நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

இண்டெக்ஸ்

தொடர்ந்து ஐந்து வாரங்களாகச் சந்தைப் புள்ளிகள் உயர்ந்துமுடிந்த நிலையில், இந்த வாரம் சந்தைகள் இறக்கத்தில் முடிந்துள்ளன.     

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

வாரத்தின் கடைசி மூன்று வர்த்தக தினங்கள் இறக்கத்தில் இருந்தன. இது, பல்வேறு பங்குகளில் பிராஃபிட் புக்கிங் நடந்திருப்பதையே நமக்குச் சொல்கிறது. அந்த வகையில், நிஃப்டியின் போக்கு குறுகிய காலத்தில் கரடியின் பிடியில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!



முடிந்த வாரத்தில் பேங்க் நிஃப்டி-யின் போக்கு வித்தியாசமாக இருந்தது. ஏறிய விலையை வங்கிப் பங்குகள் தக்கவைத்துக் கொண்டுள்ளன. கடைசி மூன்று வர்த்தக தினங்களில் வங்கிப் பங்குகள் அதிக எண்ணிக்கையில் விற்கப்பட வில்லை. இது முதலீட்டாளர்களுக்கு ஆச்சர்யத்தையே அளித்தது.

தனியார் வங்கிகளின் காலாண்டு முடிவுகள் கலவையாக வந்தன.   பொதுத்துறை வங்கிகளின் நிதி நிலை முடிவுகள் சரியில்லை என்றாலும், வங்கிப் பங்குகளின் விலை பெரிதாக இறக்கம் காணவில்லை.

காரணம், பலரும் வங்கிப் பங்கு களில் மீண்டும் முதலீடு செய்ய ஆரம்பித்திருப்பதுதான். இது நிஃப்டி குறியீட்டுக்குச் சாதகமான செய்தி ஆகும். அந்தக் குறியீடு அதிகம் இறங்காததற்கு இதுவும் முக்கியக் காரணமாகும்.  

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

சந்தையின் இறக்கத்துக்கு காரணமாக ஐ.டி நிறுவனங்கள் இருந்தன. மிட் கேப் ஐ.டி நிறுவனப் பங்குகள் விலை இறக்கத்தைச் சந்தித்தன. முன்னணி ஐ.டி நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள், முதலீடு செய்யத் தூண்டுவதாக இல்லை.  மிட்  மற்றும் ஸ்மால் கேப்  பங்குகள் விலை இறக்கத்தால் அவற்றின் குறியீட்டுப் புள்ளிகளும் இறக்கத்தில் இருந்தன. 

நடப்பு வாரத்தில், நிஃப்டி புள்ளிகள் அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் இருக்கும் அல்லது இறக்கத்தைச் சந்திக்கக்கூடும் என்று எதிர்பார்க்கலாம். நிஃப்டியின் குறைந்தபட்ச சப்போர்ட் 10550 ஆகவும், பேங்க் நிஃப்டியின் குறைந்தபட்ச சப்போர்ட் 24800 ஆகவும் உள்ளன. 

கார்ப்பரேட் நிறுவனங்களின் வலிமையான காலாண்டு நிதிநிலை முடிவுகள் மற்றும் சந்தைக்குச் சாதகமான செய்திகள் ஏதாவது வரவில்லை என்றால், குறியீடுகள் ஏற்றம் காண்பது கடினம் என்பதை மறக்கக்கூடாது.  

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

குஜராத் நர்மதா வேலி ஃபெர்டிலைசர்ஸ் & கெமிக்கல்ஸ் (GNFC)

தற்போதைய விலை: ரூ.468.40

வாங்கலாம்


சமீப காலமாக உரம் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகளுக்கு வலுவான ஆதரவு உள்ளது. எனவே, இவற்றில் பல நிறுவனங்களின் பங்குகள் நல்ல நிலையில் உள்ளன. ஜி.என்.எஃப்.சி நிறுவனப் பங்கின் சார்ட்டில் நல்ல போக்கு காட்டுகிறது.  இதன் பங்கின் விலையில் 38% ரீடிரேஸ்மென்ட் நடந்துள்ளது.

பங்கின் விலை இறக்கம்  முடிவடைந்து கடந்த மாதத்திலிருந்து விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது தொடரக்கூடும்.

இந்தப் பங்கினைத் தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.455 வைத்துக்கொள்ளலாம். பங்கின் விலை ரூ.510 வரை உயர வாய்ப்புள்ளது.  

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

அட்வான்ஸ்டு என்சைம் டெக்னாலஜிஸ் (ADVENZYMES )

தற்போதைய விலை: ரூ.242.65

வாங்கலாம்


கடந்த ஓராண்டு காலமாக இந்தப் பங்கின் விலை 50 சதவிகிதத்திற்கும் அதிகமாகக் குறைந்துபோனது. இந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் சரியில்லாமல் போனதே இதற்குக் காரணம். ரூ.205-க்கு இறங்கி, பின்னர் இந்தப் பங்கின் விலை ஏற்றம் காணத் தொடங்கியது.

தற்போது, இறங்கியதிலிருந்து மேலேறி உள்ளது.  விலை தொடர்ந்து மேலேற, சற்று காலம் பிடிக்கும்.

இந்தப் பங்கில் தற்போதைய விலையில் முதலீடு செய்யலாம்.  ஸ்டாப்லாஸ் ரூ.235-க்குக் கீழே வைத்துக்கொள்ளவும். குறுகிய கால விலை இலக்கு விலை ரூ.300.  

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

அஸ்ட்ரான் பேப்பர் & போர்ட் மில் (ASTRON)

தற்போதைய விலை: ரூ.135.90

வாங்கலாம்


கடந்த இரண்டு ஆண்டுகளாக காகித நிறுவனப் பங்குகள் நல்ல நிலையில் உள்ளன. சமீபத்திய காலாண்டு பங்கு விலை விவரங்கள், காகித நிறுவனங்கள் நல்ல நிலையில் தொடர்வதையும், இன்னும் சற்று முன்னேறும் என்பதையும் காட்டுகின்றன.

ஆஸ்ட்ரான் நிறுவனம் சமீபத்தில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. அதன் தினசரி சார்ட்டில் நல்லதொரு பேட்டர்ன் உருவாக்கியுள்ளது. இந்த நிறுவனம் சார்ந்த டேட்டாக்கள் குறைவாக இருந்தாலும், இதன் பங்குகளை டெக்னிக்கலாகக் கணித்ததில், நேர்த்தியான பேட்டர்ன், மேல்நோக்கிய பிரேக்அவுட் போன்றவற்றால் பங்கின் விலை இன்னும் உயரக்கூடும்.

இந்தப் பங்கைத் தற்போதைய விலையில் வாங்கலாம். குறுகிய கால இலக்கு ரூ.175. ஸ்டாப்லாஸ் ரூ.135 வைத்துக் கொள்ளவும். 

தொகுப்பு: தெ.சு.கவுதமன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.