நடப்பு
தொடர்கள்
Published:Updated:

சென்னை மற்றும் தமிழகம்... ரியல் எஸ்டேட் எப்படி இருக்கிறது?

சென்னை மற்றும் தமிழகம்... ரியல் எஸ்டேட் எப்படி இருக்கிறது?
பிரீமியம் ஸ்டோரி
News
சென்னை மற்றும் தமிழகம்... ரியல் எஸ்டேட் எப்படி இருக்கிறது?

சி.சரவணன்

சென்னை மற்றும் தமிழகம்... ரியல் எஸ்டேட் எப்படி இருக்கிறது?

டந்த சில ஆண்டுகளாக மந்தநிலையில் காணப்படும் சென்னை ரியல் எஸ்டேட் நிலவரம் இப்போது எப்படி இருக்கிறது என்பது குறித்து சென்னையைச் சேர்ந்த முதலீட்டு ஆலோசனை நிறுவனமான ஸ்பார்க் கேப்பிட்டல் (Spark   Capital) ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் முக்கியப் பகுதிகள் இனி... 

கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளாக இந்திய ரியல் எஸ்டேட் மந்தநிலையில் காணப்பட்டது. இதற்குக் காரணங்கள் பல. குறைந்த அளவிலான தேவை, விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கும் ஃப்ளாட் களின் எண்ணிக்கை உயர்வு, வாங்க முடியாத அளவுக்கு அதிக விலை, ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் மோசமான செயல்பாடுகள், குறைந்த அளவில் தேவைப்படும் இரண்டு மற்றும் மூன்று படுக்கை அறைகள் கொண்ட வீடுகளை அதிகமாகக் கட்டியது போன்றவை.   

சென்னை மற்றும் தமிழகம்... ரியல் எஸ்டேட் எப்படி இருக்கிறது?

இந்திய அளவில் ரியல் எஸ்டேட் சுணக்கமான நிலையில் இருக்கும்போது, சென்னை மற்றும் தமிழ்நாட்டின் ரியல் எஸ்டேட் விதிவிலக்காக அமைய வாய்ப்பில்லை. 

வளர்ச்சியை வீழ்த்திய மூன்று விஷயங்கள்


கடந்த ஆறு ஆண்டுகளில் ரியல் எஸ்டேட்டுக்கான தேவை தொடர்ந்து வீழ்ச்சி கண்டது. அதுவும் 2016-17-ம் ஆண்டில், கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு வீடுகளின் தேவை மிகவும் குறைவாக இருந்தது.     2012-ம் ஆண்டின் உச்சத்திலிருந்து  வீடுகளுக்கான தேவை 40% குறைந்து காணப்பட்டது. பணமதிப்பு நீக்கம், ரெரா (RERA), ஜி.எஸ்.டி வரி நடைமுறைக்கு வந்தது போன்ற மூன்று விஷயங்களால் 2017-ம் ஆண்டில் ரியல் எஸ்டேட்டுக்கான தேவை மிகவும் குறைந்து காணப்பட்டது. 

தேவை குறைந்ததால், 2017-ம் ஆண்டில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் புதிய புராஜெக்ட்கள் அறிமுகம் குறைந்துள்ளது. தற்போது, ரெரா மற்றும் ஜி.எஸ்.டி வரி நடைமுறைக்கு வந்தபின் ரியல் எஸ்டேட் துறை எப்படி வளர்ச்சி காணப்போகிறது என்பதைப் பார்த்துவிட்டு, புதிய புராஜெக்ட்டு களில் இறங்கலாம் என்று சில டெவலப்பர்கள் காத்திருக் கிறார்கள்.

விற்காமல் தேங்கிக் கிடக்கும் வீடுகள்

டயர் 1 நகரங்களில் கடந்த ஏழு ஆண்டுகளில் விற்காமல் தேங்கிக் கிடக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. அதாவது, 2010-ம் ஆண்டில் விற்காத ஃப்ளாட்கள் 4,11,000-ஆக இருந்தது. இது 2017-ல் 8,05,000-ஆக அதிகரித்துள்ளது.   

சென்னை மற்றும் தமிழகம்... ரியல் எஸ்டேட் எப்படி இருக்கிறது?

சென்னையைப் பொறுத்த வரையில், கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் விற்பதற்குச் சராசரியாக 41 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றன.

