
ரவி சுப்ரமணியன் (GOD IS A GAMER - Published by Penguin Random House India Pvt Ltd)ஓவியங்கள்: ராஜன்
சில மாதங்களுக்கு முன்பு, கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொள்வதற்காக தான்யா ரியோ டி ஜெனிரோவுக்குச் சென்றிருந்தாள். ஒருநாள் பின்னிரவு இரண்டு மணிக்கு பார்ட்டி முடிந்தபின் ஹோட்டலுக்குத் திரும்பிக்கொண்டிருக்க, அவளோடு வேலை பார்க்கும் சக ஊழியர் ஒருவரும், கேப் டிரைவரும் இருந்தனர்.
ஹோட்டல் லெ மெரிடியனுக்கு சில மீட்டர்கள் முன்னால் கோபகபானா (Copacabana) பீச்சில் இருளடைந்த சுரங்கப்பாதைக்குப்பின் கார் நிறுத்தப்பட்டது. சிக்னல் சிவப்புக்கு மாறியது. திடீரென்று இருளிலிருந்து ஒருவன் வந்து டிரைவரின் தலையில் துப்பாக்கியை வைத்தான். பிரேசிலில், பொது இடத்தில் இப்படி யாராவது கொள்ளையடிக்க வந்தால், உன்னிடம் என்ன இருக்கிறதோ, அதையெல்லாம் கொடுத்துவிடு என்பதுதான் முதல் விதியாகும். துரதிர்ஷ்டவசமாக, இதைப் பற்றி யாரும் தான்யாவின் அலுவலக நண்பரிடம் சொல்லாததால், அவர் தன் உரத்தக் குரலில் கத்தினார்.

கொள்ளையடிக்க வந்தவன் அதைக் கேட்டு லேசாகப் பதறி, கவனத்தைப் பின் சீட் பக்கம் திருப்பி, கதவைத் திறந்து தான்யாவின் அலுவலக நண்பரை வெளியே இழுத்து, அவனிடம் முரட்டுத்தனமாக நடந்துகொள்ள ஆரம்பித்தான். கண்ணுக்குத் தெரிந்தவரை யாரும் அங்கில்லை.
கொள்ளையன் அவளுடைய நெக்லஸையும், ஹேண்ட்பேக்கையும் பறித்துவிட்டு, அவளுடைய விரலில் இருக்கும் மோதிரம் வேண்டுமென்று கத்தினான். அப்போதுதான் இரண்டு பேர் நடந்து வருவதைப் பார்த்தாள் தான்யா. அவர்களைப் பார்த்த திருடன் அவர்களை நோக்கிச் சுட, அது அவர்கள்மீது படாததால் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான். பயத்தில் உறைந்துபோயிருந்த தான்யா அவளுடைய சீட்டிலிருந்து நகரவில்லை.
துப்பாக்கியால் சுட்ட சத்தம் அங்கிருந்த காவல்துறையினரை எச்சரிக்கை செய்ய, அவர்கள் உடனே சம்பவம் நடந்த இடத்துக்கு வந்து அனைவரையும் – தான்யா, அவளுடன் வேலை பார்க்கும் சகபணியாள், டாக்ஸி டிரைவர், வேறு இரண்டு மனிதர்கள் – சுற்றிவளைத்துக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அந்த இரண்டு பேரில் ஒருவன் வருண். அவன், தான் மாலை முழுவதும் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், நள்ளிரவுக்குப் பிறகுதான் தூக்கத்திலிருந்து எழுந்ததாகவும் கூறினான். அவர்கள் தங்கியிருந்த ஹோட்ட லில் ரூம் சர்வீஸ் முடிந்துவிட்டதால், சாப்பிடுவதற்காக அவனும், அவனது நண்பனும் வெளியே வந்ததாகக் கூறினான்.

விசாரணைக்குப்பின் போலீஸ் அனைவரையும் அங்கிருந்து போகச் சொன்னபோது காலை மணி ஆறு ஆகியிருந்தது. அதற்குப் பிறகு வருணை, தான்யா பார்க்கவில்லை. எனவே, அவனை இன்று பார்த்தவுடன் அதிக மகிழ்ச்சியடைந்தாள்.
