நடப்பு
தொடர்கள்
Published:Updated:

இன்ஃபோசிஸ் - டி.சி.எஸ்: முதலீட்டுக்கு எது பெஸ்ட்?

இன்ஃபோசிஸ் - டி.சி.எஸ்: முதலீட்டுக்கு எது பெஸ்ட்?
பிரீமியம் ஸ்டோரி
News
இன்ஃபோசிஸ் - டி.சி.எஸ்: முதலீட்டுக்கு எது பெஸ்ட்?

பிரவீன் ரெட்டி, முதன்மை ஆலோசகர், induswealth

டந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டு முடிவுகள் வரத் தொடங்கிவிட்டது. முக்கிய நிறுவனங்கள் தங்கள் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. ஐ.டி நிறுவனங்களின் முடிவுகளும் வெளிவந்துவிட்டன. இதில் இன்ஃபோசிஸ், டி.சி.எஸ் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் கவனிக்கத்தக்கதாக உள்ளன. 

டி.சி.எஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 2017-18-ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் 4.5% அதிகரித்துள்ளது. 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகள் அறிவிக்கப்பட்டதோடு, பங்கு ஒன்றுக்கு 29 ரூபாயை டிவிடெண்டாக வும் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து டி.சி.எஸ் பங்கின் விலை 6% அதிகரித்தது.

இதே காலாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 2.4% அதிகரித்துள்ளது.  காலாண்டு முடிவு வெளியான இன்ஃபோசிஸ் பங்கின் விலை சுமார் 5% இறக்கம் கண்டது.  

இன்ஃபோசிஸ் - டி.சி.எஸ்: முதலீட்டுக்கு எது பெஸ்ட்?

இன்ஃபோசிஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை, பல விஷயங்கள் நெகட்டிவாக இருந்தாலும், பல தரகு நிறுவனங்கள் இன்ஃபோசிஸ் பங்குகளில் முதலீடு செய்யப் பரிந்துரை செய்துள்ளன. மார்ச் காலாண்டு முடிவுகள் நன்றாக இருக்கும் என்கிற கணிப்பில் மார்ச் மாதத்திலே மியூச்சுவல் நிறுவனங்கள் ரூ.4,100 கோடி மதிப்புக்கு டி.சி.எஸ் பங்குகளில் முதலீடு செய்துள்ளன.

இன்ஃபோசிஸ் - டி.சி.எஸ்: முதலீட்டுக்கு எது பெஸ்ட்?


டி.சி.எஸ் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்ததால், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் 100 பில்லியன் டாலரைத் தாண்டிய சந்தை மூலதன மதிப்புக்கொண்ட முதல் இந்திய ஐ.டி நிறுவனமாக டி.சி.எஸ் உருவெடுத்துள்ளது. இதன்மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.டி.சி, இந்துஸ்தான் யுனிலீவர், ஹெச்.டி.எஃப்.சி, மாருதி சுஸூகி மற்றும் இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங் களைப் பின்னுக்குத் தள்ளி, புதிய சாதனை படைத்துள்ளது டி.சி.எஸ்.

தகவல் தொழில் நுட்பத்துக்கான உலக வரைபடத்தில் இந்தியாவைக் கொண்டுபோய் சேர்த்த டி.சி.எஸ் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவற்றையே சாரும். லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் மற்றும் குறிப்பிடத் தக்க அளவிலான செல்வத்துடன் கூடிய ஒரு துறையை இந்த நிறுவனங்கள் உருவாக்கியுள்ளன.

கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இரு நிறுவனங்க ளிலும் முதலீடு செய்த முதலீட்டாளரின் அனுபவத்துடன் கூடிய பார்வையில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளதே தவிர, இந்த இரண்டில் எந்த ஒரு நிறுவனத்தின் தொழில் வியூகத்தையும் விமர்சிக்கும் நோக்கில் எழுதப்படவில்லை.இந்தக் கட்டுரை, முதலீட்டாளரின் அனுபவத்தை மூன்று வெவ்வேறு பார்வைகளில் அலசுகிறது.

