மற்ற எபிசோடுகள்
Published:Updated:

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - வெல்கம் ஸ்டார்ட்அப்... சிவப்புக் கம்பளம் விரிக்கும் தமிழகம்!

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - வெல்கம் ஸ்டார்ட்அப்... சிவப்புக் கம்பளம் விரிக்கும் தமிழகம்!
பிரீமியம் ஸ்டோரி
News
டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - வெல்கம் ஸ்டார்ட்அப்... சிவப்புக் கம்பளம் விரிக்கும் தமிழகம்!

சூப்பர் ஸ்டார்ட்அப்களின் தொழில் ஜாதகம்! - 21

ந்தியாவிலேயே ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்க சிறந்த இடமாக டெல்லி இருக்கிறது. அதற்கடுத்து பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்கள் இருக்கின்றன. இவற்றிற்கு அடுத்த இடம்தான் சென்னைக்கு. நிஜத்தில், புதிய ஸ்டார்ட்அப்கள் தொடங்கு பவர்களுக்கு சென்னை ஏற்ற இடம்தானா? அதற்கான சாதகமான சூழல் இங்கே நிலவுகிறதா? இந்தக் கேள்வியை TIE சென்னை அமைப்பின் நிர்வாக இயக்குநர் அகிலா ராஜேஷ்வரிடம் கேட்டோம்.

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - வெல்கம் ஸ்டார்ட்அப்... சிவப்புக் கம்பளம் விரிக்கும் தமிழகம்!

ஸ்டார்ட்அப்களின் தலைநகரம்

“தமிழ்நாட்டின் ஸ்டார்ட்அப்களைப் பொறுத்தவரை, பல்வேறு நகரங்கள் இருந்தாலும் சென்னைதான் அவற்றின் தலைநகரம். மாநிலத்தின் தலைநகரம் என்பதும், உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் இங்கே அதிகமாக இருப்பதும்தான் அதற்கு முக்கியக் காரணம். இதுதவிர கோயம்புத்தூர், மதுரை, திருச்சி ஆகிய நகரங்களிலும் ஸ்டார்ட்அப்கள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு நகரத்திலும் வெவ்வேறு மாதிரியான நிறுவனங்கள் இயங்குகின்றன.

சென்னையைப் பொறுத்தவரை,  டெக்னாலஜி நிறுவனங்கள்தான் அதிகம். இங்கே இருக்கும் ஸ்டார்ட்அப்களில் 20 சதவிகிதத்திற்கும் மேலானவை முழு டெக்னாலஜி ஸ்டார்ட்அப்கள். அதிலும் மென்பொருள் துறையில் சென்னை முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்தியாவிலேயே SaaS வகை மென்பொருள்கள் சார்ந்த சேவைகளுக்கு சென்னைதான் தலைநகரம்.

இவை தவிர ஹெல்த்கேர், நிதி சார்ந்த சேவைகளை வழங்கும் Fin tech ஸ்டார்ட்அப்கள் போன்றவை சென்னையில் அதிகம். மத்திய அரசின் Fin tech ஸ்டார்ட்அப்களுக்கான சிறப்பு மையமும்கூட (Centre of Excellence)  சென்னையில் தான் அமையவிருக்கிறது.    

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - வெல்கம் ஸ்டார்ட்அப்... சிவப்புக் கம்பளம் விரிக்கும் தமிழகம்!

இதேபோல, கோவையில் இன்ஜினீயரிங் சார்ந்த ஸ்டார்ட்அப்கள் அதிகம். உணவகங்கள், நகைகள், உலோகங்கள் ஆகியவை சார்ந்து இயங்கும் ஸ்டார்ட்அப்களும் அதிகளவில் இருக்கின்றன.

மதுரை, திருச்சி ஆகிய நகரங் களில் விவசாயம் சார்ந்த ஸ்டார்ட்அப்களும் அதிகரித்துவரு கின்றன. சென்னையில் இயங்கும் பெரிய ஸ்டார்ட்அப் நிறுவனங் களின் ஃப்ரான்சைஸ்கள் பலவும் இந்த இரண்டாம்கட்ட நகரங் களில் வெற்றிகரமாக இயங்கி   வருகின்றன. 

என்ன வேண்டும்?