வருண் கதவு வரை வந்து அவளைப் பார்த்துச் சிரித்தான். ‘`நேற்றிரவு எங்களால் ஸ்மோக் பண்ண முடிந்ததைவிட அதிகம் வாங்கிவிட்டோம். நாங்கள் எல்லோரும் நாளை இங்கிருந்து செல்வதால், லியோனிடம் அது குறித்துச் சொல்லி, யாருக்காவது வேண்டுமென்றால் சொல்லும்படி சொன்னேன்’’ என்றான்.
‘`பிரச்னையில்லை. உள்ளே வா’’ என்றாள். வருண் போதைப் பொருளை விநியோகம் செய்பவனில்லை என்பதையறிந்து தான்யாவுக்கு ஏனோ ஆசுவாசமாக இருந்தது.
வருண் அவள் அழைப்பை அமைதியாக மறுத்தான். ‘‘உனக்கு வேண்டாமென்றால் எனக்கு சப்ளை செய்த இந்த நைஜீரியனே அதைத் திரும்ப எடுத்துக்கொள் வான்” என்றான். தான்யா அவனுக்குப் பின்னால் பார்த்தாள். இவர்களுக்கு இடையேயான டீல் முடியட்டும் என அந்த நைஜீரியன் காத்திருந்தான். ‘`ஆனால், அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று உனக்குத் தெரியுமா? நான் அவனிடம் திருப்பிக் கொடுத்தால், இதற்கு நான் செலவழித்த பணத்தில் பாதியைத்தான் திருப்பித் தருவான். அது குற்றமில்லையா?’’ என்றான்.
தான்யா லேசாகச் சிரித்தபடி, வருணுக்குப் பணம் கொடுத்தாள். நைஜீரியன் அங்கிருந்து சென்று விட்டான். ரியோவில் நடந்த சம்பவத்துக்குப்பின், அவரவர் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதைப் பற்றி பேசுவதற்காக தான்யாவும், வருணும் பீச்சை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.
‘`நீ எப்போது மும்பைக்குத் திரும்பிச் செல்கிறாய்?”
‘`நாளைக்குக் காலையில். போரடிக்கும் வேலைக்கு மீண்டும் திரும்பச் செல்வதற்குமுன் நாங்கள் எல்லோரும் கடைசியாக ஒரு பார்ட்டிக்காக தங்கிவிட்டோம்’’ என்றாள்.
‘`ஓ, உங்களுடைய பார்ட்டியை நான் கெடுத்துவிட்டேன்.’’
`’இல்லை வருண், உன்னைப் பார்த்தது எனக்குப் பரவசமாக இருக்கிறது. உனக்கு இல்லையா? நீண்ட நாள்களுக்குப்பிறகு…’’
‘`ஆமாம், எனக்கும்தான்’’ என்றான். இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்து, முத்தமிடத் தொடங்கினர். அதன்பின்பு, அந்தக் கடற்கரையில் அந்த இரண்டு ஆத்மாக்களின் பெருமூச்சும், கடல் அலை கரையை வந்தடையும் சத்தமும்தான் கேட்டது.

வாஷிங்டன் டி.சி
ஜில்லியன் டானின் படுகொலை கேப்பிடல் ஹில்லின் அதிகார வளாகங்களில் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. மிகவும் நளினமாகச் செய்து முடிக்கப்பட்ட அந்தக் கொலையானது ஒபாமா நிர்வாகத்தை அசைத்துப் பார்க்க ஆரம்பித்தது. ஜில்லியன், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையைத் தென் ஆசியாவில் மேலெடுத்துச் செல்வதற்காக பராக் ஒபாமாவால் தேர்வு செய்யப்பட்டவர்.
வாஷிங்டன் டி.சி பென்சில்வேனியா அவென்யூவில் இருக்கும் எட்கர் ஹூவர் கட்டடத்தின் மூன்றாம் தளம்... அங்கே அமைந்திருக்கும் கான்ஃபரன்ஸ் அறை வரந்தாவில் ஸ்பெஷல் ஏஜென்ட் ஏட்ரியன் ஸ்காட் பதற்றத்துடன் மேலும்கீழுமாக நடந்து கொண்டிருந்தார். இந்த இடம் முன்பு ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) தலைமையிடமாக இருந்தது. இவர் ஜில்லியன் டானின் வழக்கை விசாரித்துவருபவர் என்பதால், வழக்கிற்கான முடிவு குறித்து ஒயிட் ஹவுஸில் இருந்து பயங்கரமாக அழுத்தம் தந்துகொண்டிருந் தார்கள். இளம் வயதிலான பெண் ஒருத்தி அந்த அறையிலிருந்து வெளியேவந்து, ‘`ஏஜென்ட் ஸ்காட், இப்போது நீங்கள் உள்ளே வரலாம்’’ என்றாள்.
