நடப்பு
தொடர்கள்
Published:Updated:

“தமிழகத்துக்கு நிறைய முதலீடுகள் வருகிறது!” - ‘சி.ஐ.ஐ’ ஆர்.தினேஷ்

“தமிழகத்துக்கு நிறைய முதலீடுகள் வருகிறது!” - ‘சி.ஐ.ஐ’ ஆர்.தினேஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
“தமிழகத்துக்கு நிறைய முதலீடுகள் வருகிறது!” - ‘சி.ஐ.ஐ’ ஆர்.தினேஷ்

“தமிழகத்துக்கு நிறைய முதலீடுகள் வருகிறது!” - ‘சி.ஐ.ஐ’ ஆர்.தினேஷ்

ந்தியத் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பான சி.ஐ.ஐ-யின் தென் இந்தியப் பிராந்தியத்தின் புதிய தலைவராகப் பதவியேற்றிருக் கிறார் டி.வி.எஸ் லாஜிஸ்ட்டிக் சர்வீசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், டி.வி. சுந்தரம் அய்யங்கார் அண்டு சன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநருமான ஆர்.தினேஷ். அடுத்த ஓராண்டு காலத்துக்கு அவர் இந்தப் பதவியை வகிக்கும் நிலையில், அவர் செய்யவிருக்கும் பணிகள் பற்றி விரிவாக எடுத்துச் சொன்னார்.

‘‘தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி என தென் மாநிலங்களை உள்ளடக்கியது தென் மாநில சி.ஐ.ஐ. ஒவ்வோர் ஆண்டும் ஒருவர் தலைமையேற்று நடத்தும்போது புதுப்புது விஷயங்களைச் செய்கிறார்கள். அந்த விஷயங்களை அடுத்ததாகத் தலைமைக்கு வருகிறவர் தொடர்ந்து செய்வதுடன், புதுப்புது விஷயங்களையும் செய்ய வேண்டும் என்பதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குச் செய்ய வேண்டிய திட்டங்களை நாங்கள் வகுத்திருக்கிறோம். இதன் மூலம் பழைய திட்டங்கள் தொடர்வதுடன், புதிய விஷயங்களை நடைமுறைப்படுத்தவும் வழி செய்திருக்கிறோம்.

“தமிழகத்துக்கு நிறைய முதலீடுகள் வருகிறது!” - ‘சி.ஐ.ஐ’ ஆர்.தினேஷ்

தென் மாநிலங்களில் உள்ள எல்லா நகரங் களிலும் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துகிற அதேசமயத்தில், தொழில் துறைக்கான சூழலை உருவாக்க வேண்டும். உதாரணமாக, மதுரையில் பெரிய தொழில் நிறுவனங்கள் வந்து தொழில் தொடங்க வேண்டுமெனில், நல்ல பள்ளி, கல்லூரிகள் அங்கு இருக்க வேண்டும். அப்போது தான் பலரும் அங்கு சென்று வேலை பார்க்க விரும்புவார்கள். இந்தத் தொழில் சூழலை எல்லா நகரங்களிலும் உருவாக்கிவிட்டால், தொழில் வளர்ச்சி தானாகவே நடக்கும்.

தென் மாநிலங்களில் உள்ள இரண்டாம்கட்ட நகரங்களில் தொழில் வளர்ச்சியை அதிகப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறோம். உதாரணமாக, தெலங்கானாவில் வாராங்கல், ஆந்திராவில் திருப்பதி, தமிழகத்தில் சேலம் எனத் தொழில் வளர்ச்சிக்கு அதிக அளவில் கவனம் செலுத்தப்போகிறோம். 

சி.ஐ.ஐ அமைப்பில் சுமார் 66% பேர் எம்.எஸ்.எம்.இ என்று சொல்லப்படுகிற சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்தான். இந்த நிறுவனங்களைத் தேசிய அளவில் கொண்டு செல்ல உதவுவதுடன், சர்வதேச அளவில் கொண்டு செல்லத் தேவை யான நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறோம். பிராந்தியக் குறியீடு (Geographical Indicator) பற்றிய விழிப்பு உணர்வைப் பரந்த அளவில் உருவாக்கி, அதன் மூலம் புதிய தொழில்  தொடங்கும் வாய்ப்புகளை எடுத்துச்சொல்லப் போகிறோம்.

இன்றைக்கு தொழில் துறைக்கு மிக முக்கியமான தேவையாக தண்ணீர் இருக்கிறது. நீர்வளத்தை எப்படிப் பெருக்குவது, கிடைக்கும் தண்ணீரை எப்படி சிக்கனமாகவும், சிறப்பாகவும் பயன்படுத்துவது என்பது பற்றி எல்லாத் தொழில் நிறுவனங்களுக்கும் கற்றுத்தரப் போகிறோம்.

தமிழகத்திலிருந்து பல நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்குப் போய்விட்டதுபோல சிலர் பேசுகிறார்கள். பழைய நிறுவனங்கள்  எதுவுமே தமிழகத்தை விட்டுச் செல்லவில்லை. புதிய நிறுவனங்கள் அங்குபோய் தொழில் தொடங்குவதைத் தவறு என்று சொல்ல முடியாது. தமிழகத்தை நோக்கி நிறைய புதிய முதலீடுகள் வந்துகொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில்கூட வேறு மாநிலத்தில் இருக்கும் ஒரு நிறுவனம் இங்கு வந்து ஒரு பெரிய தொழில் திட்டத்தைத் தொடங்கி யிருக்கிறது. தமிழக அரசைப் பொறுத்தவரை, தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தயாராக இருக்கிறது’’ என்றபடி தனது பேட்டியை நிறைவு செய்தார் தினேஷ்.

அவர் தலைமையில் தென் மாநிலங்களின்   தொழில் வளர்ச்சி, வட மாநிலங்களை விஞ்சட்டும்!

- ஏ.ஆர்.குமார்

படம் : சொ.பாலசுப்ரமணியன்