நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஃப்யூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்... எப்படி லாபம் பார்ப்பது?

ஃப்யூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்... எப்படி லாபம் பார்ப்பது?
பிரீமியம் ஸ்டோரி
News
ஃப்யூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்... எப்படி லாபம் பார்ப்பது?

ஃப்யூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்... எப்படி லாபம் பார்ப்பது?

ங்கு, கமாடிட்டி, கரன்சி சந்தைகளில் ஃப்யூச்சர்ஸ் அண்டு ஆப்ஷன்ஸைப் (எஃப் அண்டு ஓ) பயன்படுத்தி, எப்படி லாபம் பார்ப்பது என்பது குறித்து நாணயம் விகடன் சமீபத்தில் சென்னையில் கட்டணப் பயிற்சி வகுப்பை இரண்டு நாள்களுக்கு நடத்தியது. எக்ட்ரா  பங்குச் சந்தை மற்றும் கமாடிட்டி பயிற்சி மையத்தின் தலைவர் தி.ரா.அருள்ராஜன் பயிற்சியளித்தார்.

ஃப்யூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்... எப்படி லாபம் பார்ப்பது?

ஸ்பாட் மார்க்கெட்டுக்கும் ஃப்யூச்சர்ஸ் மார்க்கெட்டுக்கும் உள்ள தொடர்பு, ஓப்பன் இன்ட்ரஸ்ட் அடிப்படையில் எப்படி டிரேட் செய்வது, ஹெட்ஜிங் உத்திகள், ஆப்ஷன்ஸ் உத்திகள் (கவர்ட் கால், புரட்டக்ட்டிவ் புட், ஸ்ட்ராடில், ஸ்ட்ராங்கில், ஸ்பிரட் டிரேட், பட்டர்ஃபிளை) பற்றி விரிவாகப் பல்வேறு உதாரணங்களுடன் விளக்கிச் சொன்னார்.

ஃப்யூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் அடிப்படையில் பங்குகளில் வர்த்தகம் செய்வது எப்படி என்பது குறித்து ‘லைவ்’-ஆக அவர் விளக்கிச் சொன்னதை  இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டவர்கள் ஆர்வத்துடன் கேட்டனர்.

ஃப்யூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்... எப்படி லாபம் பார்ப்பது?

ஃப்யூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் இடையே உள்ள வேறுபாடுகள் என்னென்ன, எதை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து விரிவாக எடுத்துச்சொன்னார் அருள்ராஜன். ஃப்யூச்சர்ஸ் வர்த்தகத்தில் பங்குகள், கமாடிட்டிகள், கரன்சிகளுக்கு எவ்வளவு மார்ஜின் கட்ட வேண்டும் என்கிற விவரம் பட்டியலிட்டுக் காட்டப்பட்டது. இதேபோல், ஆப்ஷன்ஸ் வர்த்தகத்தில் எவ்வளவு பிரீமியம் கட்டவேண்டி வரும், எவ்வளவு பிரீமியம் கிடைக்கும் என்று சொன்னதுடன், இந்த விவரங்களை எங்கே பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் என்றும் சொல்லித்தரப்பட்டது. 

இந்தப் பயிற்சி வகுப்பில் இளைஞர்கள், நடுத்தர வயதினர், மூத்த குடிமக்கள் எனப் பல தரப்பினரும் கலந்துகொண்டது ஆச்சர்யம். இது எஃப் அண்டு ஓ பற்றி முழுமையான பயிற்சி வகுப்பு என்று புகழ்ந்தனர் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டவர்கள்.

 - சேனா சரவணன்

படங்கள்: தி.குமரகுருபரன்