‘`நன்றி.’’ எட்ரியன் தன்னைத் தயார்படுத்திக்கொண்டு உள்ளே சென்றார். அவருடைய பாஸ், ராபர்ட் ப்ரிக் அவருக்காக அந்த கான்ஃபரன்ஸ் அறையில் காத்திருந்தார். அவர் கண்ணாடி ஜன்னலுக்கு அருகில் நின்றுகொண்டு யாரிடமோ மெதுவாகப் பேசிக்கொண்டிருந்தார். அவர் யாரென்று எட்ரியனுக்குத் தெரியவில்லை. ஏனெனில், இவரால் அவரது முதுகைத்தான் பார்க்க முடிந்தது.
‘`ஆ, ஏஜென்ட் ஸ்காட்’’ என ப்ரிக் சொல்ல, எட்ரியன் பதற்றத்துடன் தலையசைத்தார். ப்ரிக் யாருடன் பேசிக்கொண்டிருந்தாரோ, அவர் எட்ரியனைப் பார்த்துத் திரும்பினார். அவர் மைக் ஹென்ரிக்ஸ் – அமெரிக்க ஜனாதிபதியினுடைய சீஃப் ஆஃப் ஸ்டாஃப்.
‘`மீட் மைக் ஹென்ரிக்ஸ்” என்றார்.
எட்ரியன் அவரை முன்பே சந்தித்திருந்தார். அவர் தலையை அசைத்துக்கொண்டே கை குழுக்குவதற்காக வலது கையை நீட்டினார். இங்கே ஹென்ரிக்ஸுக்கு என்ன வேலை என்று குழம்பிப் போயிருந்தார் எட்ரியன். மைக் ஹென்ரிக்ஸும், ஜில்லியன் டானும் ஜனாதிபதியின் பார்வை தங்கள் மேல்பட வேண்டும் என்பதில் மிகவும் முனைப்போடு இருந்தவர்கள். அவருடைய போன் ஒலித்தது. உடனடியாக, அவர் அதை `சைலன்ட் மோடில்’ போட்டுவிட்டுப் பேச ஆரம்பித்தார்.

‘`ஜனாதிபதி மிகவும் படபடப்புடன் இருக்கிறார். நாம் அவரிடம் என்ன சொல்லப்போகிறோம்’’ என்றபடி எட்ரியனை ஊடுருவுகிற மாதிரிப் பார்த்தார் மைக்.
‘`சார், இது மிகவும் சென்சிட்டிவ் கேஸ் என்று எனக்குத் தெரியும்” என்றார்.
‘`குட். அப்படியென்றால் நாம் மற்றதைப் பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம். இதுவரை நமக்கு என்ன தெரிந்திருக்கிறது?”
எட்ரியன் தடுமாறியபடி சில பேப்பர்களை எடுத்து அவரிடம் கொடுத்தார். ஜில்லியன் படுகொலையான அன்று நடந்த நிகழ்வுகள் வரிசைக்கிரமமாக அதில் இருந்தது.
‘‘ஒரு டஜன் தடவைக்கு மேல் இதைப் பார்த்துவிட்டேன்’’ என்றவர், ‘`இதில் இல்லாததைச் சொல்லுங்கள்’’ என்றார்.
எட்ரியன் தலையாட்டிக்கொண்டே, ‘`அது ஒரு சைக்கிள் குண்டு. அந்த நாள் ஜில்லியன் பயணிக்கிற வழியில் ரோட்டுக்கு அருகாமையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்திருக்கிறது” என்றார்.
மைக் கோப்பைப் புரட்டியபடி, ‘‘சொல்லுங்கள், நான் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்’’ என்றார்.
‘`எட்டு கிலோ எடை கொண்ட குண்டு ரிமோட் மூலம் வெடிக்க வைக்கப்பட்டிருக்கிறது’’ - மைக் ஒரு கணம் நிமிர்ந்து மேலே பார்த்தார்.
