நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பூர்வீக சொத்தின் மூலம் வருமானம்... வருமான வரிச் செலுத்த வேண்டுமா?

பூர்வீக சொத்தின் மூலம் வருமானம்... வருமான வரிச் செலுத்த வேண்டுமா?
பிரீமியம் ஸ்டோரி
News
பூர்வீக சொத்தின் மூலம் வருமானம்... வருமான வரிச் செலுத்த வேண்டுமா?

கேள்வி - பதில்

பூர்வீக சொத்தின் மூலம் வருமானம்... வருமான வரிச் செலுத்த வேண்டுமா?

பூர்வீகச் சொத்தை விற்பனை செய்ததன் மூலம் என் அப்பாவுக்கு ரூ.30 லட்சம் கிடைத்தது. அந்தத் தொகைக்கு வருமான வரி கட்டவேண்டுமா?

பூர்வீக சொத்தின் மூலம் வருமானம்... வருமான வரிச் செலுத்த வேண்டுமா?



வைத்தியநாதன், ராஜபாளையம்


என்எம்.இளங்குமரன், ஆடிட்டர்


“பூர்வீகச் சொத்தானது விவசாய நிலமாக இருந்தால், மூலதன ஆதாய வரி கட்டத் தேவை யில்லை. அந்த ரூ.30 லட்சத்தை வைத்து இன்னொரு வீடு கட்டினால், மறுமுதலீடு என்ற முறையில் அதற்கு மூலதன ஆதாய வரி கட்ட வேண்டியதில்லை. அந்தத் தொகையை  மூலதன ஆதாய பாண்டுகள் (என்.ஹெச்.ஏ.ஐ, ஆர்.இ.சி) போன்றவற்றில் முதலீடு செய்தாலும் வருமான வரி கட்டத் தேவையில்லை. இப்படி எதுவும் செய்யாதபட்சத்தில் மூலதன ஆதாயத்தைக் கணக்கிட்டு,  பணவீக்க விகிதச் சரிகட்டலுக்குப் பிறகு 20% வரி கட்டவேண்டும்.’’ 

பான் அட்டை இருக்கிறது. அடிப்படை வருமான வரம்பு ரூ.2.5 லட்சத்துக்குக் கீழே வருமானம் இருந்தால், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய  வேண்டுமா?

பூர்வீக சொத்தின் மூலம் வருமானம்... வருமான வரிச் செலுத்த வேண்டுமா?



நாகராஜன், பழனி


எஸ்.பாலாஜி, ஆடிட்டர்


“நிதியாண்டில் ரூ. 2.5 லட்சத்துக்கு மேல் வருமானம் வந்தால்தான் வருமான வரி கட்டவேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், ரூ.2.5 லட்சத்துக்குக் குறைவாக வருமானம் வந்தாலும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வது நல்லது. வரி கட்டத் தேவையிருக்காது என்றபோதிலும், ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குக் கீழேதான் உள்ளது என்பதைக் காட்டுவதற்காக வருமான வரியைத் தாக்கல் செய்வது அவசியம்.

மேலும், நாம் சிறிது சிறிதாகச் சேமித்து வைத்த தொகையைக் கொண்டு, ஏதேனும் பெரியதொரு பொருளை வாங்கும்போது, அந்தத் தொகை குறித்து வருமான வரி அதிகாரி கேள்வி எழுப்பும் சூழலில், ஏற்கெனவே வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்திருந்தால் பதிலளிப்பது எளிது. இல்லையெனில், நமது சேமிப்பே சந்தேகத்திற் குரியதாகும்.

அடுத்து, வங்கியில் வீட்டுக் கடன் வாங்கும் போது குறைந்தபட்சம் மூன்றாண்டுகள் வருமான வரிக் கணக்கு தாக்கல் விவரத்தைக் கேட்பார்கள்.  அந்த நேரத்தில், நீங்கள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாமல் விட்டிருந்தால் உங்களைச் சிக்கலுக்குள்ளாக்கும். இதுபோன்ற சிக்கலைத் தவிர்க்க, ஒவ்வோர் ஆண்டும் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வது நல்லது.”

எஸ்.ஐ.பி முறையில் ஆக்ஸிஸ் லாங்க் டேர்ம் ஈக்விட்டி ஃபண்டில் ரூ.2,000, டி.எஸ்.பி ப்ளாக்ராக் ஸ்மால் & மிட்கேப் ஃபண்டில் ரூ.2,000, ஆதித்ய பிர்லா சன்லைஃப் ஸ்மால் & மிட்கேப் ஃபண்டில் ரூ.3,000 முதலீடு செய்துவருகிறேன். இந்த ஃபண்டுகள் சரியானவைதானா?

பூர்வீக சொத்தின் மூலம் வருமானம்... வருமான வரிச் செலுத்த வேண்டுமா?



கிருஷ்ணன், புதுச்சேரி


த.முத்துகிருஷ்ணன், நிதி ஆலோசகர்


“மிகவும் நல்ல நிலையில் லாபகரமாக இயங்கிவரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களைத்தான் நீங்கள் தேர்வு செய்துள்ளீர்கள். தொடர்ச்சியாகவும், முறையாகவும் இந்த முதலீடு களை நீங்கள் தொடரவேண்டியது மிகவும் முக்கியம். நீண்ட கால முதலீடாக இருக்கும் பட்சத்தில் ஆண்டுக்குச் சராசரியாக 12 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.”