விலை அதிகரிக்கவில்லை

கடந்த 2005-ம் ஆண்டிலிருந்து 2012-ம் ஆண்டு வரை குடியிருப்பு களின் விலை மிகவும் வேகமாக அதிகரித்தது. அதன்பிறகு, இப்போது வரைக்கும் தேக்க நிலையில்தான் காணப்படுகிறது. கடந்த ஐந்தாண்டுகளாக விலை அதிகரிப்பானது பணவீக்க உயர்வு என்கிற அளவுக்குக்கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மூன்றாண்டுகளாக சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலை அதிகரிக்கவில்லை என்பதுடன், பல பில்டர்கள் விலையில் 5% முதல் 10% தள்ளுபடி தந்து விற்க முயற்சி செய்தது  குறிப்பிடத்தக்கது.

சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலை கடந்த 2000 முதல் 2014 வரையிலான காலத்்தில் 42% அதிகரித்தது. 2000-2014 வரையிலான காலகட்டதில் சென்னையை விட அதிகமாக டெல்லி (73%), நொய்டா (60), புனே (59%) ஆகிய நகரங்களில் விலை அதிகரிப்பு அதிகமாக இருந்தது. அகில இந்திய அளவில் சராசரி விலை உயர்வு இந்தக் காலகட்டத்தில் 44% ஆக இருந்தது. சென்னையில், கடந்த 2014 முதல் 2017 வரையில் விலை அதிகரிப்பு வெறும் 4 சதவிகிதமாகவே உள்ளது.

 எதற்காக வீடு வாங்கினார்கள்?

கடந்த 25 ஆண்டுகளில் இந்திய ரியல் எஸ்டேட் சந்தையில் 2003 முதல் 2008 வரையிலான ஆறு ஆண்டுகளில் மட்டுமே சொந்தக் குடியிருப்புத் தேவைகளுக்காக அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகமாக வாங்கப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் அதிக அளவில் நகரமயமானது மற்றும் அதிக வேலை உருவாக்கம் நடந்ததுடன், தகவல் தொழில்நுட்பத் துறையும் (ஐ.டி) நன்கு வளர்ச்சி  கண்டது. இந்தக் காலத்தில், தேவை மற்றும் அளிப்பு (demand & supply) இணைந்து அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. 

சென்னை மற்றும் தமிழகம்... ரியல் எஸ்டேட் எப்படி இருக்கிறது?

1993-1995 மற்றும் 2011-2013-ம் ஆண்டுகளில் விற்காத வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்தபோதிலும், சொத்துகளில் முதலீடு செய்பவர்கள் மற்றும் ஊகத்தின் அடிப்படையில் வாங்குபவர்கள் ஆர்வத்துடன் காணப்பட்டார்கள். இந்தக் காலத்தில் டயர் 2, 3 நகரங்களில்கூட ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்பவர்கள் அதிகமாக இருந்தனர். 

ஆனால், கடந்த 2014 முதல் 2017 வரையில் ரியல் எஸ்டேட் விலை இறக்கத்தில் இருந்தது. தனிநபர் வருமானம் குறைந்துபோனது, வீடு வாங்கும் தகுதி குறைந்தது, விற்காத வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்தது, நுகர்வோர் நம்பிக்கை குறைந்த போன்றவை இதற்குக் காரணங்களாகும்.  

சென்னை மற்றும் தமிழகம்... ரியல் எஸ்டேட் எப்படி இருக்கிறது?

கடந்த சில ஆண்டுகளாக, தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் பெரிதாக வருமானம் கொடுக்காததால், நிதி சார்ந்த முதலீடுகளுக்கு (பங்குகள், மியூச்சுவல்) நம் மக்கள் பெருமளவில் மாறியிருக்கிறார்கள். கடந்த 2012-ம் ஆண்டில் இந்தியர்களின் முதலீடு நிதி சார்ந்த திட்டங்களில் 31%, வீடு, மனை ஆகிய பிசிக்கல் சொத்துகளில் 67%, தங்கம் மற்றும் வெள்ளியில் 2% முதலீடு செய்திருந்தனர். ஆனால், இது 2016-ம் ஆண்டில் நிதி சார்ந்த திட்டங்களில் 41%, பிசிக்கல் சொத்துகளில் 57%, தங்கம் மற்றும் வெள்ளியில் 2 சதவிகிதமாக மாறியிருக்கிறது.

