நடப்பு
தொடர்கள்
Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
News
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தி.ரா.அருள்ராஜன், தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தங்கம் மினி

பங்குச் சந்தை தற்போது பக்கவாட்டில் நகர்ந்து கொண்டிருக்கிறது.அதே நேரம் தங்கமானது, ஏற்றத்தின் முயற்சியில் தோல்வியடைந்து இறங்க ஆரம்பித்துள்ளது.

கடந்த இதழில் சொன்னது... “தங்கம் மிக வலிமையாக ஏறி இருக்கும் நிலையில், தற்போது 30850 என்ற எல்லை உடனடித் தடைநிலையாக உள்ளது.  இந்தத் தடைநிலை உடைக்கப்பட்டால், அடுத்து இதைவிட இன்னும் வலிமையாக ஏறி 31300 என்ற எல்லையை நோக்கிப் பயணிக்கலாம்.  கீழே உடனடி ஆதரவு நிலை 30400 ஆகும்.’’

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்


தங்கம், கடந்த வாரங்களில் பக்கவாட்டு நகர்விலேயே இருந்தது. அதன்பின் நாம் கொடுத்திருந்த கீழ் எல்லையிலிருந்து ஏறி, மேல் எல்லையைத் தொட்டது. அத்துடன் மட்டுமல்லாமல், மேல் எல்லையான 30850-ஐ உடைத்து ஏறியது.  இந்த ஏற்றம், முந்தைய வாரம் வெள்ளியன்று அதிகபட்சமாக 30947 என்ற எல்லையைத் தொடவைத்தது.  

ஆனால், அடுத்து திங்களன்று முந்தைய ஏற்றத்தைத் தொடர முடியாமல், சற்றே இறங்கி ஒரு ஸ்பின்னிங் டாப் உருவமைப்பைத் தோற்றுவித்தது. இந்த அமைப்பானது, ஏற்றம் தொடர முடியாமல் சிரமப்படுவதைக் காட்டுகிறது.  அடுத்து செவ்வாயன்று நிகழ்ந்த இறக்கம்,  அதை உறுதி செய்தது. இந்த இறக்கம் புதனன்றும் தொடர்ந்தது. கீழே குறைந்தபட்சப் புள்ளியாக 30490 என்ற புள்ளியைத் தொட்டது. இந்த இறக்கம் தொடருமா என்பதே தற்போது கேள்விக்குறியாக உள்ளது.

இனி என்ன நடக்கலாம்? தங்கம் ஓர் இறக்கத்திற்கு மாறிய நிலையில், தற்போதைய உடனடி ஆதரவான 30400-ஐ தக்கவைக்குமா என்று பார்க்கவேண்டும். இந்த ஆதரவு தக்கவைக்கப்பட்டால், காளைகள் மீண்டும் மேலே திருப்புவார்கள். அது 30800-ஐ நோக்கி நகரும். இல்லையெனில், மீண்டும் கீழே முக்கிய ஆதரவான 30100-ஐ நோக்கி நகரலாம்.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

வெள்ளி மினி

தங்கத்துடன் வெள்ளியை ஒப்பிட்டு நோக்கினால், சற்றே வலிமை குன்றிதான் காணப்படுகிறது என்பதைத் தொடர்ந்து கூறி வருகிறேன்.

சென்ற வாரம் சொன்னது... “தற்போது வெள்ளியானது, நாம் தொடர்ந்து கொடுத்து வரும் 39000 என்ற தடைநிலையைத் தாண்டமுடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதைத் தாண்டினால், அடுத்த இலக்கு 39550 ஆகும்.  கீழே ஆதரவு நிலை 38400 ஆகும்.’’

முந்தைய வாரம் தங்கம் வலிமையாக ஏறிய நிலையில், வெள்ளியானது, சற்றே தடுமாறியே முடிந்தது. அடுத்து திங்களன்று தங்கம் ஒரு ஸ்பின்னிங் டாப்பாக முடிய, வெள்ளி இன்னும் வலிமைகுறைந்து ஒரு டோஜியில் முடிந்துள்ளது.   அதாவது, வெள்ளி 39000 என்ற தடைநிலையைத் தாண்ட முயன்று 39170 வரை சென்று, பின் தாக்குப்பிடிக்க முடியாமல் கீழே திரும்பிவிட்டது.  அதன்பின், செவ்வாய் மற்றும் புதன் இரண்டு நாள்களும் இறங்குமுகமாகவே இருந்து குறைந்தபட்சப் புள்ளியாக 38301-ஐ தொட்டுள்ளது.   அதாவது நாம் கொடுத்திருந்த ஆதரவுக்கு வந்துவிட்டது. அதை உடைப்பதற்கும் முயற்சி செய்கிறது.

இனி என்ன நடக்கலாம்? வெள்ளியின் இறக்கம் தொடர்ந்தால், அடுத்த மிக முக்கிய ஆதரவான 38000-ஐ சோதிக்கலாம்.  அது உடைக்கப்பட்டால் கடும் வீழ்ச்சி வரலாம். மேலே 38700 என்பது உடனடித் தடைநிலை; அடுத்து 39200 வலிமையான தடைநிலை ஆகும்.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கச்சா எண்ணெய் மினி்

கச்சா எண்ணெய், தடை உடைத்து ஏறினாலும் கூட, ஏற்றத்தில் திணறிக்கொண்டுதான் இருக்கிறது.

சென்ற இதழில் சொன்னது... “தற்போது 4280 என்ற எல்லை உடனடித் தடைநிலையாக உள்ளது. இதைத் தாண்டினால், மிகப்பெரிய ஏற்றம் வரலாம். கீழே 4111 என்பது முக்கிய ஆதரவு.”

கச்சா எண்ணெய், முன்பு 4111 என்ற தடைநிலையைத் தாண்டி வலிமையாக ஏறியது.  அதன் ஏற்றம் 4280 வரையும் சென்றது. கடந்த வாரம் அதையும் தாண்டி 4304 வரை ஏறி, அதன்பின் வழுக்கி இறங்க ஆரம்பித்துள்ளது.   இந்த இறக்கமானது, அதாவது முந்தைய தடைநிலையாக இருந்த 4111, தற்போது ஆதரவாக மாறியிருப்பதால், அதன் அருகில் முடிந்துள்ளது.

இனி என்ன நடக்கலாம்? வரும் வாரத்தில் தற்போதைய ஆதரவான 4111 என்ற எல்லையைத் தக்கவைத்து ஏறுமா அல்லது உடைத்து வலிமையாக இறங்குமா என்று பார்க்கவேண்டும்.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

அக்ரி கமாடிட்டிப் பகுதியைப் படிக்க: https://bit.ly/2IiOcUf