இன்ஃபோசிஸ் - டி.சி.எஸ்: முதலீட்டுக்கு எது பெஸ்ட்?

அ) ஜனவரியில் முதலீடு செய்து டிசம்பரில் அதனை விற்றுவிடும் ஒரு முதலீட்டாளர்

ஆ) ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே முதலீடு செய்து, அந்த முதலீட்டை இந்த நாள் (2018, மார்ச் 31) வரை வைத்திருக்கும் ஒரு முதலீட்டாளர்

இ) மாதாமாதம் சமச்சீர் (systematical) முறைப்படி முதலீடு செய்து அதனை இந்த நாள் (2018, மார்ச் 31) வரை வைத்திருக்கும் ஒரு முதலீட்டாளர்.

ஒவ்வோர் ஆண்டும் ஜனவரியில் முதலீடு செய்து அதனை டிசம்பரில் விற்றுவிடும் முதலீட்டாளர்களுக்கான வருமானம்.

இன்ஃபோசிஸ்: கடந்த 12 ஆண்டுகளில் ஜனவரியில் வாங்கி டிசம்பரில் விற்ற முதலீட்டாளர்கள், ஆறு ஆண்டுகளில் சென்செக்ஸைவிட அதிக வருமானம் ஈட்டியுள்ளனர்.

டிசிஎஸ் : கடந்த 12 ஆண்டுகளில் ஜனவரியில் வாங்கி டிசம்பரில் விற்ற முதலீட்டாளர்கள், நான்கு ஆண்டுகளில் சென்செக்ஸைவிட அதிக வருமானம் ஈட்டியுள்ளனர்.

இன்ஃபோசிஸ் - டி.சி.எஸ்: முதலீட்டுக்கு எது பெஸ்ட்?

2011-ல் ஆரம்பித்து, அதாவது, கடந்த ஏழு  ஆண்டுகளில் இன்ஃபோசிஸ் மற்றும் டி.சி.எஸ் ஆகிய இரு நிறுவனங்களிலுமே முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்குக் கிடைத்த 12 மாத வருமானம்  இரண்டு முறை மட்டுமே சென்செக்ஸ் வருமானத்தை முந்தியுள்ளது.

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே முதலீடு செய்து, அதனை 2018, மார்ச் 31 வரை வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கான வருமானம்

இன்ஃபோசிஸ் : இந்தப் பங்கை வாங்கி, 2018 மார்ச் 31-ம் தேதி வரை வைத்திருந்த முதலீட்டாளர் கள், கடந்த 12 ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகள் மட்டுமே சென்செக்ஸைவிட அதிக வருமானம் பெற்றுள்ளனர்.

டி.சி.எஸ் : இந்தப் பங்கை வாங்கி, 2018 மார்ச் 31-ம் தேதி வரை வைத்திருந்த முதலீட்டாளர்கள், கடந்த 12 ஆண்டுகளில் எட்டு ஆண்டுகள் சென்செக்ஸைவிட அதிக வருமானம் பெற்றிருக்கிறார்கள்.

2011-ல் ஆரம்பித்து, அதாவது, கடந்த ஏழு ஆண்டுகளில், இரு நிறுவனங்களிலுமே முதலீடு செய்து, இன்றைய தேதி வரை அவற்றை வைத்திருந்த முதலீட்டாளர்களுக்குக் கிடைத்த வருமானம், இன்ஃபோசிஸ் ஒருமுறையும், டி.சி.எஸ் மூன்று முறையும் சென்செக்ஸ் வருமானத்தை முந்தியுள்ளது.

ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்து, அதனை 2018 மார்ச் 31 வரை வைத்திருந்த முதலீட்டாளர்களுக்கான  வருமானம்

இன்ஃபோசிஸ்: ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து, அதனை 2018 மார்ச் 31 வரை வைத்திருந்த முதலீட்டாளர் களுக்கு, கடந்த 12 ஆண்டுகளில் சென்செக்ஸை விட ஒருமுறை மட்டுமே அதிக வருமானம் கிடைத்துள்ளது.