 ரியல் எஸ்டேட் சுழற்சி

இதர சொத்துப் பிரிவுகளுடன் ஒப்பிடும்போது, ரியல் எஸ்டேட் சுழற்சிகள் (Real estate cycles) இயற்கையிலேயே நீண்டதாக இருக்கிறது. (பார்க்க, பக்கம் 26-ல் உள்ள அட்டவணை) பொதுவாக, ரியல் எஸ்டேட் சுழற்சி மிக நீண்டதாக அதாவது, 15 ஆண்டுகள் சுழற்சியும், பங்குச் சந்தை 7 முதல் 8 ஆண்டுகள் சுழற்சியையும், தங்கம் 10 ஆண்டுகள் சுழற்சியையும் கொண்டுள்ளது.பொதுவாக, ரியல் எஸ்டேட் துறையில் ஏற்றத்தை அடுத்து விலை வீழ்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு
(Consolidation) நிலை காணப்படும்.

எப்போது வளர்ச்சி?

விற்காமல் தேங்கிக் கிடைக்கும் ஃப்ளாட்களில் 67%, 1-2 படுக்கை அறை கொண்ட வீடுகளாக இருக்கின்றன. இந்தப் பிரிவில்தான் கடந்த இரு ஆண்டுகளில் அதிக வீடுகள் கட்டப்பட்டுள்ளன. விற்காமல் தேங்கிக் கிடைக்கும் ஃப்ளாட்களில் 33%, மூன்று படுக்கை அறை வீடுகளாக இருக்கின்றன. இந்த வீடுகளைப் பெரும்பாலான நுகர்வோரால் வாங்க முடியாத நிலையே காணப்படுகிறது.

சென்னையில் விற்காமல் தேங்கிக் கிடைக்கும் ஃப்ளாட்களில் ஒரு படுக்கை அறை வீடுகள் 14%, இரண்டு படுக்கை அறை வீடுகள் 45%, மூன்று  படுக்கை அறை வீடுகள் 36 சதவிகிதமாக உள்ளது. சென்னையில் 1, 2 மற்றும் 3 படுக்கை அறை கொண்ட ஃப்ளாட்கள் வாங்க வேண்டும் என்றால்,  முறையே ரூ.27 லட்சம், ரூ.43 லட்சம் மற்றும் ரூ.77 லட்சம் தேவைப்படும்.

ஹைதராபாத், கொல்கத்தாவில் வீடுகளின் விலை சென்னையை விடக் குறைவாக உள்ளன. அதே சமயம், மும்பை, பெங்களூரு நகரில் சென்னையைவிட அதிகமாக உள்ளன. 

இனி எப்படியிருக்கும்?


ரியல் எஸ்டேட் அடுத்த மூன்று, நான்கு ஆண்டுகளில்  விலை ஒரு நிலையை அடைந்து, மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு வந்து, அதன் பிறகு வளர்ச்சியை நோக்கிச் செல்லும் என ஸ்பார்க் கேப்பிட்டல் எதிர்பார்க்கிறது.

தனிநபர் வருமானம் படிப்படியாக அதிகரித்து வருவது, தனிநபர்களின் வீடு வாங்கும் தகுதி மேம்பட்டு வருவது, விற்காத வீடுகளின் எண்ணிக்கை குறைந்து வருவது, நுகர்வோர் நம்பிக்கை மேம்பட்டு வருவது போன்றவை 2018-ம் ஆண்டு முதல் ரியல் எஸ்டேட் வளர்ச்சி காண்பதற்கான காரணங்களாகும்.  

கடந்த சில ஆண்டுகளில் சம்பள வளர்ச்சி இல்லை. ஆனாலும், ரியல் எஸ்டேட் விலை உயராதது, குறைவான வீட்டுக் கடன் வட்டி மற்றும் வருமான வரிச் சலுகைகள் போன்றவை தனிநபர்களிடம் வீடு வாங்க வேண்டும் என்கிற எண்ணத்தைத் தோற்றுவித்துள்ளன. 

தற்போது டெவலப்பர்கள் 1-2 படுக்கை அறை கொண்ட வீடுகள், சிறிய வீடுகளை அதிக அளவில் அறிமுகப்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். இதனால், தனிநபர்கள் இடையே வீடு வாங்கும் தகுதி அதிகரித்துள்ளது. 

மேலும், வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் (சுமார் 8.5%) குறைந்திருப்பது, முதல் வீடு வாங்குபவர்களுக்குப் பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின் (PMAY) கீழ் வழங்கப்படும் சுமார் ரூ.2.60 லட்சம் வட்டி மானியம், வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்குபவர்களுக்கு அளிக்கப்படும் வருமான வரிச் சலுகைகள் (திரும்பச் செலுத்தும் அசலில் ரூ.1.5 லட்சம் மற்றும் வட்டியில் ரூ.2 லட்சம்) போன்றவை, வீடு வாங்கும் எண்ணத்தை பலரிடம் ஏற்படுத்திருக்கிறது. 

