நடப்பு
தொடர்கள்
Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
News
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தி.ரா.அருள்ராஜன், தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in

தங்கம் (மினி)

ங்கம் தற்போது இறக்கத்தில் இருந்துகொண்டு இருக்கிறது. இந்த இறக்கத்தில், அவ்வப்போது ஒரு புல்பேக் ரேலி வந்துகொண்டுதான் இருக்கிறது.  கடந்த இதழில் சொன்னதாவது... 

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

“தங்கம் தற்போது ஒரு மிக முக்கிய கட்டத்தில் உள்ளது. நாம் கொடுத்திருந்த 31157 என்ற ஆதரவைத் தற்போது தடைநிலையாக மாற்றிக் கொண்டு இருப்பதுபோல் உள்ளது. இனி கீழே 31040-யை உடைத்தால் இறக்கம் வலிமையானதாக இருக்கலாம். மேலே 31350 என்பது உடனடித் தடைநிலை ஆகும்.’’

தங்கம், சென்ற வாரம் கொடுத்திருந்தபடியே 31157 என்ற எல்லை வலிமையான தடைநிலையாக மாறியுள்ளது. நாம் ஏற்கெனவே நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 31040-யையும் உடைத்து இறங்கியுள்ளது.  

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்சென்ற வாரம் திங்களன்று மிக வலிமையான இறக்கத்தைக் கண்டது.  திங்களன்று 31160 என்ற எல்லையில் துவங்கி, அதன்பிறகு தொடர்ந்து இறங்கி 30928 என்ற எல்லையைத் தொட்டது.   செவ்வாயன்று இன்னும் இறங்கி 30850 என்ற எல்லைவரை இறங்கியது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கெனவே நாம் கொடுத்திருந்த ஆதரவான 31040-யை உடைத்து 30850வரை இறங்கியது.  இந்த இறக்கத்திற்குப்பிறகு, தங்கம் பக்கவாட்டு நகர்வுக்கு மாறியது.  இந்த நகர்வை ஒரு புல்பேக் ரேலி என்றும் சொல்லலாம். புதனன்று ஒரு ஸ்பின்னிங் டாப் உருவமைப்பு தோன்றி, இறக்கத்தைத் தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. அதன்பின் வியாழனன்று தங்கம் ஒரு நல்ல ஏற்றத்தைக் கண்டது. இந்த ஏற்றத்தில் உச்சமாக 31125 என்ற புள்ளியைத் தொட்டு தொடர்ந்து ஏறமுடியாமல் 31033 என்ற புள்ளியில் முடிவடைந்துள்ளது. எனவே, இன்னும் 31157 என்ற எல்லை முக்கியத் தடைநிலையாக இருப்பதையே இது காட்டுகிறது. 

இனி என்ன நடக்கலாம்? தங்கம் பக்கவாட்டு நகர்வில் இருப்பதால், மேலே 31157 என்பதை தடைநிலையாகவும், கீழே 30850 என்ற எல்லையை ஆதரவாகவும் கொண்டு இயங்கி வருகிறது. 

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

வெள்ளி (மினி)

சென்ற வாரம் தங்கம் இறங்கும்போது, வெள்ளி அதைவிட வேகமாக இறங்கியது. தங்கம் ஏறிய போது, வெள்ளி அதைவிட வேகமாக ஏறியது. இந்த நிலை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சென்ற இதழில் சொன்னது:

‘‘வெள்ளியின் தற்போதைய முக்கிய ஆதரவு எல்லை 39650 ஆகும். மேலே 40350 என்ற எல்லையைத் தடைநிலையாகக் கொண்டுள்ளது.  எந்தப் பக்கம் உடைக்கிறதோ, அந்தப் பக்கம் பயணிக்கலாம்.’’

சென்ற வாரம் தங்கம் முக்கிய ஆதரவான 39650-யை உடைத்து நன்கு இறங்கி 38432 என்ற எல்லையைத் தொட்டது.  சென்ற வாரம் திங்களன்று தங்கம் வலிமையாக இறங்கியபோது, வெள்ளியும் வலிமையாக இறங்கி, 38979 என்ற குறைந்தபட்ச புள்ளியை தொட்டது. அடுத்து செவ்வாயன்று, வெள்ளி வலிமையாக இறங்கி 38432 என்ற எல்லையைத் தொட்டது.  புதன் மற்றும் வியாழனன்று வெள்ளி வலிமையாக ஏறத் துவங்கி, வியாழனன்று உச்சமாக 39695 என்ற எல்லையைத் தொட்டது. தங்கம் பக்கவாட்டு நகர்வில் இருக்க, வெள்ளி வலிமையான புல்ரேலியில் இருந்தது. 

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

இனி என்ன நடக்கலாம்? வெள்ளி வலிமையான ஏற்றத்திற்குப் பிறகு, 39780 என்ற எல்லையில் வலிமையாகத் தடுக்கப்பட்டு வந்தது. இனி  இதை உடைத்தால் நன்கு ஏறலாம். இதன் உடனடி ஆதரவு 39050 ஆகும். 

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கச்சா எண்ணெய் (மினி)

கச்சா எண்ணெய் விலைப் போக்கு குறித்து நாம் சென்ற வாரம் சொன்னது…

‘‘குரூட்ஆயில் தற்போது 4450 என்ற எல்லையை வலுவான ஆதரவாகக் கொண்டுள்ளது.  இதனை உடைத்தால் பெரிய இறக்கங்கள் வரலாம்.  மேலே 4620 என்பதும் பலமான தடைநிலை ஆகும்.’’

கச்சா எண்ணெய்க்கு, முந்தைய வாரம் நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லைக்கும், தடைநிலைக்கும் இடையேதான் சுழன்று வந்தது.  சென்ற வாரம் திங்களன்று கச்சா எண்ணெய் அதிகபட்சமாக 4611 என்ற எல்லையையும், குறைந்தபட்சமாக 4473 என்ற எல்லையையும் தொட்டது. அதன்பின் வாரம் முழுவதும் இந்த இரண்டு எல்லைகளுக்கு இடையே சுழன்று வருகிறது. 

இனி என்ன நடக்கலாம்?

கச்சா எண்ணெய் டிஸ்ட்ரிபியூஷன் மோடில் உள்ளது.  அதாவது, காளைகள் மெள்ள மெள்ள வெளியே வருகிறார்கள். எனவே ஆதரவு எல்லை யான4450 உடைத்தால் நன்கு இறங்கலாம். மேலே 4620 இன்னும் வலுவான தடைநிலை ஆகும்.