இன்ஃபோசிஸ் - டி.சி.எஸ்: முதலீட்டுக்கு எது பெஸ்ட்?

டி.சி.எஸ் : ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து, அதனை 2018 மார்ச் 31 வரை வைத்திருந்த முதலீட்டாளர்கள், கடந்த 12 ஆண்டுகளில் சென்செக்ஸைவிட ஏழு முறை  அதிக வருமானம் பெற்றிருக்கிறார்கள்.

2011-ல் ஆரம்பித்து, அதாவது, கடந்த ஏழு ஆண்டுகளில், இரு நிறுவனங்களிலுமே ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து, அவற்றை 2018 மார்ச் 31 வரை வைத்திருந்த முதலீட்டாளர்களுக்குக் கிடைத்த வருமானத்தில்  இன்ஃபோசிஸ் ஒரு முறையும், டி.சி.எஸ் இரண்டு முறையும் சென்செக்ஸை முந்தியுள்ளன.

சுருக்கமாக... டி.சி.எஸ் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களிலுமே முதலீடு செய்த ஆரம்பகால முதலீட்டாளர்களுக்கு, பங்குச் சந்தையைத் தாண்டிய வருமானத்தை  இரு நிறுவனப் பங்குகளும் கொடுத்துள்ளன. 2011-ம் ஆண்டிலிருந்து இந்தப் பங்குகள் மூலம் கிடைத்த வருமானம், எதிர்பார்த்ததைவிடக் குறைவாக இருக்கிறது. குறிப்பாக, முறையான காலவரையறையுடன் முதலீடு செய்த முதலீட்டாளர்கள், பங்குகளை நீண்ட காலத்துக்கு வைத்திருந்த முதலீட்டாளர்கள் விஷயத்தில் இது உண்மையாக உள்ளது.

இதுவரை கிடைத்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு மூலம் நாங்கள் நம்புவது என்னவெனில், இன்ஃபோசிஸ் மற்றும் டி.சி.எஸ் ஆகிய நிறுவனங்களுமே முறையான காலவரையறையுடன் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் மற்றும் நீண்ட காலத்துக்கு அவற்றை வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்குப் பங்குச் சந்தையைத் தாண்டிய வருமானம் கிடைப்பது கடினமே! 

தொகுப்பு: பா.முகிலன்

இன்ஃபோசிஸ் - டி.சி.எஸ்: முதலீட்டுக்கு எது பெஸ்ட்?

63% அதிகரித்தது ஃபேஸ்புக்கின் லாபம்!

ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துகிறவர்கள் தொடர்பான தகவல்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை என்கிற சர்ச்சை பெரிய அளவில் கிளம்பினாலும், கடந்த நான்காம் காலாண்டில் ஃபேஸ்புக் கணக்கினைப் பயன்படுத்துகிறவர்களின் எண்ணிக்கை ஏறக்குறை 63% அதிகரித்து
பெரும் ஆச்சர்யத்தை அளித்திருக்கிறது.

உலக அளவில் இந்த சேவையைத் தீவிரமாகப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 202  கோடி பேராக உயர்ந்துள்ளது. இதனால் இந்த நிறுவனத்தின் லாபம் 63% அதிகரித்துள்ளது. இந்தப் பங்கின் விலை கடந்த ஒரு மாதத்தில் 152 டாலரிலிருந்து 175 டாலராக உயர்ந்துள்ளது. சபாஷ் சக்கர்பர்க்!

Disclosure: Author and the clients of IndusWealth may own some or all the stocks discussed in this article and may transact in them for their own portfolios.

Disclaimer: The information provided here is based on our opinions plus our statistical and financial data and independent research. The article does not constitute individual investment advice and is not intended to be a solicitation for investment advisory services. Authors do not guarantee any results that may be obtained from investing in the securities discussed above. Readers should note that investing involves risk and they should not make any investment decision without first consulting his or her own personal financial advisor and conducting his or her own research and due diligence.