தற்போதைய ரியல் எஸ்டேட்டில் பயன்பாட்டுக்காக வாங்குபவர்கள் (End user) எண்ணிக்கை முன்பைவிட அதிகரித்துள்ளது. அகில இந்திய அளவில் கடந்த 2007-ம் ஆண்டில் தேவைக்கு ஃப்ளாட் வாங்குபவர்கள் 81 சதவிகித மாகவும், முதலீட்டாளர்கள் 19 சதவிகிதமாகவும் இருந்தனர். 2012-ல் தேவைக்கு வாங்குபவர்கள் 68 சதவிகிதமாகவும், முதலீட்டுக்காக வாங்கு பவர்கள் 32 சதவிகிதமாகவும் மாறியிருந்தது. 2017-ல் தேவைக்கு வாங்குபவர்கள் 89 சதவிகித மாகவும், முதலீட்டுக்கு வாங்குபவர்கள் 11 சதவிகிதமாகவும் உள்ளனர்.

கடந்த 2014-17-ம் ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் 1% வருமானம் தந்திருக்கிறது. இந்தக் காலத்தில் பங்குச் சந்தை வரியில்லா வருமானம் 7% அளித்திருக்கிறது. பொதுவாக, கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளில் எந்த முதலீடு அதிக லாபம் தருகிறதோ, அந்த முதலீட்டுக்கு மக்கள் மொத்த மாகத் திரும்பிவிடுவார்கள். அந்த வகையில், தற்போது பங்குச் சந்தை மற்றும் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளின் பக்கம் மக்களின் கவனம் மொத்தமாகத் திரும்பியிருக்கிறது. 

அண்மைக் காலத்தில், வீடு வாங்குபவர்களின் தேவை அறிந்து தரமாகவும், வாங்கக்கூடிய விலையிலும் வீடுகளைக் கட்டி விற்பதில் டெவலப்பர்கள் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். 

கடந்த மூன்று ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையில் வாங்கக்கூடிய விலையிலான வீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், 2012-ம் ஆண்டில் மொத்த ஃப்ளாட்கள் அறிமுகத்தில் ஒன்று, இரண்டு படுக்கை அறை வீடுகள் 60 சதவிகிதமாக இருந்தன. இது 2017-ல் 77 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. மேலும், வீடுகளை வாங்கக்கூடியதாக மாற்ற ஒன்று, இரண்டு படுக்கை அறை வீடுகளின் அளவை டெவலப்பர்கள் குறைத்திருக்கிறார்கள். இதேபோல், இரண்டு படுக்கை அறை வீடுகளின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்ட மொத்த ஃப்ளாட்களில் ஒன்று, இரண்டு படுக்கை அறை கொண்ட வீடுகள் 2013-ல் 63 சதவிகித மாக இருந்தது, 2017-ல் 66 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

கடந்த 2008 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் டெவலப்பர்கள் தாங்கள் பெற்ற அனுபவங்கள் மற்றும் செய்த தவறுகளின் அடிப்படையில் தங்களின் அணுகுமுறையை அண்மைக் காலத்தில் பெரிதும் மாற்றியிருக்கிறார்கள். 

மொத்தமாக நிலங்களை வாங்கிப் போட்டுப் பணத்தை முடக்கியதை மாற்றி, கூட்டுத் திட்டத்தின் அடிப்படையில் மற்றவர்களின் இடத்தில் அவர்களுடன் இணைந்து புராஜெக்ட்களை அறிமுகப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். நகரங்களுடன் போக்குவரத்துத் தொடர்பு இல்லாத இடங்களில் நகரியங்களை மேற்கொண்டதை மாற்றி, போக்கு வரத்து வசதியுள்ள இடங்களில் சிறிய கட்டுமானங்களை மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.

சுருக்கமாக, மிகச் சிலரால் மட்டுமே வாங்கக்கூடிய சொகுசுக் குடியிருப்புகளை அறிமுகம் செய்த நிலை மாறி, அனைவரும் வாங்கக் கூடிய விலையில் வீடுகள் அறிமுகமாவது அதிகரித்துள்ளது.