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில், வெறிநாய் கடிக்கு கவரேஜ் கிடையாது என்கிறார்கள். இது  உண்மையா?

பூர்வீக சொத்தின் மூலம் வருமானம்... வருமான வரிச் செலுத்த வேண்டுமா?



கார்த்திக் ராஜா, புதுக்கோட்டை


கே.பி.மாரியப்பன், இன்ஷூரன்ஸ் நிபுணர்


“மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை வெறிநாய் கடி சிகிச்சைக்கான செலவு, ஒரு சில நிறுவனங் களின் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியைத் தவிர, பெரும்பாலானவற்றில் சேர்க்கப்படவில்லை. ஆனால், தற்போது கிட்டத்தட்ட அனைத்து ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களிலும் வெறிநாய் கடி சிகிச்சை சேர்க்கப்பட்டுள்ளது. வெறிநாய் கடி சிகிச்சைக்கு உள்நோயாளியாகச் சேர்க்கப்படும்போது (குறைந்தது 24 மணிநேரம்), சிகிச்சை தொடர்பான தொகையை மற்ற நோய்களுக்குப் பெறுவது போலவே பெற்றுக்கொள்ளலாம்.

வெளிநோயாளியாக ஊசி மட்டும் போட்டுக்கொண்டால், அதற்குண்டான செலவை சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மட்டும் தருகின்றன. நிறுவனங்களைப் பொறுத்தும், எடுக்கும் பாலிசியைப் பொறுத்தும் இழப்பீடு தொகை மாறுபடக்கூடும்.”

பெரிய மால்களில் 1,000 ரூபாய்க்குக் குறைவாகப் பொருள்களை வாங்கினால், ஜி.எஸ்.டி வரி எதுவும் விதிக்கமாட்டார்கள். எனவே, 5,000 ரூபாய்க்குப் பொருள்களை வாங்கினால், ரூ.1,000 வீதம் ஐந்து பில்களாகப் பிரித்துப் போடும்படி சொல்கிறார் என் நண்பர் ஒருவர். அவர் சொல்வது சரியா, இப்படிச் செய்வதற்கு ஜி.எஸ்.டி சட்டத்தில் வழி இருக்கிறதா?

பூர்வீக சொத்தின் மூலம் வருமானம்... வருமான வரிச் செலுத்த வேண்டுமா?



ரித்தேஷ், கோவை


ஜி.கார்த்திகேயன், சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்


“வாட்ஸ்அப்களில் வைரலாகப் பரவிவரும் இந்தத் தகவல் உண்மை என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தத் தகவல், ஜி.எஸ்.டி சட்டப்படி தவறு.  ஜி.எஸ்.டி சட்டத்தை இப்படிச் சிலர் தவறாக எடுத்துச் சொல்கிறார்கள். பெரிய மால்களில் ரூ.20 லட்சத்துக்கு மேல் வியாபாரம் செய்கிறவர்கள்

ஜி.எஸ்.டி வரியைக் கட்டாயம் கட்டியாக வேண்டும். எனவே, அங்கு பில்களைப் பிரித்துப் போடச் சொல்ல முடியாது. எனவே, இந்தத் தகவலை நம்பி ஏமாற வேண்டாம்.’’

நானும் என்னுடைய மகனும் இணைந்து ஒரு வீட்டை வாங்கியுள்ளோம்.இதற்கான பாதித்தொகையை, நான் ஏற்கெனவே ஒரு பழைய சொத்தை விற்றுக் கிடைத்த பணத்திலிருந்து கொடுத்துள்ளேன். என் மகனுடைய பங்கான மீதித் தொகையை வீட்டுக் கடனாக வாங்கி, அதனை அடைத்து வருகிறான். தற்போது அந்த வீட்டில் நான் வசிக்கவில்லை. என்னுடைய மகன் மட்டுமே அவனுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறான். தற்போது அந்த வீட்டிற்காக அளித்துவரும் வீட்டு வாடகையை, அவனது சம்பள வரிக் கழிவுக்குக் கணக்குக் காட்ட இயலுமா?

பூர்வீக சொத்தின் மூலம் வருமானம்... வருமான வரிச் செலுத்த வேண்டுமா?



கணேசன், மதுரை

கே.ஆர்.சத்யநாராயணன், ஆடிட்டர்


“வீட்டுக் கடன் மூலம் வீடு கட்ட செலவழித்த தொகையில் ஒருபகுதியை, வீட்டுக் கடன் மூலமாக உங்கள் மகன் அடைத்து வருவதால், அந்த வீட்டிற்கு அவர் உரிமையாளர் ஆகிறார். வீட்டுக் கடனில் திரும்பக் கட்டும் மாதத் தவணையில் அசல் மற்றும் வட்டியை வருமான வரிக் கழிவுக்குக் காட்டலாம். அதேநேரத்தில், வீட்டு வாடகைப்படிக்கான கழிவு கோரினால், அதை வருமான வரித் துறையினர் ஏற்கமாட்டார்கள்.” 

 தொகுப்பு: தெ.சு.கவுதமன்

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.