நடப்பு
தொடர்கள்
Published:Updated:

என்.ஆர்.ஐ-கள் அதிகம் பணம் அனுப்ப என்ன காரணம்?

என்.ஆர்.ஐ-கள் அதிகம் பணம் அனுப்ப என்ன காரணம்?
பிரீமியம் ஸ்டோரி
News
என்.ஆர்.ஐ-கள் அதிகம் பணம் அனுப்ப என்ன காரணம்?

என்.ஆர்.ஐ-கள் அதிகம் பணம் அனுப்ப என்ன காரணம்?

என்.ஆர்.ஐ-கள் அதிகம் பணம் அனுப்ப என்ன காரணம்?

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும்  ரூ.4,48,500 கோடி அளவுக்கு நம் நாட்டுக்குப் பணத்தை அனுப்பிச் சாதனை புரிந்திருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என ஆடிட்டர் ஜி.கார்த்திகேயனிடம் கேட்டோம்.

“இந்தியர்கள் எங்கு வசித்தாலும், சேமிக்கும் பழக்கம் அவர்களின் ரத்தத்திலேயே இருக்கிறது. நம் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலை பார்க்கச்  செல்பவர்கள் சம்பாதிக்கும் பணத்தைத் தாம்தூம் என்று செலவு செய்யாமல், சிக்கனமாக இருந்து, பணத்தை மிச்சப்படுத்தி, அதை தாய்நாட்டுக்கு அனுப்புகிறார்கள்.

என்.ஆர்.ஐ-கள் அதிகம் பணம் அனுப்ப என்ன காரணம்?

தவிர, வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்வதன் மூலம் கிடைக்கும் வட்டி குறைவுதான். ஆனால், நம் நாட்டில் வங்கி டெபாசிட் மூலம் கிடைக்கும் வட்டி அதிகம். வெளிநாட்டில் இருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதை விட நம் நாட்டில் உள்ள ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ப தால், நம் நாட்டுக்குப் பணத்தை அனுப்புகிறார்கள்.

வெளிநாடுகளுக்கு வேலை பார்க்கச் செல்லும் நம்மவர்களில் பலர் அங்கேயே செட்டிலாக  விரும்புவதில்லை. கார், வீடு என்று வாங்கினாலும், நம் நாட்டில் சொந்த மாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த ஆசையை நிறைவேற்றவும் பணம் அனுப்புகிறார்கள்’’ என்றார்.

அமெரிக்க டாலரின் மதிப்பு நன்றாக இருக்கும் நிலையில், அதிகப் பணத்தை நம்மவர்களுக்குக் கிடைக்கச் செய்யும் வெளிநாடு வாழ் இந்தியர்களை நிச்சயம் பாராட்டலாம்! 

- தெ.சு.கவுதமன்