ரியல் எஸ்டேட் சுழற்சி என்பது இயற்கையில் நீண்டதாக இருக்கிறது. ஸ்பார்க் கேப்பிட்டல் சுட்டிக்காட்டும் கருத்துப்படி, 2017-ல் ரியல் எஸ்டேட் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. இப்போது அந்த நிலையிலிருந்து மீண்டு, படிப்படியாக முன்னேற்றம் காணும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏற்கெனவே சிறப்பாகச் செயல்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், அதிக எண்ணிக்கை யிலான வாங்கக்கூடிய விலை யிலான வீடுகள், நிதித்திறன் அதிகரிப்பு போன்றவற்றினால் இந்திய ரியல் எஸ்டேட் துறையின் முகம் படிப்படியாக மாறி வருகிறது.

தேவை அதிகரிக்கத் தொடங்கி யிருப்பதால், ரியல் எஸ்டேட் இறக்கத்திலிருந்து மீண்டு வருதற்கான காரணங்களாகப் பின்வரும் விஷயங்கள் உள்ளன.

1. மக்களின் வீடு வாங்கும் தகுதி அதிகரிப்பு

2. அதிகத் தேவையுள்ள வாங்கக்கூடிய விலையில் வீடுகள் (Affordable Homes) கட்டுவது, மத்திய அரசு அளிக்கும் வட்டி மானியச் சலுகையால் அதிகரிப்பு

3. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு வீடு வாங்குபவர்களின் மத்தியில் சென்டிமென்ட் அதிகரித்துள்ளது.

அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவில் புதிதாக இரண்டு கோடி வீடுகள் தேவை. மேலும், இந்தக் காலத்தில் சுமார் ஐந்து கோடிப் பேர் தங்களின் முதல் வீட்டை வாங்கத் தயாராக இருப்பார்கள். ஆனால், வேலை வாய்ப்பு அதிகரிக்க வேண்டும், தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி) மற்றும் அது சார்ந்த சேவைகள் துறையில் சம்பளம் அதிகரிக்க வேண்டும், வீடு வாங்குபவர்கள் மத்தியில் தேவை அதிகரிக்க வேண்டும். இந்த மூன்று விஷயங் களும் நடந்தால் மட்டுமே ரியல் எஸ்டேட் துறை முழு அளவில் வளர்ச்சி காணும்.

பணமதிப்பு நீக்கம், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் (RERA) நடைமுறைக்கு வந்தது, சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வந்தது போன்ற காரணங்களினால் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த 2017-ல் புதிய வீடுகளுக்கான தேவை குறைந்தது. ஆனால், 2018 முதல் ரியல் எஸ்டேட் துறையில் வளர்ச்சி ஏற்படும் என்று எதிர்பார்க்கலாம். 

அடுத்த 18 முதல் 24 மாதங்களில் ரியல் எஸ்டேட் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புள்ளது என்று சொல்லியிருக்கிறது ஸ்பார்க் கேப்பிட்டல்.

ரியல் எஸ்டேட்டைப் பொறுத்தவரை, இப்போது வாங்கு வதற்கான காலம். விலை ஓரளவுக்குக் குறைவாக இருக்கும் இந்த சமயத்தில், தேவை இருப்பவர்கள் மனையையோ அல்லது ஃப்ளாட்டையோ  வாங்குவது புத்திசாலித்தனம்!

சென்னை மற்றும் தமிழகம்... ரியல் எஸ்டேட் எப்படி இருக்கிறது?

வீட்டு வாடகை... மீண்டும் உச்சத்தில்!

வீ
ட்டு வாடகையானது மீண்டும் உச்சத்தை நோக்கி வேகமாக செல்லத் தொடங்கியிருக்கிறது. 2017 ஜூலையில் 4.7 சத விகிதமாக இருந்த வீட்டு வாடகை 2018-ல் 8.3 சத விகிதமாக உயர்ந்திருக் கிறது. வீட்டு வாடகை உயர்வு கடந்த 2012-ல் 9.2% என்கிற உச்சத்தைத் தொட்டது. பிறகு இறங்கத் தொடங்கி, 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் 5% என்கிற அளவில் மட்டுமே இருந்தது. ஏழாவது சம்பள கமிஷனில் வீட்டு வாடகைக்கான தொகை உயர்த்தப்பட்டதன் காரணமாக வீட்டு வாடகை உயர்ந்துள்ளதாக ஆர்.பி.ஐ செய்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. வீட்டு வாடகை உயர்ந்தால், மீண்டும் ரியல் எஸ்டேட் விலை உயரும் என்பதில் சந்தேகமில்லை!