‘`இன்ஃப்ரா ரெட் லைட் பைலட் காரிலிருந்து செயல்படுத்தப்பட்டி ருக்கிறது. ஜில்லியனின் கார் அதைத் தாண்டிச் செல்லும்போது, அந்தக் குண்டை வெடிக்க வைத்திருக் கிறார்கள். ஜில்லியன் அதிலிருந்து தப்பிக்க வாய்ப்பே இல்லை. கார் அடையாளம் தெரியாமல் உருக்குலைந்து போய் விட்டது.’’
‘`அது கவச வண்டி ஆயிற்றே! குண்டு அவ்வளவு எளிதாக எப்படித் தகர்த்தது” மைக் ஹென்ரிக்ஸ் லாஜிக்கலாக ஒரு கேள்வியைக் கேட்டார்.
‘`அது கவச வண்டிதான்’’ என்று சொன்ன எட்ரியன், ‘`கொலை காரர்கள் நன்கு பயிற்சிப் பெற்ற வர்கள். காரில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பகுதியை அவர்கள் குறிவைத்திருக்கிறார்கள்’’ என்றார். மைக் தலையசைத்தார்.

‘`அவர்கள் மிஸ்நே-ஷ்கார்டின் (Misznay-Schardin) முறையைப் பயன்படுத்தியிருப்பார்கள்’’ என எட்ரியன் தொடர்ந்தார்.
‘`ஹ்ம்ம்ம்ம்… ஒருபக்கம் மட்டும் வெடிப்பு பரவியிருக்கிறது.’’
‘`ஆமாம் சார், பொதுவாக, வெடிப்பு எல்லாத் திசைகளிலும் பரவும்; ஆனால், இது அந்த மாதிரி இல்லை.’’
‘‘சைக்கிள் ஒரு பாறையை ஒட்டி வைக்கப்பட்டிருந்திருக்கிறது. அதனுடைய இன்னொரு பக்கம் ரோடு இருக்கிறது. குண்டு வெடித்த சமயம், வெடி குண்டோடு இணைக்கப்பட்டிருந்த காப்பர் ப்ளேட் அவருடைய காரை நோக்கி வைக்கப்பட்டிருந்திருக்கிறது. விநாடிக்கு 2.5 கிமீ வேகத்தில் அது செலுத்தப்பட்டிருக்கிறது. கவசமிட்ட எந்தவொரு காரையும் துளைப்பதற்கு அந்த வேகம் போதுமானது’’ என்றார் எட்ரியன்.
‘`மிஸ்நே-ஷ்கார்டின்… இதைக் கேட்டே சில காலம் ஆகிவிட்டது. சமீபத்தில் இந்த முறையை யாரும் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை’’ என ராபர்ட் முணுமுணுத்தார்.
‘`இது மிகவும் பழமையான முறை’’ என்று சொன்ன எட்ரியன், ‘‘ஆனாலும், இன்னும் சில குழுக்கள் இதற்கு ஆதரவாக இருப்பதாகத் தெரிகிறது’’ என்றார்.
‘`யார் அவர்கள்?’’
‘`செயலிழந்துபோன சில ஹங்கேரி நாட்டுக் குழுக்கள். ரெட் ஆர்மியின் ஒரு பிரிவு – மேற்கு ஜெர்மனியில் மிகவும் பிரபலமான இடதுசாரித் தீவிரவாதக் குழு. கடைசியாகத் தெரியவந்த தாக்குதல் நடந்தது 1998-ம் ஆண்டில்.’’
‘`ஏதாவது க்ளூ கிடைத்ததா?”
எட்ரியன் இல்லையென்று தலையாட்டினார். ‘`ஜில்லியன் வழக்கமாகச் செல்லும் ரோடு ரிப்பேருக்காக மூடப்பட்டு இருந்திருக்கிறது. நான் கவுண்டி ரோட் அட்மினிஸ்ட்ரேஷன் போர்டிடம் விசாரித்தபோது, அவர்கள் எந்த வேலைக்கும் அனுமதி கொடுக்கவில்லை என்றார்கள். ரோடு மூடப்பட்டிருந்ததற்கான ஒரே காரணம், இந்த ட்ரிக்கர் மெக்கானிஸத்தை அமைக்கத்தான். அவர்கள் யார் என்பதை ஒருவரும் பார்க்கவில்லை. வேலை நடந்த இடம் முழுவதும் சுத்தமாகப் பரிசோதிக்கப்பட்டு விட்டது. வெடிவிபத்து நடந்த இடத்திலிருந்து எந்த க்ளூவும் கிடைக்கவில்லை. உபயோகப்படுத்திய சைக்கிள்கூட… அது எங்கிருந்து வந்தது என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை’’ என்றார்.
