
இண்டோஸ்டார் கேப்பிட்டல் ஃபைனான்ஸ் ஐ.பி.ஓ... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

* இண்டோஸ்டார் கேப்பிட்டல் ஃபைனான்ஸ் (Indo Star Capital Finance Ltd) நிறுவனம் ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்றுச் செயல்படுகிற வங்கி சாராத நிதி நிறுவனம் ஆகும்.
* இந்த நிறுவனம் கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தெற்காசிய நிறுவனமான எவர்ஸ்டோன் குரூப் இந்த நிறுவனத்தின் புரமோட்டர் நிறுவனமாகும்.
* இந்த நிறுவனம், தற்போது முதல்முறையாகப் பொதுமக்களுக்குப் பங்குளை வெளியிட்டு, பங்குச் சந்தையில் களமிறங்க உள்ளது. இந்தப் பங்கு வெளியீட்டின் மூலம் இந்த நிறுவனம் ரூ.1,840 கோடியைத் திரட்டத் திட்டமிட்டுள்ளது.
* இந்த நிறுவனம் தனது நூறாவது கிளையை ஏப்ரல் 6, 2018-ல் குஜராத் மாநிலம் வதோதராவில் தொடங்கியது.
* ரூ.10 முகமதிப்பு கொண்ட ஒரு பங்கின் விலை ரூ570 முதல் ரூ.572 வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 26 பங்குகளை இந்த ஐ.பி.ஓ-வில் வாங்க வேண்டும்.
* இந்தப் பங்கு வெளியீட்டின் மூலம் இந்த நிறுவனம் மொத்த 3.22 கோடி பங்குகளுக்கு மேல் வெளியிடவுள்ளது. பங்கு வெளியீட்டுக்குப்பின் இந்த நிறுவனத்தின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் ரூ.5,197 கோடியாக இருக்கும்.
* இந்த நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம் 2014-ல் ரூ.112 கோடியாக இருந்தது. இந்த லாபம் 2017-ல் ரூ.210 கோடியாக உயர்ந்துள்ளது.
* கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கடன், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான தொழில் கடன், வாகனக் கடன், வீட்டுக் கடன் என நான்கு முக்கியமான கடன்களை வழங்குகிறது இந்த நிறுவனம். இதன் துணை நிறுவனமான இண்டோஸ்டார் ேஹாம் ஃபைனான்ஸ் மூலம் வீட்டுக் கடன் வழங்குகிறது.
* இந்த ஐ.பி.ஓ வரும் 9-ம் தேதி தொடங்கி, 11-ம் தேதி நிறைவடைகிறது. வரும் 8-ம் தேதி தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்குப் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
* மே மாதம் 21-ம் தேதி முதல் இந்தப் பங்கானது பங்குச் சந்தைகளில் வர்த்தகமாகத் தொடங்கும்.
- கே.எஸ்.தியாகராஜன்