சென்னை மற்றும் தமிழகம்... ரியல் எஸ்டேட் எப்படி இருக்கிறது?

தமிழகத்தில் ரியல் எஸ்டேட்  எப்படி இருக்கிறது?

ரி
யல் எஸ்டேட்டைப் பொறுத்தவரை, சென்னையின் காணப்படும் நிலைதான் தமிழகத்தின் இதர நகரங்களிலும் காணப்படுகிறது. சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் விற்காமல் தேங்கிக் கிடக்கும் நிலையில், சென்னையின் புறநகர்கள் மற்றும் தமிழகத்தின் இதர நகரங்களில் போடப்பட்ட லே அவுட் மனைகள் பெருமளவில் விற்காமல் தேங்கிக் கிடக்கின்றன. 

சென்னையை ஒட்டிய புறநகர்களில் சில ஆண்டுகளுக்குமுன் கட்டப்பட்டு, ரூ.40 லட்சம் விலை சொல்லப்பட்ட இரண்டு படுக்கை அறை ஃப்ளாட்கள் இப்போது ரூ.30 லட்சத்துக்கும் குறைவாக விலை குறைப்பட்டபின்பும் வாங்குவதற்கு ஆள் இல்லை. இதேபோல, மதுரை, கோவை, திருச்சி போன்ற முக்கிய நகரங்களில் ரியல் எஸ்டேட்களின் விலை 10 - 20% குறைத்தபின்பும், தேவை இருப்பவர்கள் மட்டுமே வாங்குகிறார்கள்.

தமிழகம் முழுக்கப் பஞ்சாயத்து அப்ரூவல் இல்லாமல் போடப்பட்ட பல ஆயிரம் மனைகள் விற்பனை செய்ய முடியாமல் கிடக்கின்றன. அப்ரூவல் இல்லாத மனைகளை ஒழுங்குபடுத்த தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறைகள் சுலபமாக நடைமுறைப்படுத்தும் விதத்தில் இல்லை. இதுகுறித்த விவரங்கள் பொதுமக்களுக்குத் தெரியவில்லை என்பது ஒருபுறமிருக்க, அரசு அதிகாரிகள் பலருக்கே தெரியவில்லை என்பது ஆச்சர்யம். இதனால் அவசரத்துக்கு சொத்தை விற்க முடியாமல் திணறி வருகிறார்கள் மக்கள்.

ரியல் எஸ்டேட் நன்றாகப் போகும் என்கிற கணிப்பில் ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கிப்போட்ட ரியல் எஸ்டேட் அதிபர்கள், அதனை 25 சென்டுகளாக விவசாய நிலமாகப் பிரித்து விற்பனை செய்யும் முயற்சியில் களமிறங்கி இருக்கிறார்கள். இதற்கும் பெரிய ஆதரவு இல்லை. சில புரமோட்டர்கள் டி.டி.சி.பி அனுமதி பெற்ற லே அவுட்களைப் போட்டிருக்கிறார்கள். அவையும் விற்காமல் தேங்கிக் கிடக்கின்றன.  

 - சேனா சரவணன்

சென்னை மற்றும் தமிழகம்... ரியல் எஸ்டேட் எப்படி இருக்கிறது?

ஃபேஸ்புக்கை விட்டு வெளியேறினார் வாட்ஸ் அப் துணை நிறுவனர்!

வா
ட்ஸ் அப் நிறுவனத் தின் துணை நிறுவனர் ஜேன் கொவ்ம் (Jan Koum) ஃபேஸ்புக் நிறுவனத்தை விட்டு வெளியேறியிருக் கிறார். ஜேன், தனிமனித சுதந்திரத்தை மிகவும் மதிக்கக்கூடியவர். ஆனால், தனிமனிதர்கள் தொடர்பான தகவல்கள் பிறருக்கு விற்கப்பட்ட சர்ச்சையில், சமீபத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் சிக்கியது. இந்தச் சர்ச்சை குறித்து விசாரணை நடந்துவரும் சமயத்தில், ஜேன் கொவ்ம் விலகியது, ஃபேஸ்புக் நிறுவனத் துக்குப் பெரும் தர்மசங்கடம் ஏற்பட்டிருக்கிறது. ஜேன் மற்றும் பிரையன் இணைந்து உருவாக்கிய வாட்ஸ்அப் நிறுவனத்தை ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த 2014-ல் 19 பில்லி யன் டாலருக்கு வாங்கியது குறிப்பிடத் தக்கது!