நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

இந்திய பங்குச் சந்தையில், இந்த வாரம் நிலவிய ஏற்றம் இறக்கம்தான் அதன் முக்கிய அம்சமாக இருந்தது. சர்வதேச சந்தைகளின் போக்கும் அதற்கு முக்கியக் காரணியாக அமைந்தது. உள்நாட்டுச்  செய்திகள் எதுவும் இந்த ஏற்ற இறக்கத்துக்குக் காரணமாக அமையவில்லை.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!


இந்த ஏற்ற இறக்கப் போக்கு பெரிய  அளவில் காணப்பட்ட அதேவேளையில், முதலீட்டாளர் களைச் சந்தைக்கு உள்ளே ஈர்க்கவும், அதே வேகத்தில்  மறுதினமே வெளியே செல்லவைக்கவும் விதமான போக்கே காணப்பட்டது. எனவே, இந்த வாரம் வர்த்தகம் முழுவதுமே சற்றுக் கடினமாகவே காணப்பட்டது.

இதுபோன்ற தருணங்களில் செய்ய வேண்டிய தெல்லாம், பெரிய மாற்றம் வரும்வரை சந்தையின் போக்கைச் சற்று ஒதுங்கியிருந்து கவனிப்பதுதான்.  இதற்குப் பொறுமையும், வாங்கும் அல்லது விற்கும் பங்கு குறித்த  உறுதியான எண்ணமும் தேவை. பங்குச் சந்தையில் நிலவும் இது போன்ற ஏற்ற இறக்கப் போக்கு, முதலீட்டாளரின் பொறுமை யையும், மனஉறுதியையும் நிச்சயம் சோதிக்கத்தான் செய்யும்.

ஆனால், நல்ல வர்த்தகம் செய்ய அந்தப் பண்புகள்தான் கட்டாயம் தேவை. இதுமாதிரி யான பெரிய ஏற்ற, இறக்கப் போக்கு தொடர்ந்தால், குறிப்பிட்ட பங்குகள் மீதான வர்த்தகத்தை முதலீட்டாளர்கள் லாபகரமாகத் தொடரலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தையின் இந்த இறக்கத்தினால் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளின் விலை குறைந்துள்ளது. எனவே,  முந்தைய வாய்ப்பைத் தவறவிட்ட முதலீட்டாளர்கள், சந்தையில் மீண்டும் நுழைவதற்கான வாய்ப்பாக இதனைப்  பயன்படுத்திக்கொள்ளலாம்.

அதேசமயம், இந்த ஏற்ற இறக்கப் போக்கு, முதலீட்டாளர் களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை, மியூச்சுவல் ஃபண்டில் மார்ச் மாதத்துக்கான முதலீட்டுத் தொகை  குறைந்திருப்பதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.

மார்ச் மாதம், நிதியாண்டின் முடிவு என்பதும் அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இருப்பினும், நடப்புக் காலாண்டில் உள்நாட்டு முதலீடுகள் மூலம் சந்தைகளுக்கு  மீண்டும் முதலீடுகள் வந்து குவியலாம் என்று எதிர்பார்க்கலாம்.

நிதி நிறுவனங்களின் தற்போதைய ஏற்றத்துக்கு, அதிகமான பணப்புழக்கமும் ஒரு முக்கியக் காரணமாக உள்ளது.

நிஃப்டி மற்றும் பேங்க் நிஃப்டி ஆகிய இரண்டுக்குமே இந்த வார கேண்டில் சார்ட் சாதகமாகவே இருக்கிறது. ஸ்மால் மற்றும்  மிட்கேப் குறியீடுகளிலும் இந்த வார கேண்டில் சாதகமாக இருக்கிறது. எனவே, வரும் வாரத்தில்  நிஃப்டி புள்ளிகள் உயர்ந்து, 10450 முதல் 10475 வரை தொட வாய்ப்புள்ளது. 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பலாசோர் அலாய்ஸ் (ISPATALLOY)

தற்போதைய விலை: ரூ.56.00

வாங்கலாம்

உலோகத் துறையைச் சேர்ந்த இந்த நிறுவனப் பங்கின் விலை அதிகரிக்கும். இந்தப் பங்கின் விலை பல மாதங்களாக ஏற்றம் காணாமலே இருந்தது. அதற்கும் சேர்த்து இப்போது  மேலேறும் சாத்தியம் தென்படுகிறது.

 ரிலேட்டிவ் ஸ்ட்ரென்த் இண்டெக்ஸும் (RSI) கீழ்மட்டத்தைத் தொட்டு, அதன்பின் 30-லிருந்து ஆதரவைப் பெற்று முதலீட்டாளர் களின் வாங்கும் ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது. அடுத்து, வர்த்தகம் நடக்கும் பங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தற்போதைய விலை மற்றும் ரூ.53-க்கு இறங்கும் வரையில் வாங்க லாம். ஸ்டாப்லாஸ் ரூ.51 வைத்துக்கொள்ளவும். குறுகிய காலத்தில் பங்கின் விலை ரூ.65 வரை உயரக்கூடும்.   

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ட்ரென்ட் (TRENT)

தற்போதைய விலை: ரூ.367.30

வாங்கலாம்

பங்குச் சந்தை சரிவில் இருந்தாலும், இந்தப் பங்கு சமாளித்து நிற்கிறது. இந்த நிறுவனப் பங்கானது அதன் முந்தைய உச்சங்களையும் தாண்டிப் பயணிக்கப் பார்க்கிறது.

இந்தப் பங்கானது மேலேறி வருவதற்கான புதிய அறிகுறி தென்படுகிறது. இந்தப் பங்கின் வார சார்ட்டானது, நல்லதொரு விலைக்கான போக்கைக் காட்டுகிறது.

தற்போதைய விலையில் வாங்கவும். ஸ்டாப்லாஸ் ரூ.358-ஆக வைத்துக்கொள்ளவும்.  இந்தப் பங்கின் விலை ரூ.371-ஐ  தாண்டிப் புதிய உச்சத்திற்கு  செல்லக்கூடும். 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

கார்வார் பாலியஸ்டர் (GARWARPOLY)

தற்போதைய விலை: ரூ.171.50


வாங்கலாம்

நல்ல பாலியஸ்டர்  நிறுவனப் பங்குகளுக்கு, பங்குச் சந்தையில் எப்போதுமே நல்ல தேவை யிருக்கிறது.

இந்தப் பங்கின் விலையில் நல்லதொரு போக்குக்குப்பிறகு, சில வாரங்களாக இறக்கம், அதிலிருந்து சிறிது ஏற்றம் என அண்மைக் காலத்தில் இதன் போக்கு இருக்கிறது.

தற்போது மேலேறும் அறிகுறி தெரிகிறது. தற்போதைய விலையில் முதலீடு செய்யலாம். ஸ்டாப்லாஸ் ரூ.163 வைத்துக்கொள்ளவும். பங்கின் விலை ரூ.190 வரை ஏற்றம் காணலாம்.  

தொகுப்பு:

பா.முகிலன், தெ.சு.கவுதமன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.