‘`நிக்கி எப்படியிருக்கிறார்?”
“அவர் இதை மிகவும் தைரியத்துடன் எடுத்துக்கொண்டிருக்கிறார். எஃப்.பி.ஐ–க்குக்கூட அவர் ஸ்டேட்மென்ட் கொடுத்திருக்கிறார்.’’
‘`ஹும்ம்… அப்படியென்றால், நாம் ஜனாதிபதியிடம் சொல்வதற்கு எதுவுமில்லையா?’’
‘`உங்களிடம் சொல்வதற்கு விரைவிலேயே ஏதாவது தகவல் கிடைக்கும் சார். எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.’’
‘`நிக்கி, க்ளோரியாவிடம் கொஞ்சம் சென்சிட்டிவ்வாக இருக்கவும். அவர்கள் `முதல் குடும்பத்துக்கு’ மிகவும் நெருக்கமானவர்கள்” என்றார்.
‘`யெஸ், சார். அவர்களிடம் விசாரணை குறித்துச் சொல்லியிருக்கிறோம். ஏதாவது தடயம் கிடைக்குமா என நாங்கள் அவர்கள் இடத்தை அலசியபோது நிக்கி டானின் முன்னிலையில்தான் செய்தோம்.’’
‘`குட், தாங்க் யூ. அவ்வளவுதான்’ என மைக் ஹென்ரிக்ஸ் சொன்னபோது, எட்ரியன் எழுந்து அவரது அறையை விட்டு வெளியே வந்தார். அவர் கதவைத் திறந்தபோது போனைப் பார்த்தார். அவர் நினைத்ததைவிட அதிக நேரமாகியிருந்தது. அவருடைய போனுக்கு நான்கு மிஸ்ட் கால், இரண்டு எஸ்.எம்.எஸ் வந்திருந்தன.
(பித்தலாட்டம் தொடரும்)
தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்

செல்போனில்... அதிகரிக்கும் பணப் பரிமாற்றம்!
யூனிஃபைடு பேமென்ட் இன்டர்பேஸ் (UPI) என்னும் மின்னணுப் பணப் பரிமாற்றத்தின் மூலம், பரிமாற்றம் செய்யப் பட்ட தொகை ரூ.1.9 லட் சம் கோடியை எட்டியிருக் கிறது.கடந்த நிதியாண்டின் முதல் மாதத்தில் ரூ.2,240 கோடி யூ.பி.ஐ மூலம் பரி மாற்றம் செய்யப் பட்டது. கடந்த அக்டோபர் மாதத்தி லிருந்து வேக மெடுக்கத் தொடங்கிய யூ.பி.ஐ பணப் பரிமாற்றம் கடந்த மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக ரூ.24,172 கோடியானது. பீம் மூலம் கடந்த ஓராண்டில் ரூ.4,839 கோடி பரிமாற்றம் செய்யப் பட்டிருக்கிறது. செல்போன் மூலமான பணப் பரிமாற்றம் மக்களிடம் வேகமாகப் பிரபலமடைந்து வரு வதையே இந்தப் புள்ளி விவரங்கள் காட்டுகிறது.

வரித் தாக்கல் செய்பவர் எண்ணிக்கை உயர்வு!
புதிதாக வரித் தாக்கல் செய்பவர்களின் எண் ணிக்கை கடந்த நிதியாண் டில், அதற்கு முந்தைய நிதியாண்டை விட ஏறக் குறைய 26% அதிகரித்துள் ளது. வரித் தாக்கல் செய்ப வர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு ரூ.5.43 கோடியாக இருந்தது. கடந்த நிதி யாண்டில் இது 6.84 கோடியாக உயர்ந்துள் ளது. வரிச் செலுத்துபவர் களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக மத்திய அரசு, வரித்துறையுடன் இணைந்து பல்வேறு நட வடிக்கைகளை எடுத்து வருகிறது.
இத்தகைய நடவடிக்கை களின் பலனாகத்தான் வரிக் கணக்குத் தாக்கல் செய்பவர்களின் எண் ணிக்கை கணிசமாக உயர்ந் துள்ளது.