நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

முடிவடைந்த வாரத்தில் இந்தியப் பங்குச் சந்தைகள் மொத்தம் மூன்று நாள்கள் மட்டுமே வர்த்தகம் நடை பெற்றதால், குறிப்பிடும்படி பெரிதான மாற்றம் எதுவும் நிகழவில்லை. கடந்த வாரத்தில் பங்குச் சந்தைத இறங்குமென எதிர்பார்த்தவேளையில், ஆச்சர்யப்படும் விதமாக சந்தையின் தொடக்கம் நல்ல விதமாக அமைந்தது. இதற்கு வெளிநாட்டு முதலீடுகளும், பாண்ட் பத்திரங்கள் தொடர்பாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளும் உதவிகரமாக இருந்தன.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!


குறியீடுகள் கடந்த வாரத்துக்கு முந்தைய வெள்ளிக்கிழமை கீழிறங்கி, வலுவான சப்போர்ட்  நிலைக்குக் கீழே இறங்கிக் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து பங்குச் சந்தையானது திங்களன்று நல்ல ஏற்றத்துடன் ஆரம்பித்து, அடுத்துவந்த இரு நாள்களில் ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமானது.

சந்தைக் குறியீடுகள், அவற்றின் 200 நாள்கள் மூவிங் ஆவரேஜுக்கு இணையாக வர்த்தகமாக முயற்சி செய்தன. அது நடந்திருந்தால், நிஃப்டி 10300 என்ற நிலையில் வர்த்தகமாகியிருக்கும். ஆனால், அது நடக்காமல் போகவே, புதன்கிழமை அன்று நிஃப்டி10113-க்கு இறங்கியது. சந்தை இன்னும் இறங்கும் பட்சத்தில், நிஃப்டி 10000 புள்ளிகள் வரைக்கும் இறங்கக் கூடிய வாய்ப்புண்டு. 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஏப்ரல் 10000 புட் ஆப்ஷன் அதிக ஓப்பன் இன்ட்ரஸ்ட் வுடன் காணப்படுகிறது. 10500 என்பது நிஃப்டிக்கு இப்போதும் முக்கியமான தடைநிலையாக இருக்கிறது. ஏப்ரல் சீரிஸில் கால் ஆப்ஷன் ஓப்பன் இன்ட்ரஸ்ட் அதிகமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது.  தற்போதைய நிலையில், இவை இரண்டும் முக்கிய நிலைகளில் இருக்கின்றன. 

அடுத்த சில நாள்களில் சில மேக்ரோ டேட்டாக்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஜி.எஸ்.டி வரி வசூல் குறைந்தது,  பங்குச் சந்தை வர்த்தகத்தில் பெரிய பாதிப்பு எதையும்  ஏற்படுத்தவிலை. அதே சமயம்,  பங்குச் சந்தை  ஏற்றம் காண, தொடர்ந்து சில நல்ல செய்திகள், தகவல்கள் வந்தாக வேண்டும். அப்படி நடந்தால்  மட்டுமே சந்தை, காளையின் பிடிக்குள் வரும்.

வரும் வாரத்தில், சந்தை சற்று ஏற்றம் காணும் என்று எதிர்பார்க்கிறோம். நிஃப்டி சப்போர்ட் சுமார் 10000 புள்ளி களாகத் தொடர்கிறது. அது 10300-யைத் தாண்டி உயர்வது முக்கியத் தடையாக உள்ளது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

அஸ்ட்ரால் பாலிடெக்னிக் (ASTRAL)

தற்போதைய விலை: ரூ.893.15


வாங்கலாம்

மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளின் விலையானது தற்போது சரிவைச் சந்தித்து வந்தாலும்கூட, சில நிறுவனப் பங்குகளில் எந்தவித இறக்கத்தையும் நம்மால் காணமுடியவில்லை. அதுபோன்ற பங்குகளில் ஒன்றுதான் இந்த அஸ்ட்ரால் பாலிடெக்னிக்.

கடந்த வாரத்தில், இந்த நிறுவனப் பங்கின் விலை  உயர்வது போன்ற நம்பிக்கையை நமக்குக் கொடுத்ததைப் பார்க்க முடிந்தது. வாராந்திர வரைபடத்தைப் பார்க்கும்போது, இந்த நிறுவனப் பங்குகள் மேலும் விலை உயர்ந்து ரூ.1,000-க்கு மேல் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. தற்போதைய விலையில் இந்தப் பங்கில் முதலீடு செய்யலாம். ஸ்டாப்லாஸை ரூ.850-ஆக வைத்துக்கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பிரபாத் டெய்ரி (PRABHAT)

தற்போதைய விலை: ரூ.150.20

வாங்கலாம்

பால் உற்பத்தித் துறை சார்ந்த நிறுவனப் பங்குகளைப் பொறுத்தவரை, முதலீட்டாளர்களின் பார்வையில் இருவேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. ஹெரிட்டேஜ் போன்று லாபம் தரும் நிறுவனங்களும் இருக்கின்றன; குவாலிட்டி போன்ற சரியான வருமானம் தராத நிறுவனங்களும் இருக்கின்றன. எனினும், இந்தப் பங்கு சீரானதொரு வருமானத்தைக் கொடுத்து வருவதை நம்மால் கவனிக்க முடிகிறது. 

சமீபத்தில், இந்த நிறுவனப் பங்கின் விலை நன்கு இறங்கியது. தற்போது ஃபிபனோசி சப்போர்ட் லைனில் இருக்கிறது. தற்போது ஆக்ஸிலேட்டர்கள் அதிக விற்பனைப் பகுதியைக் கடந்து, ஆதரவு நிலைக்கு வந்துள்ளது.

தற்போதைய விலையில்  இந்தப் பங்கினை வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.140 என வைத்துக்கொள்ளவும்.  குறுகிய காலத்தில் இது ரூ.165 வரை உயரக்கூடும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

எண்ட்யூரன்ஸ் டெக்னாலஜீஸ் (ENDURANCE)

தற்போதைய விலை: ரூ.1,264.85

வாங்கலாம்

கார்களுக்குத் தேவையான உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் நிறுவனப் பங்குகளுக்கு தற்போது தேவை அதிகம் இருக்கிறது. எண்ட்யூரன்ஸ் நிறுவனப் பங்கு, நன்றாக விலை ஏறி காணப்பட்ட  நிலையில் இறக்கம் கண்டது. கடந்த பல வாரங்களாகப் பங்கின் விலை இறக்கத்தில் இருந்தது.

தற்போது, இந்தப் பங்கின் விலை உயர்வடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. தற்போதைய விலையில் இந்தப் பங்கில் முதலீடு செய்யலாம். ஸ்டாப்லாஸ் ரூ.1,225-ஆக வைத்துக் கொள்ளவும். பங்கின் விலை ரூ.1,400 வரை உயரக் கூடும். 

தொகுப்பு: தெ.சு.கவுதமன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.