ஒரு நகரத்தில் ஸ்டார்ட்அப்கள் வெற்றிகரமாக இயங்க வேண்டு மென்றால், அதற்கேற்ற சூழல் அங்கே இருக்கவேண்டும். அந்த வகையில் சென்னை, பல விஷயங் களில் முன்னணியில் இருக்கிறது. இன்றைய ஸ்டார்ட்அப்கள் அனைத்துமே தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டதுதான். இங்கே இருக்கும் டெக் ஸ்டார்ட் அப், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவும் உலகளவில் சிறப்பாக இயங்கிவருபவை. 

விவசாயம், ஆட்டோமொபைல், மருத்துவம், உணவுப்பொருள்கள், உற்பத்தித் துறை என சென்னையைச் சார்ந்து நிறையப் பெருநிறுவனங்கள் இங்கே இயங்கி வருவதால், அவற்றின் பிரச்னை களைத் தீர்க்கும் வாய்ப்பும் இந்த ஸ்டார்ட்அப்களைத் தேடி வருகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரைக்கும், ஸ்டார்ட்அப்களை நம்பி ஆர்டர்கள் தர நிறைய நிறுவனங்கள் தயங்கின. ஆனால், இன்று அவை ஸ்டார்ட்அப்களை முழுமையாக நம்புகின்றன. மிகக் குறைவான செலவிலும், சரியான நேரத்திலும் பணிகள் நிறைவடைவ தால் முன்னணி பெரு நிறுவனங்கள் ஸ்டார்ட்அப்களுக்கு முன்னுரிமையும் தருகின்றன.

ஸ்டார்ட்அப்கள் தனது ஆரம்பக் காலத்தில் சந்திக்கும் முக்கியமான பிரச்னை முதலீடு. சரியான நேரத்தில் முதலீடு கிடைப்பதும், சரியான அளவில் கிடைப்பதும் ஒரு ஸ்டார்ட் அப்பிற்கு மிகவும் முக்கியம். ஆரம்பத்தில் ஸ்டார்ட்அப்களுக்கு முதலீடு வழங்கும் ஏஞ்சல் முதலீட்டாளர்கள் வெகு சிலரே இருந்தனர். இன்று அந்த நிலைமையும் மாறிவிட்டது. தவிர, வங்கிகளும் ஸ்டார்ட்அப்களுக்கு கடன் வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. NEEDS (New Entrepreneur - Cum - Enterprise  Development Scheme) என்ற திட்டத்தின் மூலம் அரசும் பலவிதமான சலுகைகளை வழங்கி வருகிறது. எனவே, முதலீடு என்றாலே சொந்தப் பணம் அல்லது வங்கிக் கடன்தான் என்ற நிலை எல்லாம் தற்போதில்லை. 

ஐடியா டு பிசினஸ்

பெரும்பாலான மாணவர்கள் தங்களின் கல்லூரிக் காலத்திலேயே ஐடியாக்களை உருவாக்கிவிடுவார்கள். ஆனால், அதனை எப்படி ஒரு பிசினஸாக மாற்றுவது குறித்து முழுமையாகத் தெரியாது. ஒன்று, அந்த ஐடியாவை மட்டும் வைத்துக்கொண்டு முதலீட்டைத் திரட்ட நினைப்பார்கள். அல்லது, சொந்தப் பணத்தைச் செலவு செய்து நிறுவனத்தைத் தொடங்குவார்கள். இந்த இரண்டுமே தவறு. ஒருவரது ஐடியா எவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும், அது பிசினஸாக மாறும்போது அது வெற்றியடையுமா எனப் பார்க்க வேண்டும். இதற்காக சந்தையைப் புரிந்துகொள்வது, ஐடியாவின் மாதிரிகளைத் தயார் செய்வது, நிறுவனத்தைத் தொடங்கினால் அதன் இலக்குகளை நிர்ணயிப்பது, வாடிக்கையாளர்களை அடையாளம் காண்பது போன்ற விஷயங்களைச் செய்யவேண்டும்.

