நடப்பு
தொடர்கள்
Published:Updated:

விலை குறைந்த ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், பார்தி ஏர்டெல்... - முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

விலை குறைந்த ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், பார்தி ஏர்டெல்... - முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?
பிரீமியம் ஸ்டோரி
News
விலை குறைந்த ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், பார்தி ஏர்டெல்... - முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

விலை குறைந்த ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், பார்தி ஏர்டெல்... - முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.3,250 கோடி கடன் அளித்த விவகாரத்தில் சி.பி.ஐ முதல்கட்ட விசாரணையைத் தொடங்கி யிருப்பதாகத் தகவல் வெளிவந்ததையடுத்து, இந்த நிறுவனப் பங்குகளின் விலை, சரிவைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது. இந்தப் பங்கின் 52 வார அதிக சபட்ச விலை ரூ.365-ஆக இருந்தது. தற்போது இந்தப் பங்கின் விலை ரூ.281 என்கிற அளவில் வர்த்தகமாகி வருகிறது.

இதேபோல, பார்தி ஏர்டெல் நிறுவனம் தொலைத்தொடர்புச் சேவையில் முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு, ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனத்தை தொடங்கியதிலிருந்து, பிற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பலவிதமான பின்னடைவுகளைச் சந்தித்து வருகிறது. காரணம், ஜியோ நிறுவனம் அளித்த பல்வேறு இலவச மற்றும் குறைந்த கட்டணத்தினாலான சேவைகள்தான்.

விலை குறைந்த ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், பார்தி ஏர்டெல்... - முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

ஜியோவின் இந்த நடவடிக்கைகளினால் ஏற்பட்ட தாக்கம் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் மீதும் இருக்கவே செய்கிறது. ஏர்டெல் நிறுவனத்தின் பங்கு, கடந்த ஓராண்டு காலத்தில் அதிகபட்சமாக ரூ.548-க்கு வர்த்தகமானது.  ஆனால், தற்போது ரூ.387 என்கிற அளவில் மட்டுமே வர்த்தகமாகிறது.

ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனப் பங்குகளின் விலையானது சரிவைச் சந்தித்துவரும் நிலையில், இந்தப் பங்குளை முதலீட்டாளர்கள் வாங்கலாமா என ஐ.டி.பி.ஐ கேப்பிட்டல் நிறுவனத்தின் ெஹட் (ரிசர்ச்) ஏ.கே.பிரபாகரிடம் கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச்சொன்னார்.

“நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ, அதிகளவில் கிளைகளைக் கொண்டுள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் பங்கு விஷயத்தில் தற்போது உடனடியாக எந்த முடிவையும் எடுக்க முடியாது. இப்போது ஏற்பட்டுள்ள சிக்கல் குறுகிய காலத்திற்கு மட்டுமே இருக்கும். இந்த நிலை கண்டிப்பாக மாறும். கூடிய விரைவில் பெரிய மாற்றங்கள் வரும்.

இந்த வங்கி விவகாரங்கள் குறித்த விஷயங்கள் தொடர்ந்து வெளிவரத்தான் செய்யும். மேலும், இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்தி, 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரை கொண்டு செல்ல வாய்ப்புள்ளது. பொதுத்துறை வங்கி போன்று, இந்தப் பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காணமுடியாது. வங்கி போர்டு கூடித்தான் சி.இ.ஓ-வை மாற்றுவது குறித்து முடிவெடுக்க முடியும். அது உடனடியாக நடக்க வாய்ப்பில்லை.

விலை குறைந்த ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், பார்தி ஏர்டெல்... - முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?



நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய விரும்பு பவர்கள் ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் பங்குகளைத் தொடர்ந்து வைத்திருக்கலாம். குறுகிய காலத்தில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. எனவே, நீண்ட கால முதலீட்டாளர்கள் தவிர, குறுகிய கால முதலீட்டாளர்கள் இந்த வங்கிப் பங்கில் முதலீடு செய்யாமல் இருப்பது நலம்.

பார்தி ஏர்டெல் நிறுவனம் அதிகளவில் வாடிக்கையாளர்களைக் கொண்டு, தொலைத் தொடர்பு துறையில் முதல் நிறுவனமாகத் திகழ்ந்தது. தற்போது ஜியோவின் கடும் போட்டி யால், அதன் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதன் காரணமாக, இந்த நிறுவனத்தின், சந்தை மதிப்பு குறைந்ததால், பங்கின் விலை குறைந்துள்ளது. தொலைத்தொடர்பு துறையில் தற்போது பார்தி ஏர்டெல், வோடஃபோன், ஜியோ ஆகிய மூன்று நிறுவனங்கள் மட்டுமே முன்னணியில் உள்ளன.

ஜியோ, அதன் சந்தை பங்களிப்பை எடுத்துக்கொண்டவுடன், ஏர்டெல்லுக்கு மீண்டும் பிரைசிங் பவர் வந்துவிடும். அதுவரையில் தொலைத் தொடர்புத் துறையில் தொடர்ந்து நீடித்து நிற்க ஏர்டெல் நிறுவனத்தால் முடியும்.

எனவே, பார்தி ஏர்டெல் நிறுவனம் தற்போதைய நிலைமையிலிருந்து மீண்டுவரும். நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது. அதேசமயம், குறுகிய காலத்திற்கு பார்தி ஏர்டெல் நிறுவனப் பங்கில் முதலீடு செய்தால், அது எந்தப் பலனையும் தராது’’ என்றார்.

ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகளை வாங்கி வைத்திருப்பவர்கள் நிபுணர் சொல்வதைக் கவனிக்கலாமே!

- கே.எஸ்.தியாகராஜன்