நடப்பு
தொடர்கள்
Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

தி.ரா.அருள்ராஜன், தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in

மென்தா ஆயில்

மெ
ன்தா ஆயில்  என்ற கமாடிட்டி பல்வேறு வகையான உபயோகங்களைக் கொண்டுள்ளது.   குறிப்பாக, தொழிற்சாலை உபயோகம், உணவுப் பொருள்கள் மற்றும் மருத்துவப் பொருள்கள் உபயோகம் என்று சொல்லலாம்.  

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

மென்தா ஆயில் உற்பத்தி அளவு மற்றும் கையிருப்பு போன்றவையே அதன் விலையை நிர்ணயம் செய்கிறது. சமீபகாலமாக உத்தரப் பிரதேசத்தில் மென்தா ஆயில் உற்பத்தி அளவும், கையிருப்பும் கணிசமான அளவிற்குக் கூடி யிருப்பது, அதன் விலையை ஸ்பாட் மார்க்கெட்டில் வெகுவாகப் பாதித்துள்ளது.  அதன் அடிப்படையில் ஃப்யூச்சர்ஸ் மார்க்கெட்டிலும், ஒரு மாதத்திற்கும் அடுத்த மாதத்திற்கும்  மென்தா ஆயில் சீசன் மாறுவதும் ஒரு காரணமாக சொல்லலாம். எனவேதான், மென்தா ஆயில் அதிக விலை மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 

மென்தா ஆயில் ஒட்டுமொத்த நகர்வைப் பார்க்கும்போது, ஒரு இறக்குமுகமான திசையிலே இருந்து வருகிறது.  அவ்வப்போது வரும் ஏற்றங்கள் எல்லாமே, இறக்கத்தின் ஏற்றமாகவே இருந்து வருகிறது. ஸ்பெகுலேட்டர்கள் என்று  சொல்லப்படும் குறுகியகால வியாபாரிகள் சந்தையின் போக்கைக் கணித்து அந்தத் திசையில் அவ்வப்போது வியாபாரம் செய்வது நல்லது.

முந்தைய இதழில் சொன்னது...

‘’மென்தா ஆயில் தற்போது 1290 என்ற தடைநிலையையும், கீழே 1240  என்ற ஆதரவையும் கொண்டுள்ளது. இது எந்தப் பக்கம் உடைக்கிறதோ, அந்தப் பக்கம் பயணிக்கலாம்.’’ 

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

மென்தா ஆயில் முந்தைய வாரம் முடியும்போது நன்கு இறங்கி, அந்த இறக்கத்தில் இருந்து சற்றே மீண்டது.  கடந்த வாரம் மீண்ட விலையானது, பெரிய மாற்றம் இல்லாமல் பக்கவாட்டு நகர்வுக்கு மாறியது.  நாம் கொடுத்திருந்த ஆதரவு விலையான 1240 என்ற எல்லையைத் தக்கவைத்துக்கொண்டு மெள்ள ஏற ஆரம்பித்தது. சென்ற வாரம் திங்களன்று 1265 என்ற எல்லையில் இருந்து பலமாக ஏற ஆரம்பித்து, உச்சமாக 1288 என்ற எல்லையைத் தொட்டுக் கீழ் நோக்கித் திரும்ப ஆரம்பித்தது. ஏறக்குறைய நாம் கொடுத்திருந்த தடை நிலையான 1290 என்ற எல்லையைத் தாண்ட முடியாமல் இறங்கி, சந்தை முடியும்போது 1269 என்ற புள்ளியில் முடிவடைந்தது. 

செவ்வாயன்று மீண்டும் மெள்ள ஏற ஆரம்பித்து, முந்தைய நாளின் அதிகபட்ச விலையான 1288 தாண்டியதோடு மட்டும் அல்லாமல், நாம் முன்பு கொடுத்திருந்த முக்கியத் தடை நிலையான 1290-யை உடைத்து மேலே ஏறியது. இந்த ஏற்றம் உச்சமாக 1297 என்ற புள்ளியைத் தொட உதவியது.   

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

செவ்வாயன்று முடியும்போது 1283 என்ற ஒரு ஹயர் பாட்டத்தைத் தோற்று வித்தது. இது வலிமையான ஏற்றத்திற்கு வழிவகுக்கலாம் என்பதற்கான அடையாளத்தைக் காட்டியது.  ஆனாலும், அடுத்து புதன் மற்றும் வியாழன் அன்று முந்தைய நாளின் குறைந்தபட்ச விலை மற்றும் அதிகபட்ச விலைக்கு உள்ளாகவே சுழன்றது. ஆனால், வெள்ளியன்று வலிமையாக ஏறி, முந்தைய உச்சத்தை உடைத்து 1310 என்ற புதிய உச்சத்தைத் தோற்றுவித்து, முடிவில் 1300 என்ற புள்ளியில் முடிந்தது.

இனி என்ன செய்யலாம்? மென்தா ஆயில் படிப்படியாக ஏறிவரும் நிலையில், அடுத்து 1325 என்ற எல்லையில் வலிமையாகத் தடுக்கப்பட வாய்ப்புள்ளது.  அதை உடைத்தால் புதிய ஏற்றம் வரலாம்.  கீழே 1270 என்பது உடனடி ஆதரவாகும்.

காட்டன்

காட்டன் வியாபாரிகளுக்கு இது ஒரு நல்ல வாரமாகவே அமைந்துள்ளது. காட்டன் விலையானது, கீழே முக்கிய ஆதரவில் இருந்து மேலே தடைநிலை நோக்கி நகர்ந்துள்ளது.

காட்டன் சென்ற வாரத்தில், திங்களன்று வலிமை குன்றியே காணப் பட்டது. ஆனால், செவ்வாயன்று 20510 என்ற விலையில் இருந்து ஏற ஆரம்பித்து, 20920 என்கிற அதிகபட்ச விலையைத் தொட்டது. புதனன்று ஏற்றத்திற்கு முயன்று அதிகபட்சமாக 20920 என்ற புள்ளியையும், குறைந்தபட்சமாக 20710 என்ற புள்ளியையும் தொட்டு, 20850 என்ற விலையில் முடிந்து ஒரு ஸ்பின்னிங் டாப்பை உருவாக்கி உள்ளது. இது ஒரு நிச்சயமற்ற தன்மையைக் காட்டுகிறது. வியாழன் மற்றும் வெள்ளியன்று குறுகிய எல்லைக்குள் முடிந்தது.

இனி என்ன செய்யலாம்? காட்டன் இன்னும் ஒரு குறுகிய எல்லைக்குள் சுழல்வதாகவே எடுத்துக்கொள்ளலாம். மேலே 21100 இன்னும் வலிமையான தடைநிலை ஆகும். கீழே 20280 என்பது முக்கிய ஆதரவு ஆகும்.