இதுகுறித்து ஆலோசனைகள் வழங்கவும், வழிநடத்தவும் இன்குபேட்டர்கள் உதவியாக இருக்கும். அவர்களிடம் உங்களின் ஐடியாக்களைக் கொண்டுசெல்லலாம். அதனை எப்படி அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்வது என்பது குறித்து அவர்கள் விளக்கு வார்கள். இதேபோல, ஸ்டார்ட்அப்களின் தொடக்கக் காலத்தில் ஆலோசனை வழங்குவதற்கான ஆலோசகர்களும் இங்கே இருக்கின்றனர். ஸ்டார்ட்அப்களில் தொடர்ந்து இயங்கி வருபவர்கள் இதில் நிறைய ஆர்வம் காட்டுகின்றனர். இவற்றையெல்லாம் தாண்டி, ஒரு ஸ்டார்ட் அப்பை தொடங்கிவிட்டாலும், அதனைத் தொடர்ந்து நடத்துவதற்கு ஆலோசகர்களின் உதவியும், துறைசார் நிபுணர்களின் உதவியும் தேவை. இவர்களுக்கும் சென்னையில் பஞ்சமில்லை. மேலும், இங்கேயே நிறைய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இருப்பதால், பிற நிறுவனங்களின் அனுபவங்களைத் தெரிந்துகொள்ளவும், உதவிகள் பெறுவதும் எளிது.

சுயதொழில்முனைவர்களுக்கு உதவுவதற்காக TiE சென்னை போன்ற அமைப்புகளும் இருக்கின்றன. புதிதாக ஸ்டார்ட்அப்கள் தொடங்குபவர்களுக்காக எங்கள் அமைப்பிலேயே நிறைய நிகழ்ச்சிகள் நடத்தி, முதலீடு தொடர்பான ஆலோசனைகளும் வழங்குகிறோம். எனவே, புதிய சுயதொழில்முனைவர்கள் யார் வேண்டுமானாலும் TiE-யுடன் இணைந்து செயல்படலாம்.

தோல்வியைத் தவிர்க்க என்ன செய்யலாம்?

சென்னையில் இயங்கும் வெற்றிகரமான ஸ்டார்ட்அப் நிறுவனங் களின் எண்ணிக்கை போலவே, இங்கே தோல்வியடைந்த நிறுவனங்களும் இருக்கின்றன. அதற்குக் காரணம், ஸ்டார்ட்அப்கள் குறித்து முழுமையாக அறிந்துகொள்ளாமல் பிசினஸில் இறங்குவதுதான். பிசினஸ் மீதான அதீத ஆர்வம், ஐடியாவின் தனித்துவம் மற்றும் வணிக வாய்ப்பு, நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்துவதற்கான திட்டங்கள் போன்ற அனைத்தும்தான் ஒரு நிறுவனத்தை வெற்றியடையச் செய்யும். சாதாரண பிசினஸ்கள் போலவே, ஸ்டார்ட்அப்களுக்கும் முழுமையாகப் பொருந்தும். இந்த முன்னேற்பாடுகளுடனும், தகுதிகளுடனும் ஒருவர் பிசினஸில் இறங்கினால் அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கத் தமிழகமும், சென்னையும் தயார்” என்கிறார் அகிலா ராஜேஷ்வர். ஆடுகளம் ரெடி... ஆட நீங்க ரெடியா?

-ஞா.சுதாகர்,

படங்கள் : ப.பிரியங்கா

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - வெல்கம் ஸ்டார்ட்அப்... சிவப்புக் கம்பளம் விரிக்கும் தமிழகம்!

ஸ்டார்ட்அப்... வெளிநாட்டு முதலீடு 100% உயர்வு!

ந்திய ஸ்டார்ட்அப் கம்பெனிகளில் வெளி நாட்டு நிறுவனங்கள் செய்த முதலீடு ஒரே ஆண் டில் நூறு சத விகிதத்துக்கு மேலாக அதிகரித்திருக் கிறது. வெளிநாட்டு நிறு வனங்கள் கடந்த 2016-ம் ஆண்டில் 8,497 மில்லியன் டாலரை இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்தன. இது, 2017-ல் 16,728 மில்லியன் டாலராக உயர்ந்ததாக வென்சர் இன்டெலிஜென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2016-ம் ஆண்டில் 148 நிறுவனங் களில் மட்டுமே வென்சர் கேப்பிட்டல் நிறு வனங்கள் முதலீடு செய்தன. இதுவே, 2017-ல் 175 நிறுவனங்களாக உயர்ந்துள்ளன. இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வேகமான வளர்ச்சியைக் கண்டுவருகின்றன என் பதற்கு இதுவே நல்லதொரு சாட்சி எனலாம்.