நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஜன்தன் வங்கிக் கணக்கில் ரூ.80 ஆயிரம் கோடி... என்ன காரணம்?

ஜன்தன் வங்கிக் கணக்கில்  ரூ.80 ஆயிரம் கோடி... என்ன காரணம்?
பிரீமியம் ஸ்டோரி
News
ஜன்தன் வங்கிக் கணக்கில் ரூ.80 ஆயிரம் கோடி... என்ன காரணம்?

ஜன்தன் வங்கிக் கணக்கில் ரூ.80 ஆயிரம் கோடி... என்ன காரணம்?

ஜன்தன் வங்கிக் கணக்கில்  ரூ.80 ஆயிரம் கோடி... என்ன காரணம்?

சாதாரண மக்களுக்குத் தொடங்கப்பட்ட ஜன்தன் வங்கிக் கணக்கில் 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் டெபாசிட் ஆகியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இது எதைக் காட்டுகிறது என்கிற கேள்வியை நாணயம் ட்விட்டர் (https://twitter.com/NaanayamVikatan) சர்வேயில் கேட்டிருந்தோம்.

ஜன்தன் வங்கிக் கணக்கில்  ரூ.80 ஆயிரம் கோடி... என்ன காரணம்?

இந்த சர்வேயில் கலந்துகொண்டவர்களில் 54% பேர், சாதாரண மக்களிடம் பணம் இருப்பதையே காட்டுவதாகச் சொல்லியிருக்கிறார்கள். சாதாரண மனிதர்களிடம் பணமே இல்லை என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால், அவர் களிடமும் பணம் இருக்கிறது என்பது இந்தக் கணக்கு நடைமுறைக்கு வந்தபின்பே தெரிகிறது. இவர்கள் பணத்தை வீட்டில் வைத்துக்கொள்ளாமல்,  வங்கிக் கணக்கில் போட்டுவைப்பதே சரி என்று நினைக்கத் தொடங்கியது பாசிட்டிவான வளர்ச்சிதான்!

இந்த சர்வேயில் 39% பேர், வீட்டில் பாதுகாப்பில்லை என்பதால், வங்கியில்  போட்டு வைத்திருக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். பணத்தை வீட்டில் வைத்திருப்பதை விட, வங்கியில் போட்டுவைத்தால், சேமிப்புக் கணக்குக்குக் கிடைக்கும் குறைந்தபட்ச வட்டியாவது கிடைக்கும்.

ஜன்தன் வங்கிக் கணக்கில்  ரூ.80 ஆயிரம் கோடி... என்ன காரணம்?

இந்த சர்வேயில் கலந்துகொண்ட வர்களில் 7% பேர் மட்டுமே, வங்கியில் தான் பாதுகாப்பு என்று சொல்லி யிருக்கிறார்கள். மிகக் குறைவானவர் களே இதைச் சொல்லியிருப்பதைப் பார்த்தால், வங்கிகள்மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை குறைந்து வருகிறதோ என்கிற கேள்வி எழுகிறது.

ஆனாலும், பணத்தை வங்கியில் வைத்திருப்பதே சரி என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

- ஏ.ஆர்.கே