நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஓசூரில் முதலீட்டுக் கூட்டம்... ஆர்வமுடன் கலந்துகொண்ட பெண்கள்!

ஓசூரில் முதலீட்டுக் கூட்டம்... ஆர்வமுடன் கலந்துகொண்ட பெண்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஓசூரில் முதலீட்டுக் கூட்டம்... ஆர்வமுடன் கலந்துகொண்ட பெண்கள்!

ஓசூரில் முதலீட்டுக் கூட்டம்... ஆர்வமுடன் கலந்துகொண்ட பெண்கள்!

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு ஓசூரில் மியூச்சுவல் ஃபண்ட் விழிப்பு உணர்வுக் கூட்டம் நடக்கவே, ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி எனப் பல்வேறு ஊர்களிலிருந்து மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் திரண்டு வந்திருந்தனர். கணிசமான அளவுக்கு பெண்களும் கலந்துகொண்டது சிறப்பு. நாணயம் விகடனும், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் இணைந்து நடத்திய இந்தக் கூட்டத்தில், முதலில் பேசினார் அந்த நிறுவனத்தின் க்ளஸ்டர் ஹெட் ஜி.வினோத்குமார்.

ஓசூரில் முதலீட்டுக் கூட்டம்... ஆர்வமுடன் கலந்துகொண்ட பெண்கள்!

‘‘இன்றைய தேதியில் நம் நாட்டில் 93% பேர் பங்குச் சந்தையில் இதுவரை முதலீடு செய்யவில்லை. 82% பேருக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றித் தெரியவில்லை. 91% பேர் வெறும் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் மட்டுமே பணத்தைப் போட்டு வைக்கிறார்கள். ஆனால், 55.9% பேர் ரியல் எஸ்டேட்டிலும், 11.7% பேர் தங்கத்திலும் முதலீடு செய்திருக்கிறார்கள்.

நம் எதிர்காலத் தேவைகளை நிறைவேற்ற மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அனைவருக்கும் ஏற்றது என்பதைப் புரிந்து கொண்டால், நாமும் அதில் முதலீடு செய்யத் தொடங்குவோம்’’ என்றார் அவர்.

அடுத்து பேசிய மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் சொக்கலிங்கம் பழனியப்பன், ‘‘ஏற்றச் சந்தையில் முதலீடு செய்வதைவிட, இறக்கச் சந்தையில் முதலீடு செய்வது மிகவும் அவசியம். குறைந்த விலையில் அதிக யூனிட்டுகள் கிடைக்கும் என்பதால், அந்த அரிய வாய்ப்பைத் தவறவிட்டு விடாதீர்கள்’’ என்றவர், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் பல்வேறு சாதகமான விஷயங் களையும் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

ஓசூரில் முதலீட்டுக் கூட்டம்... ஆர்வமுடன் கலந்துகொண்ட பெண்கள்!

இறுதியாக, மியூச்சுவல் ஃபண்ட் தொடர்பான வாசகர்களின் பல்வேறு கேள்விகளை முதலீட்டா ளர்கள் கேட்க, அவற்றுக்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.

‘‘வருஷத்துக்கு ஒருமுறையாவது ஓசூர்ல இப்படிப்பட்ட கூட்டத்தை நடத்துங்க’’ என்கிற கோரிக்கையை வைத்துச் சென்றார்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட முதலீட்டாளர்கள்.

- ஆகாஷ்

படங்கள்: க.மணிவண்ணன்