
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... நாகர்கோவிலில் பெருகிவரும் விழிப்பு உணர்வு!
இயற்கை எழில்சூழ்ந்த நாகர்கோவி லில் கடந்த சில ஆண்டுகளாகவே மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த விழிப்பு உணர்வு வேகமாக அதிகரித்து வருகிறது. நாணயம் விகடனும், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இணைந்து நாகர்கோவிலில் அண்மையில் நடத்திய மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு விழிப்பு உணர்வுக் கூட்டத்தில் நன்றாகவே பார்க்க முடிந்தது.

இந்தக் கூட்டத்தில் முதலில் பேசினார் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் கேரளா பிராந்தியத்தின் தலைவர் ஹரீஷ், ‘‘2000-ம் ஆண்டில் ரூ.10-ஆக இருந்த ஒரு பொருளின் விலை, 2030-ல் ரூ.40-ஆக உயரும். வெறும் 4.5% விலைவாசி உயர்வு என்கிற அடிப்படையில் கணக்கிட்டாலே, பொருளின் விலை இவ்வளவு தூரம் உயர்கிறது எனில், 6-7% விலைவாசி உயர்வை எப்படி சமாளிக்கப் போகிறோம்? பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் பெற நினைப்பவர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுதான் பெஸ்ட்’’ என்று முடித்தார்.

அடுத்து பேசிய மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு நிபுணர் சொக்கலிங்கம் பழனியப்பன், ‘‘பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய விரும்பாத வர்கள் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு வெளிப்படையானது, பாதுகாப்பானது, எப்போது வேண்டுமானாலும் பணத்தைத் திரும்ப எடுக்க முடிவதுடன், வரிச் சலுகையும் கிடைக்கும்’’ என்றார். இந்தக் கூட்டத்தின் இறுதியில் முதலீட்டாளர்கள் தங்கள் சந்தேகங்களை நிபுணர் களிடம் கேட்டுத் தெளிவு பெற்றனர்.
- ஆகாஷ்
படங்கள்: ரா. ராம்குமார்