரம்

வேலை இழப்பு... வருமானம் குறைவு... - டாக்ஸ் ஃபைலிங்  செய்யாமல் விட்டால்  சிக்கல் வருமா?

என்.விஜயகுமார், நிதி ஆலோசகர் 

‘‘ஐ.சி.ஐ.சி.ஐ புரூடன்சியல் ஃபோகஸ்டு புளூசிப் ஃபண்ட், ஆதித்ய பிர்லா ஈக்விட்டி ஃபண்ட் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஆகிய லார்ஜ்கேப், மிட்கேப் மற்றும் டைவர்சிஃபைடு ஃபண்டுகளில் தலா ரூ.2,000 முதலீடு செய்யுங்கள். மேலும், உங்களின் வருமானம் அதிகரிக்கும்போது, எஸ்.ஐ.பி முதலீட்டு அளவை ஒவ்வோர் ஆண்டும் 10-லிருந்து 15% வரை  உயர்த்துங்கள். இப்படித் தொடர்ச்சியாக முதலீட்டை உயர்த்தி வரும் அதேசமயத்தில், அந்த ஃபண்டுகளின் செயல்பாட்டையும் தொடர்ந்து கண்காணித்து, தேவைக்கேற்ற மாற்றத்தைச் செய்தால், உங்கள் இலக்கை நீங்கள்  எட்டிவிடலாம்.’’

வரிச் சேமிப்புக்கான மியூச்சுவல் ஃபண்டில் மாதம் 5,000 ரூபாயை அடுத்த பத்தாண்டுகளுக்கு முதலீடு செய்ய விரும்புகிறேன். இதற்கேற்ற சில ஃபண்டுகளைப் பரிந்துரை செய்யவும். 

ஆனந்த், சென்னை

வேலை இழப்பு... வருமானம் குறைவு... - டாக்ஸ் ஃபைலிங்  செய்யாமல் விட்டால்  சிக்கல் வருமா?

ஏ.கே.நாராயண், நிதி ஆலோசகர்

‘‘வருமான வரிச்சட்டம் 80சி பிரிவின்படி, இ.எல்.எஸ்.எஸ் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு வரிச் சலுகை அளிக்கும். இதில், மூன்று ஆண்டுகள் வரை பணத்தை எடுக்க முடியாதபடி ‘லாக் இன்’ செய்யப்பட்டிருக்கும். இந்த ஃபண்ட் மூலம் ஆண்டுக்கு 12-13% வருமானம் எதிர்பார்க்கலாம். நீங்கள் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வதால், மார்க்கெட் ரிஸ்க் இருந்தாலும், பத்தாண்டுகளுக்கு முதலீடு செய்யவிருப்பதால் நல்ல வருமானத்தை எதிர்பார்க்கலாம். வரிச் சலுகை அளிக்கும் ஃபண்டுகளில் மாதந்தோறும் எஸ்.ஐ.பி முறையில் செய்யப்படும் முதலீட்டை,அடுத்த மூன்றாண்டுகளுக்குப் பிறகே எடுக்க முடியும். ஆக்ஸிஸ், ஐ.டி.எஃப்.சி மற்றும் ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்டுகளில் உள்ள இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகள் நல்ல வருமானம்  தருகின்றன.’’

பொதுத்துறை வங்கியில் எனக்குச் சேமிப்புக் கணக்கு இருக்கிறது. மார்ச் 31-ம் தேதிக்குள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்கவேண்டுமென்று அறிவுறுத்தியிருந்தார்கள். ஆனால், எனக்கு ஆதார் அட்டை இன்னும் கிடைக்கவில்லை. எனவே, என் வங்கிக் கணக்கு என்னவாகும்?

சுந்தர், சாத்தூர்.

வேலை இழப்பு... வருமானம் குறைவு... - டாக்ஸ் ஃபைலிங்  செய்யாமல் விட்டால்  சிக்கல் வருமா?

கோபாலகிருஷ்ணன், வங்கி மேலாளர், இந்தியன் வங்கி, சங்கரன்கோவில்

‘‘வங்கிக் கணக்கை ஆதார் எண்ணோடு இணைக்கும் காலக்கெடுவை அடுத்த அறிவிப்பு வரும் வரை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது. எனவே, மார்ச் 31 பற்றி நீங்கள் அச்சப்படத் தேவையில்லை. வங்கியில் கட்டாயப்படுத்த மாட்டார்கள். இதுகுறித்து அடுத்த அறிவிப்பு வரும்முன் ஆதார் அட்டையைப் பெற்று வைத்துக்கொள்வது நல்லது.’’

-தெ.சு.கவுதமன்

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.